இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Tuesday, 30 March, 2010

பூமி கண்டலு அல்லது எர்த் ஹவர்லு - என்ன கூத்துலு இதி செப்பண்டி...

இந்த எர்த் ஹவர் காமெடி வருஷந் தவறாம நடந்துகிட்டிருக்கு. இந்த எர்த் ஹவர் நாள்ள உள்ளூர் நேரப்படி ராத்திரி 8:30 லேந்து 9:30 வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு வெளக்க அணைக்க சொல்றாங்க. ஒவ்வொருத்தனும் எதாவது ஒரு காரணத்துக்காக வெளக்க அணைச்சிக்கிட்டுதான் இருக்கான். எதை/யாரை அணைக்கறதுக்காக அவன் வெளக்க அணைக்கிறான்னு ஆராயறது நம்ம வேலை இல்லை. அதனால அதப் பத்தி பேச வேண்டாம்.

கடந்த ஆண்டு எர்த் ஹவரைக் குறித்து ஒரு பதிவு எழுதினேன். பொதுவாகவே நான் மீள்பதிவு போடுவதை விரும்புகிறவன் கிடையாது. இருந்தாலும் இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் மின்-வெட்டுகள் கடந்த ஆண்டைப் போலவே அல்லது கடந்த ஆண்டை விட மோசமாவே இந்த ஆண்டும் தொடருவதால் அதே பதிவை இங்கே நீங்கள் படிப்பதற்காக மீள்-பதிவாக வெளியிடுகிறேன்.

__________

எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும் அணைப்பதா அல்லது எந்த மின்சாரக் கருவிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதா என்று?

சன் தொலைக்காட்சியின் செய்தியிலும் இத்தகவல் அறிவிக்கப்பட்டது. ஆனால் விளக்குகள் மட்டுமா அல்லது அனைத்து மின் கருவிகளுமா என்று அதிலும் கூறவில்லை. அதிலும் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தின் நிர்வாகி “நாங்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறோம். அந்த ஒரு மணிநேரமும் எங்கள் உணவகம், மது அருந்துமிடம், சமையல் கூடம் எங்குமே மின் விளக்குகள் பயன்படுத்தப் போவதில்லை” என்றார். இத்துடன் நிறுத்தியிருந்தால் நல்லது. மேலும் ஒரு வாக்கியத்தையும் சொன்னார். “மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்துவது ரொமாண்டிக்காக இருக்கும்”. இது போன்ற பண்ணாடைகள் எதைச் செய்தாலும் தங்களுக்கென்று அதில் ஒரு ஆதாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போலிருக்கிறது.

பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் திடீர் சூழலியல் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறன. மதிமாறன் அவர்கள் ஒரு கட்டுரையிலே கார்ல் மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டியிருப்பார் “முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் தரும் செயல் என்று தெரிந்தால் தனக்கான கல்லறைக் குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்” என்று. அப்படித்தான் இந்த நிறுவனங்களும் தங்களது சிக்கனத்தை சூழலியல் ஆதரவு என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. நண்பன் ஒருவனின் அலுவலகத்தில் வழக்கமாக கைதுடைக்கும் காகிதம் வைக்குமிடத்தில் காகிதங்கள் இல்லை. மாறாக அங்கே ஒரு சிறிய சுவரொட்டி. “வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். காகிதத்துக்குப் பதிலாக சூடான காற்றை உமிழும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவீர்” என்று அதில் அச்சிட்டிருந்ததாம்.

வழக்கமாக கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு கைகளை மட்டும் கழுவிக் கொள்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. என் நண்பனோ சட்டை, கால்சராய், காலுறை இவற்றுக்கு வெளியே தெரிகிற எல்லா இடங்களையும் கழுவிக் கொள்பவன். அதாவது கைகளுடன் சேர்த்து முகத்தையும் கழுவிக் கொள்பவன். அன்றைக்கு முகத்தைக் கழுவிய பிறகுதான் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறான். மூ… மன்னிக்கவும், ஆத்திரத்தில் முகம் சிவந்துவிட்டது. ஈரக் கையுடன் தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அதே சுவரொட்டியில் “மின்சாரமும் ஒரு வளம்தான் என்று சொல்லி வெகு விரைவில் இந்த சூடான-காற்றடிக்கும் இயந்திரத்தையும் நிறுத்திவிடாதீர்கள். பின்குறிப்பு: முகம் கழுவிய பிறகு இந்த இயந்திரத்தினுள் என்னுடைய முகத்தை நுழைக்க முடியவில்லை.” என்று எழுதிவிட்டு வந்தான். அவனது பெயரிலிப் பின்னூட்டத்திற்குப் பிறகு காகிதங்களும் வைக்கப்படுகின்றனவாம்.

இன்னொரு நண்பனின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் குளிர்சாதனத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவார்களாம். அவனுடைய குழுவில் வெகு சிலர் மட்டுமே இரவுப் பணியில் இருப்பதால் மொத்தத் தளத்துக்கும் குளிர்சாதனத்தை இயக்க முடியாதாம். கொடுமை என்னவென்றால் அவன் பணிபுரியும் தளம் தரை மட்டத்துக்கு அடியில் இருக்கிறது. புழுங்கி சாக வேண்டியதுதான்.

சரி, விட்ட இடத்துக்கே வருவோம். இந்த “எர்த் ஹவர்” செய்தியைக் கூறிய சன் தொலைக்காட்சி 8:30 முதல் 9:30 மணி வரை ஏன் ஒளிபரப்பை நிறுத்தவில்லை (கேள்வி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்)? அந்த நேரம் நீ என்னடா செய்தாய் என்று கேட்க இருப்பவர்களே, பொறுமை! எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டிவியை மட்டும் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் விளக்குகளை மட்டும் தான் அணைக்கச் சொல்லியிருந்தனர். தாகம் எடுத்தபோது குளிர்சாதனப் பெட்டியைக் கூடத் திறக்கவில்லை, அதற்குள்ளும் ஒரு விளக்கெரியுமே. 9:30 ஆன பிறகு தான் தண்ணீர் குடித்தேன்.

“எர்த் ஹவர்” எல்லாம் எடிசன் நினைவைப் போற்றுவதற்கு மட்டுமே மின்வெட்டு அனுசரிக்கும் நாடுகளுக்குச் சரி. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்”? அதுவும் இரவு 8:30 முதல் 9:30 வரை (பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வேறு நடைபெறுகின்றன).

Saturday, 27 March, 2010

என்ன கொடுமை சார் இது...

டேய்... என்னடா சொல்றீங்க.... அவ்வளவு தூரம் போகனுமா... ஆத்திரத்த அடக்குனாலும் இத அடக்க முடியாதேடா...

பெரிய கேமெரா காதலரா இருப்பாரோ... இப்படிக் கட்டிக்கிட்டு தூங்குறாரு... பாத்துய்யா யோவ்... அது குட்டி கிட்டி போட்டுடப் போகுது...

இதுல போய்த் தீய அணைக்கறதுக்குள்ள எல்லாமே வெந்து பஸ்பமாகிருமேடா....

என்ன பண்ணுவானுங்கன்னு நெனைச்சிப் பாக்கவே அதிர்ச்சியா இருக்கே...

ஏய்... அது என் கம்ப்யூட்டர் மௌசு... உன் பொண்டாட்டி உனக்காக அந்த பொந்துல வெய்ட் பண்ணுது...Sunday, 14 March, 2010

மீண்டும் கொலைவெறிக் கவுஜைகள் - 1

பாட்டன்

திருச்சியில் எல்லாப் படத்துக்கும்
டிவிடி கிடைத்தாலும்
தமிழ் படத்துக்கு மட்டும்
டிவிடிக்கள் கிடைப்பதில்லை...

தாத்தா இருக்க பயமேன்?
தயாநிதி அழகிரிக்கு...


அவ”ன்” அன்றி...

அவ”ன்” அன்றி ஓரணுவும்
அசையாதுதான்!
சோனியா காந்தியே
ஒப்புக் கொள்கிறார்,
மகளிர் மசோதா
கலைஞர் ஆதரவின்றி
நிறைவேறியிருக்காதாம்...


அடைமொழி

அடைமொழிகளின்றி
சிலவற்றுக்கு
விசேஷித்த
அடையாளமில்லை...
“லெட்டர் பேட்” கட்சி,
“மாமாப்” பயல்,
“மகளிரணித்” தலைவி,
”நித்திய” ரஞ்சிதம்...

பெட்ரோல் டீசல்

பட்ஜெட்டில்
பெட்ரோல் டீசல்
விலையேற்றம்...

உடனே குரைத்தது
மத்திய அரசு
“குறைக்க மாட்டோம்,
குறைக்க மாட்டோம்” என்று

[நன்றி: பாட்டன் கவிதைக்கான தகவல் நண்பர் ஜெய்சங்கருடன் ஜி-டாக்கில் உரையாடிய போது கிடைத்தது.]

Saturday, 13 March, 2010

என்னடா பட்டாபி....

[பெரிசா பாக்கனும்னா படத்து மேல க்ளிக் பண்ணுங்க]

Thursday, 11 March, 2010

அடுத்தது யார் ஜக்கியா? ரவிஷங்கரா?

தலைப்புக்கு நன்றி: நண்பர் ஜெய்ஷங்கர்

ஜக்கி வாசுதேவ் - கர்னாடக மாநிலத்தில் பிறந்துவளர்ந்த ஜக்கி வாசுதேவ், ஈஷா யோக மையம் என்ற தனது ஆசிரமத்தை நடத்தி வருவது வெள்ளியங்கிரி மலையில். இவரும் நித்தி மாதிரியே கவர்ச்சியான தலைப்புகள்ல கட்டுரைகள் எழுதுனவர். உதாரணம், அத்தனைக்கும் ஆசைப்படு. யோகா கத்துக் குடுக்கறது, பிரசங்கம் நடத்துறது இது மாதிரி வேலைகளோட மானசரோவர் டூர் கூட்டிட்டுப் போற டூரிஸ்ட் கம்பெனி வேலையும் சைட்ல ஓடிக்கிட்டிருக்கு.

இவரது ஆசிரமத்திலும் மிக அதிகமாக சம்பாதிக்கக் கூடிய பலர் முழுநேர சிஷ்யர்களாக இருக்கிறார்கள். சாமியார்களுக்குரிய ஆடைகளை மட்டுமே இவர்கள் அணிய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் அவர்களது வருமானம் பாதிக்கப்படும் என்பதனாலோ என்னவோ அதைக் கட்டாயப் படுத்துவதில்லை. இந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜக்கியும் பல வண்ண உடைகளில் பத்திரிகைகளுக்குப் போஸ் கொடுத்து வருகிறார்.

ஊர் ஊருக்கு கேம்ப் அடிச்சி யோகா க்ளாஸ் நடத்தி நல்லாவே கல்லா கட்டுறாங்க. வாழ்த்துக்கள். இவரது மனைவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரிடமிருந்தும் கேட்டறிய நேர்ந்தது. மேலும், குமுதத்தில் எழுதிய நித்தியா இப்போது கம்பியை எண்ணக் காத்திருக்கிறார். தற்போது ஜக்கி குமுதத்தில் எழுதவில்லை என்றாலும், யாரோ “ப்ரியா கல்யாணராமன்” என்பவர் இவரைப் பற்றி எழுதி வருகிறார். குமுதத்தின் ராசி இவரையும் விட்டுவைக்காமல் அதி விரைவில் அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்ப்போமாக.

அடுத்ததாக வாழும் கலை ரவிஷங்கர். இவர் கொஞ்சம் அல்பத்தனமான விளம்பரப் பிரியரோ என்று நினைக்குமளவுக்கு சமயங்களில் இவரைப் பற்றிய விளம்பரங்கள் அடிக்கடி ஓவர் டோசாகிறது. பெயருக்கு முன்னால் இரண்டு முறை மட்டும் ஸ்ரீ ஸ்ரீ என்று போட்டுக் கொள்வதால் நல்ல வேளை இரண்டோடு விட்டாரெ என்று பலரும் நிம்மதி அடைகின்றனர் (மைல் நீளத்துக்கு இம்போசிஷன் மாதிரு எழுத விட்டா என்ன செய்யுறது). இவரது அமைப்பின் துணை அமைப்பாக ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மையம் செயல்பட்டு வருகிறதாம். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. இவரது மறுபக்கம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

இப்போதைக்கு குமுதத்தில் முகத்தைக் காட்டி வருவதாலும், கவர்ச்சியான தலைப்புகளில் எழுதி வருவதாலும், மனைவியின் கொலை வழக்கு நடந்து வருவதாலும் ஜக்கி முன்னிலையில் இருக்கிறார். என்றாலும் கடைசிக் கட்ட நிலவரங்கள் மாறுதலுக்குட்பட்டவையாக இருப்பதால் வாழும் கலை ரவிஷங்கர் கம்பி எண்ணவும் வாய்ப்புகள் உருவாகலாம். நாம் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக (எழுதிய நான் உள்பட) இவர்கள் இருவரையும் தவிர்த்த வேறொருவர் உள்ளே போனாலும் போகலாம். தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan