இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Sunday 25 April, 2010

கேள்வியுடன் கொல்லான்...

நண்பர் கொல்லான் அவர்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் கொடுத்துள்ளேன். மூண்றாவது கேள்வியப் பாத்த பிறகு இவரு கொல்லானா கொலைவெறியானான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு.
நண்பர் கொல்லான் தனது வலைப்பூவில் புதிதாகக் கேள்வி பதில் தொடங்கியிருக்கிறார். அதுக்கு நான் தான் ஊக்கின்னு வேற சொல்லிருக்கறாரு. எத்தனை பாவத்துக்கு நான் ஆளாகறது சொல்லுங்க? அது பற்றி அறிவிப்புப் பதிவும் போட்டிருக்கிறார். இனி வருவது அவர் அனுப்பிய கேள்விகளும் என் பதில்களும்.


ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க?
இதுவும் “காக்கா காக்கான்னு கத்துறதால அதக் காக்கான்னு கூப்பிடுறாங்களா, இல்லை அதக் காக்கான்னு கூப்பிடுறதால அது காக்கான்னு கத்துதா”ங்கற மாதிரிதான். இருந்தாலும் உங்க கேள்விக்கு கொஞ்சம் சரியா பதில் சொல்ல முயற்சி பண்றேன்.

தற்கொலை பண்ணிக்கப் போறவன் கடைக்காரன்கிட்ட விஷம் கேக்கும்போது “நல்ல விஷமா குடுப்பா, குடிச்சோன்ன உயிர் போகற மாதிரி” அப்படீன்னு தானே கேப்பான். அதே போல கடிச்சோன்ன உயிர் போற மாதிரி ”நல்ல விஷம்” வச்சிருக்கறதால அது நல்ல பாம்பா இருக்குமோ என்னவோ. ஏன்ப்பா ஆப்பீசரக் கேக்க வேண்டிய கேள்விய என் கிட்டக் கேட்டு டர்ரக் கெளப்புறீங்க?

വിജയ ഗോപല്സാമി എന്ടര് പെയര്‍ വൈത്തതന്‍ കാരണം?
முதல் ரெண்டு வார்த்தை “விஜய் கோபால்சாமி” அது மட்டும் தான் புரியுது. எனக்கு பத்து பதினைஞ்சு பாஷை தெரியும்னு நீங்களா நெனைச்சுக்கிட்டா நான் என்ன பண்ணட்டும்? இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறீங்களே...

உங்க அப்பாவுக்கு நீங்க எத்தினையாவது பையன்?
What is your chronological rank among your father's children? இதுவா? 

புறா கால்ல கடுதாசி கட்டி அனுப்பி வெச்சா புறாவ என்ன பண்ணுவீங்க?
விஷயம் முக்கியமானதா இருந்தா வெக்கம் மானத்தையெல்லாம் விட்டுட்டுக் காலப் புடிக்க வேண்டியதுதான். நான் புறாக் காலைச் சொன்னேன்...

நீங்க பாமரனா இல்ல பண்டிதனா?
பாமரர்க்குப் பண்டிதன், பண்டிதர்க்குப் பாமரன். இதை நீங்க பண்டிதர் கிட்டயே சோதிச்சுக்கலாம்.

Monday 19 April, 2010

கேள்வியுடன் லதானந்த்...

1. அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
கிடைக்காமல் திண்டாடியதை விட கிடைத்துத் திண்டாடிய அனுபவம் சுவையானது. கதவு மேல எழுதிருக்கறதையாச்சும் படிச்சுட்டுப் போயிருக்கனும். இல்லையா எழுத்துக்கு மேல இருந்த படத்தையாவது பாத்துட்டுப் போயிருக்கனும். ரெண்டையுமே பண்ணாததால கடைசியா ப்ளம்பர்னு சொல்லித் தப்பிச்சேன்.

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
வெறுத்து ஒதுக்கியவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஓரளவு முன்னேறியிருக்கிறேன் என்றால் அது சில நண்பர்கள் மீதான பொறாமையினால்தான். நட்பும் தொடர வேண்டும் என்ற காரணத்தால் பதிலை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
எதிர்பார்த்தே எந்த அனுபவமும் கிடைக்கலை... எதிர்பாக்கலைன்னா மட்டும் கெடைச்சுடுமாக்கும்... :(

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
அந்த அனுபவத்தைத்தான் மொதல் கேள்விக்குப் பதிலா சொல்லிருக்கேன்.

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
மரித்துப் போனவர்களிடம் கேட்காமல்  விட்ட மன்னிப்புகள் சில.

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
அது கொஞ்சம் ஏடா கூடமான படம். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக இருட்டுக்குள் ஒளிந்து கொள்ள விரைந்த நேரம் டிக்கெட் கிழிப்பவன் என் முகத்தை உற்று நோக்கி “நீங்க... நீங்க...” என்று எதையோ யோசிக்கத் தொடங்கினான். “அடப் பாவி... நீ எங்க வீட்டுக்குத் தெரிஞ்சவனா?” என்று மனதுக்குள் பதறிய வேளையில் “போன வாரம் பழைய டிக்கெட்ட ப்ளாக்ல வாங்கி ஏமாந்தது நீங்கதானே” என்றான். போன உயிர் அப்போதுதான் திரும்பி வந்தது.

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
கூட்ட நெரிசல் தாளாமல் சாதாரண டிக்கெட்டுடன் முதல் வகுப்பில் (பரங்கிமலை - கிண்டி) பயணம் செய்ததுதான் நான் செய்ததில் ஆகப் பெரிய சட்ட மீறல், பரிசோதகரிடம் பிடிபடாமல். சொந்தமாக வீடோ நிலமோ இன்னும் வாங்காத காரணத்தால் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
வாதம் செய்பவர்களிடம் முகம் கொடுத்து விவாதிக்கலாம். விதண்டாவாதம் செய்வதற்கென்றே சிலர் எழுதுவார்கள். அவர்களிடம் அடையாளங்களை மறைத்துக் கொண்டுதான் விவாதிக்க நேரிடும். அனானி கமெண்ட் என்றாலும் தனிநபர் தாக்குதல்களற்று சரியான பதில்கள் அல்லது கேள்விகளுடன் பின்னூட்டியிருக்கிறேன். சாக்கடைகளுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல அவசியம் இல்லை.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
இரண்டையும் படிக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும் சாரு நிவேதிதா என்ற புண்ணியவான் அந்தக் குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்துள்ளார்.

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா? 
தாராளமா குடுக்கலாம். எனக்கு விளம்பரம்னா ரொம்ப பிடிக்கும்.

கொசுறு: கடந்த ஜி-டாக் உரையாடலில் காதுகுத்துக்கு வாரதமை குறித்து கேட்கவில்லை. காரணத்துடன் தான். ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு வாத்தியார் மாதிரி யாரையும் கேள்வி கேட்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. அதனாலேயே கேட்கவில்லை. மற்றபடி என் வீட்டு நிகழ்வைச் சாக்கிட்டு உங்கள் தமக்கையைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தீர்கள். அது முடியாமல் போன வகையில் எனக்கும் கொஞ்சம் வருத்தமே.

Tuesday 6 April, 2010

ச்சேட்...






விஜய்கோபால்சாமி: மச்சி எப்டிடா கீறே....

அப்பாவி ஆனந்து: சோக்கா கீறேண்டா மச்சி... நாம பேசியே ரொம்ப நாளாயிட்ச்சுரா...

விஜய்கோபால்சாமி: ஐபிஎம் பொண்ணக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணதுலேந்து நீ என்ன மதிக்கிறதே இல்லைடா...

அப்பாவி ஆனந்து: அப்டியெல்லாம் சொல்லாத மச்சி... மனசுக்கு சங்கடமா கீது...

விஜய்கோபால்சாமி: வேற எப்படி சொல்றதாம்...

அப்பாவி ஆனந்து: அத்த வுடு மச்சி, சானியாவுக்குக் கல்யாணமாமே... நீ ஐட்ராபட்ல இருந்துமா இப்படியெல்லாம் நடக்குது...

விஜய்கோபால்சாமி: என்ன என்னடா பண்ணச் சொல்றே?

அப்பாவி ஆனந்து: மொதோ எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனதே உன்னாலதான்னு நான் ரொம்ப பெருசா கற்பனையெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்? அப்போ நீயும் டம்மி பீசுதானா?

விஜய்கோபால்சாமி: அய்யோ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்திடுறானுங்களே...

அப்பாவி ஆனந்து: மச்சான்... உன்ன விட்டா ஐட்ராபாட்ல எனக்கு யாரடா தெரியும்...

விஜய்கோபால்சாமி: வேணாண்டா, இப்படி நாம ச்சேட் பண்றதே வில்லங்கமானாலும் ஆகிடும்டா...

அப்பாவி ஆனந்து: மச்சி... செவுரு, சீலிங்கு, எலிவேஷன் இப்படி பல ஐட்டங்கள் வெளியே தெரிஞ்சாலும், வெளியா தெரியாத பேஸ்மெண்ட் தான் மச்சி கட்டடத்துக்கு முக்கியம். நீ பேஸ்மெண்ட் மாதிரி மாமு... முடியாதுன்னு சொல்லாத... யூ கேன் டூ இட்டு...

விஜய்கோபால்சாமி: அள்ளிப் போடுடா... நல்லா ஒரு லாரி மண்ண அள்ளி என் தலைலயே போடு...

அப்பாவி ஆனந்து: இன்னா மச்சி, இதுக்கு போய் இவ்வளவு சலிச்சுக்குறே... நா சொல்ற மாதிரி பத்து பேருக்கு ஈமெயில் அனுப்பு, கல்யாணம் தன்னால நின்னுடும்.

விஜய்கோபால்சாமி: என்னன்னுடா அனுப்பனும்...

அப்பாவி ஆனந்து: மாலிக்குக்கு எதாவது குணப்படுத்த முடியாத வியாதின்னு சும்ம பத்து பேருக்கு மெயில் அனுப்பு. அனானிமசா பத்து பதினைச்சு ப்ளாகுல போய் இத கமெண்ட்டா போடு. முடிஞ்சா அனானிமசா ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணி இதையே ஒரு போஸ்டா போட்டுடு...

விஜய்கோபால்சாமி: குணப்படுத்த முடியாத வியாதீன்னு சொன்னியே, ப்ரெய்ன் ட்யூமர்னு போட்டுக்கட்டுமா...

அப்பாவி ஆனந்து: வாட் நான்சென்ஸ் மச்சான், வதந்தி பரப்புறதுல இதெல்லாம் என் தாத்தா காலத்து டெக்னிக்... திங்க் சம்திங் நியூ மேன்...

விஜய்கோபால்சாமி: நீயே அதுக்கும் ஒரு சஜசன் சொல்லுடா நண்பா... எனக்கு இப்பவே கை காலெல்லாம் நடுங்குது....

அப்பாவி ஆனந்து: போனா போவுது, அவனுக்கு எய்ட்ஸ்னு மெசேஜ் கம்போஸ் பண்ணு... நீ அனுப்புற மெயில் நாளைக்கு நாளைக்கு நாடு பூராவும் பத்திக்கிட்டு எரியனும்...

விஜய்கோபால்சாமி: மச்சான், நீ சொன்னதையெல்லாம் ஏன் நீயே செய்யக் கூடாது?

அப்பாவி ஆனந்து: என்னடா இப்படி சொல்லிட்டே... என்ன இருந்தாலும் நீ எழுதுற மாதிரி வருமா...

விஜய்கோபால்சாமி: ஆங்... நீ மட்டும் கலிஃபோர்னியாவுல, கே.எஃப்.சி.ல வாங்குன கோழிக் காலக் கடிச்சிக்கிட்டு குஜாலா இருப்பே... நாங்க சஞ்சல்குடா ஜெயில்ல விட்டத்த வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்திருக்கனும்... கோத்... 

அப்பாவி ஆனந்து: என்னடா அசிங்கமா பேசுற...

விஜய்கோபால்சாமி: கோத்து விடுறதுக்குன்னே கெளம்பி வற்றீங்களான்னு கேக்க வந்தேன்...

அப்பாவி ஆனந்து: மச்சான், உன்னப் போயி வீரன்னு நெனச்சேன் பாரு... நீ ஒரு டம்மி பீசுடா...

விஜய்கோபால்சாமி: நாங்க டம்மியாவே இருந்துக்குறோம்... நீ அம்மியா இருந்தா, இவ்வளவு நேரம் சொன்னதையெல்லாம் நீயே செய்யேன் பாப்போம்...

அப்பாவி ஆனந்து: திஸ் இஸ் டூ மச்டா... அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்க உனக்கு எப்படி மனசு வருது... கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு வேற அப்பாவாகிட்டே...

விஜய்கோபால்சாமி: டேய்... நிறுத்துடா....

அப்பாவி ஆனந்து: எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லி அட்சதையைப் போட்டுட்டு பிரியாணிய சாப்பிட்டுட்டுப் போவியா....

விஜய்கோபால்சாமி: டேய்... 

அப்பாவி ஆனந்து: மச்சி யூ ஆர் ஸ்டிங்கிங் லைக் எ லூ...

விஜய்கோபால்சாமி: [சென்சார்] [சென்சார்] [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்].

அப்பாவி ஆனந்து's status is offline and cannot receive any messages right now

[மனக்குரல்: பேச்சக் கொறை, பேச்சக் கொறை]

Monday 5 April, 2010

விஜய்கோபால்சாமி பதில்கள் - 1

[சில பேர் கேள்வி பதில் எழுதுறதப் பாத்து, எனக்கும் பதிவர்களின் கேள்விக்குப் பதில் எழுதனும்னு கொலை வெறியாகிப் போச்சு. அதன் விளைவுதான் நீங்க படிக்கிற இந்தப் பதிவு. முதல் முறை என்பதால் விஜய்கோபால்சாமி என்ற ஒரே ஒரு பதிவரின் கேள்விக்கு மட்டும் இங்கே பதில் எதுகிறேன். இதையே அழைப்பா எடுத்துக்கிட்டு நீங்களும் கேள்விகள அனுப்புங்க. குறைந்தது அஞ்சு கேள்வி சேந்தாலும் பதிவு போட்டு பதில் சொல்லிடுவேன்.]



தில்லானா மோகனாம்பாள் படத்த இப்போ ரீமேக் பண்ணா, யார் யார் நடிச்சா பொருத்தமா இருக்கும்?
ஏம்ப்பா, நீ இருபத்தஞ்சு வருஷமா கோமால இருந்தியா? ஏற்கெனவே கங்கைஅமரனும் சுரேஷ்கிருஷ்னாவும் ரீமேக் பண்ணிட்டாங்கப்பா. முடிஞ்சா தி.மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமம் மூணு படத்தையும் அடுத்தடுத்து டிவிடி ப்ளேயர்ல ஓடவிட்டுப் பாரு.


சானியா ரெண்டாந்தாரமா வாக்கப்படப் போறாங்களாமே? என்ன கொடுமை இது?
கல்யாணம் பண்ற வகையில சானியா மாலிக்குக்கு ரெண்டாவது. நிச்சயம் பண்ணுன வகையில மாலிக் சானியாவுக்கு ரெண்டாவது. ரெண்டுக்கு ரெண்டு சரியாப் போச்சு... விடுங்கப்பா இதையெல்லாம் போய் நோண்டிக்கிட்டு.


ஐடி கம்பெனி டிரைனேஜ்ல கிலோ கிலோவா காண்டம் கிடைச்ச செய்தியெல்லாம் சமீபமா பேப்பர்கள்ள வற்றதில்லையே?
எந்தக் காலத்துலய்யா இருக்கே? அது மாதிரி விஷயங்கள் எல்லாம் இப்போ சிடில தான் வருது. இனிமே உனக்கு சிடி வாங்குற செலவும் இருக்காது. எதாவது ஒரு நியூஸ் சேனலப் போட்டுப் பாத்தாலே போதும்.


மனோகரா படத்தை யாராச்சும் ரீமிக்ஸ் பண்ண மாட்டாங்களா?
வேணாம்டா, அப்புறம் அதுக்கொரு பாராட்டு விழா நடக்கும்.


நடிகை புவனேஸ்வரி இப்போ எங்கே இருக்காங்க?
எங்க இருந்தா உனக்கென்ன? மூடிக்கிட்டு சும்மா இரு.


பிரகாஷ்ராஜ் அடுத்து ஏதாவது புத்தகம் எழுதுகிறாரா?
எழுதுன ஒன்னே போதும்டா சாமி. காதெல்லாம் ரத்தம்...


ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வருமா?
ஆண்ட்ரியாவா ரீமாவா யாரு ரொம்ப அழகுன்னு முடிவு பண்றதுக்குள்ள படமே முடிஞ்சு போச்சு. அதனால  இன்னொரு பார்ட் வந்தாலும் தப்பில்லை. மறக்காம பார்த்திபன வெட்டி விட்டுருங்கடா டேய்...

[அடுத்த பகுதி உங்கள் ஆதரவைப் பொறுத்து. கேள்வி வரலேன்னா கேள்வி பதில் பகுதி போடாம இருந்துடுவேன்னு தப்புக் கணக்குப் போட்டுட வேண்டாம். யாருமே கேக்கலேன்னா நானே கேள்வி-நானே பதில்தான். மருவாதியா ஆளுக்கு கொஞ்சம் கேள்வியக் கேட்டுடுங்க.]

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan