இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 8 November, 2010

அப்பாடா ஒரு பதிவு தேத்திட்டேன்...

சென்னையில் என்னுடன் பணிபுரிந்து தற்சமயம் ஓஸ்ட்ரேலியாவில் பணிபுரிகிற அண்ணன் ஒருவர் எனது பதிவுகளை மிகவும் ரசித்துப் படிக்கிறவர். குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.

கடைசியா எழுதுன ரத்த சரித்திரம் பதிவைப் பாத்துட்டு வயலன்ஸ் கம்மி பண்ண சொல்லி அறிவுரை சொல்லிருந்தார். ஏன் ரொம்ப நாளா எழுதலைன்னும் கேட்டார்? அடுத்த பதிவு இன்னும் அஞ்சு நாளைக்குள்ள வரனும்னு டெட்லைன் வேற குடுத்துட்டார். டெட்லைண் குடுத்தா அப்படியே எழுதிக் கிழிச்சுட்டு தானே நாம வேற வேலை பாப்போம். குடுத்து இன்னையோட பதிமூணு நாளாச்சு. மதிச்சு போனெல்லாம் பண்ணிருக்காரே அதுக்காச்சும் எழுதனுமேன்னு யோசிச்சப்பவே ரொம்ப மலைப்பா இருந்துச்சு.

எத எழுதலாம், என்னத்த எழுதலாம்னு போய் டிவி யப் போட்டா மன்மோகன் சிங் மரப மீறி ஒபாமாவ விமான நிலையத்துக்கே போய் வரவேற்றார்னு செய்தியில காமிக்கிறாங்க. காட்சிய திடீர்னு பாத்தப்போ பிரதமர் பட்டுப் பொடவை சைசுல ஒரு கோமணத்த இடுப்புல கட்டிக்கிட்டு இடுப்புள்ள உள்ளது போக மீதிய தரையில விரிச்சு வச்சு அதுல ஒபாமா ந்டந்து வற்றா மாதிரியே இருந்துச்சு.

ஏதுடா இறையாண்மைக்கு வந்த சோதனைன்னு தேடி எடுத்துக் கண்ணாடிய மாட்டுன அப்புறந்தான் தெரிஞ்சுது அது செவப்புக் கம்பளமாமாம். இதில்லாம திருமதி சிங் ஒபாமாவுக்கு முத்தம் வேற குடுத்தாங்க. ஒபாமா தம்பதியர் போட்ட மினி குத்து டான்சையும் காட்டுனாங்க.

மழை நேரத்துல ஈரக் கையால சுச்சு போர்ட தொடக் கூடாதுன்னு டிவில சொன்னாங்க. சரி சமூக அக்கறையோட இதை சென்னையில இருக்கற நண்பர்களுக்கெல்லாம் சொல்லுவோம்னு ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணுனப்போ நண்பர் மதிமாறன் ஞாபகம் வந்துச்சு. அவரோட பேசி ரொம்ப நாளாச்சேன்னு அடுத்து அவருக்கு அழுத்துனேன். கொஞ்ச நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பொதுவான விஷயங்களப் பேசும் போது சொன்னாரு “சென்னை நம்ம சென்னை” ங்கற பத்திரிகைல உங்களோட கட்டுரை அச்சாகிருந்துச்சு. ஒருத்தரச் சந்திக்கப் போனப்போ வரவேற்பரையில அந்த புத்தகம் இருந்துச்சு. அப்பத்தான் படிச்சேன்னு சொன்னாரு.

சரி தேடித்தான் பாப்போம்னு முயற்சி பண்ணுனா இந்த லிங்க் கிடைச்சுது. செப்டம்பர் மாத வெளியீட்டுல கட்டுரை சுருக்கப்பட்ட வடிவத்துல வந்திருந்துச்சு. அந்தக் கட்டுரையோட தொடுப்பு இது. கட்டுரையோட முழு வடிவம் இங்கே.ஒரு வழியா பிச்சுப் பீராஞ்சு ஒரு பதிவு தேத்திட்டேன். டெட்லைன மீட் பண்ணலைன்னாலும் டாஸ்க் கம்ப்ளீட்டாகிருச்சு. ஓஸ்ட்ரேலியா அண்ணே, கோவிக்காதிங்க. போய்ட்டு வற்றேன்.

4 மறுமொழிகள்:

Anonymous said...

கோபாலு... வாழ்த்துக்கள்...

- கீர்த்திவாசன்

லதானந்த் said...

கோவாலு!
கட்டுரைகள் அருமை. அது சரி. யாரந்த ஆஸ்திரேலியா அண்ணா?

jaisankar jaganathan said...

//குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.//

நான் கூடத்தான் பாராட்டுனேன். அது ஏன் ஞாபகம் வரலை.

jaisankar jaganathan said...

// குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.//

நான் கூட பாராட்டினேன் . அது ஏன் ஞாபகம் வரலை?

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan