இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday 25 August, 2011

அன்னா ஹசாரேவும் அவுந்த கோமணமும்




Thursday 7 July, 2011

நான் ரசித்த ஓவியங்கள்

Thursday 23 June, 2011

சாரு நிவேதிதா! என் பங்குக்கு நானும்...

நேற்று என் முகநூல் முகப்பில் பகிர்ந்த இந்த செய்தியை இங்கே மறுவெளியீடு செய்கிறேன். இதனைத் தங்களது முகநூல் முகப்புகளில் மறுவெளியீடு செய்த அண்ணன் உண்மைத் தமிழன், சேவியர் ஆகியோருக்கு இத் தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பதிவை எழுதியபோது பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் கருதி அவர் இவர் என்று எழுதிய வாக்கியங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடும் முன்பு எதார்த்தம் கருதி திருத்தி வெளியிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே மீள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நித்தியானந்தா விவகாரத்தை
ஒட்டி இந்த வலைத்தளத்தில்
வெளியிடப்பட்ட கேலிச் சித்திரம்.

இன்றைக்கும் நாமெல்லாம் அறிந்திருக்கக் கூடிய ஒரு வசை வாக்கியம் “விருந்தாளிக்குப் பொறந்தவனே” என்பதாகும். மிக இயல்பான ஒரு வசவாகப் பலராலும் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. கையில் சிக்கியவனை அக்கணமே அவமானப் படுத்தியாக வேண்டிய அவசரத்தில் அவனை விட்டுவிட்டு அவனைப் பெற்றவளை அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு வாக்கியம் ஏன் உருவானது? எதற்காக ஒருவனை இப்படித் திட்ட வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. வெகு சமீபத்தில் தான் இதற்கான பதில் கிடைத்தது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கு (குறிப்பாக இந்த முனிவர் பன்னாடைகளுக்கு) சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்தால் மோட்சம் கன்ஃபார்ம் என்று மக்கள் முட்டாள் தனமாக நம்பியிருக்கின்றனர். வசதியுள்ளவன் பணம் கொடுத்து ஆள் அழைத்து வர முடியும். வசதியில்லாதவனுக்குத் தன் மனைவியையே விருந்தாக்குவது ஒன்று தான் வழி. இந்த நடைமுறை வழக்கொழிந்த பிறகு ஒருவரை மிக மோசமாகத் திட்டுவதற்கு இது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

நிற்க. இப்போது சாரு நிவேதிதாவுக்கு வருவோம். பாஷா (basha என்று சொல்லக் கூடாது pasha என்று சொல்ல வேண்டும்), லெதர், 10 டௌனிங் போன்ற பப்புகளில் சரக்கு வாங்கி ஊற்ற ஆளிருந்தும் இந்த ஆள் ஏன் “தமிழ் நாட்டில் என்னைக் கொண்டாடுகிறவர்கள் யாருமே இல்லை” என்று புலம்புகிறான் என்று வியந்ததுண்டு. முந்தாநாள் வந்த ஸ்லைடு ஷோவைப் பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் புரிந்தது.

இவனை வீட்டுக்கு அழைத்து அல்லது இவன் வீடு தேடி வந்து தன்னையோ தன் மனைவியையோ ஒப்படைக்கத் தயாராகத் தமிழ்நாட்டில் எந்த வாசகனும்/வாசகியும் இல்லை. இந்த கடுப்பில் தான் தமிழ் நாட்டில் தன்னை யாருமே கொண்டாடுவதில்லை என்று புலம்பியிருக்கிறான்.

“கேரளாவில் நான் நின்னா பொதுக் கூட்டம், நடந்தா பேரணி” என்ற ரேஞ்சுக்கு இவன் கொடுத்த பில்டப்புகளைப் பார்த்தால் மலையாளிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

சாருவும் அவனது அடிப்பொடி அல்லக்கைகளும் இது நித்தியின் சதி என்று கூட சொல்லக் கூடும். அது மட்டும் உண்மையாக இருக்குமானால் நித்தி மீதான எனது விமர்சனங்களை இப்போதே கைவிடுவதற்குச் (கவனிக்கவும் கைவிடுவதற்கு, மாற்றிக் கொள்வதற்கு என்று சொல்லவில்லை) சித்தமாக இருக்கிறேன். நன்றி தெரிவித்து இந்து நாளேட்டில் அரை... மன்னிக்கவும் முழுப் பக்க விளம்பரமும் கொடுப்பேன்.

இது போன்ற சூழ்நிலையில் நித்திக்கு ப்ளாக் இல்லாதது குறித்து சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஒரு ப்ளாக் இருக்கிறது என்பதற்காக நித்தியை எப்படியெல்லாம் காய்ச்சி எடுத்தான் இந்த சாரு நிவேதிதா. பழிக்குப் பழி வாங்க இதுவே தருணம். நித்தி “ஸ்டார்ட் ப்ளாகிங்.”

மண்டை அநியாயத்துக்குக் காயுதே, ராஜன் ஆல்-இன்-ஆல் ப்ளாக்ல கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுவோம்னு போனா அங்கே ஒரு கமெண்ட். “இவன் இப்படிப் பண்ணுனத துக்ளக்குக்கு யாராவது சொல்லிவிடுங்க” என்று. அந்த வாசகரைப் பாத்தா பரிதாபமா இருக்கு. பல்லாண்டு காலமாக சொப்பன ஸ்கலித, துரித ஸ்கலித விளம்பரங்களை நம்பியே தொழில் பண்ணுக்கிற துக்ளக் பத்திரிகை இதற்காகவெல்லாம் சாருவை விரட்டி விடும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு மூடத்தனமே. பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதுகையில் ஸ்ரீவேணுகோபாலனாக இருக்கிறவர், காமரசம் கொப்பளிக்கிற மாதிரி எழுதுகையில் மட்டும் புஷ்பா தங்கதுரை ஆகிவிடுகிற ரசவாதம் போலவே சாருவும் தனக்கென ஒரு ரசவாதம் வைத்திருப்பான்.

புதுமைப்பித்தனை சுனா மானா காரன் என்று சிலர் பிறழ உணர்ந்ததைப் போலவே இவனையும் சிலர் பெரியாரிஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். போய்த் தொலையட்டும், ஆமென். ஆனால் இவன் ஒரு பெரியாரிஸ்ட் என்று தெரிந்தும் துக்ளக்கில் எழுத விட்ட சோவின் பெருந்தன்மையைச் சொட்டையில் முத்தமிட்டுத் தான் பாராட்ட வேண்டும்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், அவன் கனிமொழியைப் பற்றிச் சொன்ன வசனங்கள். கணவர் அரவிந்தனையே அருகில் நெருங்க விடாத கனிமொழியா இந்தக் கழிசடையை, ச்சீ... வாந்தி வாந்தியாக வருகிறது. 2016 திமுக ஆட்சியைப் பிடிக்கும் போது சாருவுக்கு பாலுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட இருப்பது நூத்துக்கு முன்னூறு சதவீதம் உறுதியாகியிருக்கிறது.

அடிப்பொடி சிகாமனிகளே, தமிழின் முதல் பாலுறுப்பு இல்லாத எழுத்தாளர் என்ற பெருமையை அடைய உள்ள சாரு நிவேதிதாவுக்கு இப்போதிருந்து உங்கள் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கத் தொடங்குங்கள்.

Friday 17 June, 2011

வரி விளம்பரம் - 17/10/2011

படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்.

Monday 16 May, 2011

Monday 2 May, 2011

ட்விட்டரில் மு. கருணாநிதி


Monday 11 April, 2011

என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி...

10,543வது ஆளாக இந்தப் பதிவின் தலைப்பைச் சொல்லிப் புலம்புகிற ஒருவரின் பதிவைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் பதிவு எதையாவது எழுதி வைக்க வேண்டுமே என்ற அரிப்பு நன்றாகத் தெரிகிறது. நல்ல சுவராகப் பார்த்து முதுகைத் தேய்துக் கொண்டால் நல்லது.

எனக்கு அப்பவே இந்தி கத்துக் குடுத்திருந்தா நான் இப்படி வெளி மாநிலத்தில் அல்லல் பட வேண்டியதிருக்காதே என்று புலம்புறதும், எங்கம்மா என்னைப் பெத்தப்பவே ஸ்கேட்டிங் ஷூவோட பெத்திருந்தா இன்னிய தேதிக்கு நான் ஸ்கேட்டிங்ல பெரிய ஆளாகிருப்பேன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை. அவ்வளவு அபத்தமா இருக்கு அந்தப் பதிவு.

இப்படிப் புலம்புகிறவர்கள் இன்னொன்றும் சொல்லுகிறார்கள், “இந்தி தெரிஞ்சிருந்தா தமிழ்நாடு தவிர்த்து எங்கே போனாலும் சமாளிக்கலாம்” என்று. இவுங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை செங்குன்றத்திலிருந்து 40 கி.மி.க்குப் பக்கமாகத் தொடங்குகிறது ஆந்திர எல்லை. அங்கே பெரும்பாலோருக்கு இந்தி தெரியாது. அப்படியே நூல் புடிச்சு கர்நூல், கடப்பா, காக்கிநாடா, பெஜவாடா, விசாகப்பட்டிணம் என்று மேல் நோக்கி நகர்ந்தால் அங்கும் இந்தி தெரியாதவர்கள் தான் அதிகம். இத்தனைக்கும் ஆந்திர அரசின் கல்வித் துறை, தெலுங்கு, ஆங்கிலம், உருது, இந்தி என்று நான்கு மொழிகளில் (மீடியம்) கல்வி கற்பிக்கிறது.

நைசாம் (நிஜாம்) ஆளுகையில் இருந்த 10 தெலங்கானா மாவட்டங்களில் ஐதராபாத், செகந்திராபாத் சுற்றுப் புறங்களில் மட்டும் பெரும்பாலானோர் சரளமாக இந்தி பேசுகிறார்கள். அதே சமயம் தெலுங்கிலும் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வட்டார வழக்குத் தெலுங்கில் சென்னைத் தமிழ் போலவே வேற்று மொழிச் சொற்கள் (உருது, இந்தி) அதிகம் கலந்து காணப்படும். ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியில் பேசுகிறார்கள் என்பதால் அந்த மாநிலம் முழுவதும் இந்தி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அபத்தம். இதை ஐதராபாத்தில் இருந்து கொண்டு சொல்கிறேன்.

இதற்கப்புறம் இன்னொன்றும் சொல்கிறார்கள், “எப்படி இருந்தாலும் இந்தியாவுல இந்தி பேசுறவுங்க தானே மெஜாரிட்டி” என்று. மெஜாரிட்டி மைனாரிட்டி கணக்கு சொல்றவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள். உலகத்திலேயே மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கிறவர்கள் சீனர்கள். அதாவது சீன மொழி தான் அதிகம் பேரால் பேசப்படும் மொழி. அப்படி இருக்கும் போது நம்ம ஊர் பள்ளிக் கூடங்களில் சீன மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா அல்லது இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? மெஜாரிட்டி மைனாரிட்டி பேசுகிற யாரும் இந்தப் புள்ளி விபரம் பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

இப்படி பல்வேறு வாதங்களால் மூக்குடை பட்ட பின்னர், “என்ன இருந்தாலும் நம்ம நாட்டோட தேசிய மொழியை இப்படி அவமானப்படுத்தலாமா” என்று முணகுவார்கள். இந்த “தேசிய மொழி” அஸ்திரத்தை பிரயோகித்ததும் ஏதோ கர்னனைச் சாய்த்துவிட்ட அர்ஜுனன் ரேஞ்சுக்கு ஒரு லுக்கு விடுவார்கள். “தேசிய மொழி” என்கிற சாணிப் புளுகை இன்னும் எத்தனை நாட்கள் அவிழ்த்து விடுவார்களோ தெரியவில்லை.

அவர்களெல்லாம் நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா மற்றும் நீதிபதி ஏ.எஸ். தவே ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு இந்தியை ஒரு அலுவல் மொழியாகப் பரிந்துரைக்கிறதே தவிர அதை ஒரு இடத்திலும் தேசிய மொழி என்று வலியுறுத்தவில்லை. அரசியலமைப்பானது அலுவல் மொழி என்கிற ஸ்தானத்தையும் இந்தி மொழிக்கு மட்டும் கொடுத்துவிட வில்லை. ஆங்கிலமும், அந்தந்த வட்டாரங்களில் பேசப்படும் மொழிகளும் கூட இந்தியாவின் அலுவல் மொழிகள் தான் என்று உறுதி செய்கிறது. அந்தத் தீர்ப்பின் விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் படிக்கலாம்: http://www.thehindu.com/news/national/article94695.ece

இவ்வளவும் எழுதியதால் நான் இந்தி படிக்காதவன், இந்தியை வெறுப்பவன் என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 3 ஆண்டுகள் இந்தி படித்தவன் தான், 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவன் தான். ஆனால், அந்த மூன்று ஆண்டுகளும் இந்தி வகுப்புகள் எனக்குப் பெரிய துன்புறுத்தலாகத் தான் இருந்தன. அ, ஆ, இ, ஈ என்று தமிழ் ஆசிரியையிடம் சொல்லும் போது அம், அஹ என்று முடித்து பல முறை அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கு வெளியே ஒரு இடத்திலும் பேசப் பயண்படாத அந்த மொழி இருபது ஆண்டுகளுக்கு எனக்கு எதற்கும் உதவவில்லை.

2007 ஏப்ரல் முதல் ஆந்திரத் தலைநகர் ஐதராபாதில் பணிபுரிந்து வருகிறேன். இந்த ஊருக்கு வருவதற்கு 60 நாட்கள் முன்பிருந்து புத்தகங்கள் வழியாக தெலுங்குச் சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் படித்துத் தெரிந்து கொண்டு தான் புறப்பட்டேன். இங்கே வந்த பிறகுதான் ஆந்திர மாநிலத்தின் பூகோளமும் பண்பாடும் புரிந்தது. ஐதராபாத் நகரில் இந்தி பேசுகிறவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இருபது ஆண்டுகள் பேசிப் பழகாமல் இருந்ததால் இந்தி மொழியில் பேசவும் பதிலளிக்கவும் திணறினேன். இந்த ஊரில் நான்காண்டுகளுக்கு மேல் வசித்தும் இந்தி இன்னும் சரளமாக வசப்படவில்லை. ஆனால் வெறும் எட்டே மாதத்தில் விரும்பிக் கற்ற தெலுங்கு இந்தியை விட அதிகம் கை கொடுக்கிறது.

இந்தி தெரியாதது ஒன்றும் உடல் ஊனம் கிடையாது, வருந்திப் புலம்புவதற்கு. அதே சமயம் இந்தி பேசுகிறவர்கள் பெரும்பாலாணோர் வசிக்கிற மாநிலங்களில் வேலைக்குப் போகும் போது உரிய தயாரிப்புகள் இல்லாமல் போனால் அது நம்முடைய தவறு. அதே போன்று தயாரிப்பில்லாமல் ஒரு வட இந்தியன் இங்கே வந்து “இந்தியில் பேசினால் எவனும் பதில் சொல்ல மாட்டேங்குறான்” என்று புலம்புவது அதைவிடத் தவறு. இதற்காக அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த விஷயங்களைக் குற்றம் சாட்டுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம், அயோக்கியத் தனம்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: இந்தியில் பொளந்து கட்டுகிற லாலுபிரசாத் யாதவுக்குத் தாய்மொழி இந்தி கிடையாது! பீகாரின் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையினர் பேசுவது போஜ்பூரி மொழி.

Monday 14 March, 2011

”எந்திரன்” - தாமதமாய் ஒரு திரை விமர்சனம்

ரெட் ஜெயண்ட் காரர்கள் “குருவி” படத்தைத் தயாரித்த போதே திரையரங்குகளுக்குச் சென்று எந்த தமிழ்ப் படங்களையும் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தாயிற்று. பிறந்த போதே வலது உள்ளங்கையில் ப்ளாகர் ஐடியுடனும் இடது உள்ளங்கையில் பாஸ் வேர்டுடனும் பிறந்துவிட்ட காரணத்தால், கை துறுதுறுக்கையில் அவ்வப்போது திரை விமர்சனம் எழுத வேண்டியிருக்கிறது. அதனால் முற்றாகத் தமிழ் சினிமாவையே புறக்கணிப்பது என்ற முதிர்ச்சி இன்னும் என்னை வந்தடையவில்லை.

வழக்கம் போல் நேற்றும் (12-3-2011) துவாரகா தூங்காமல் அடம் பிடித்தாள். சனிக்கிழமை இரவாகப்பட்டதால் அதை ஒரு குற்றமாகக் கருத இடமில்லை. ஏதாவது படம் பார்ப்பது என்று முடிவாயிற்று. கடந்த முறை சார்மினார் எக்ஸ்பிரசில் வாங்கிய “எந்திரன்” பார்க்கப்படாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தூசி தட்டி ப்ளேயரில் ஓட விட்டேன். துவாரகா திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்றேரக் குறைய எனக்கும் துவாரகாவுக்குமான வயது வித்தியாசமுள்ள இருவர் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். நடுநிசி நாய்கள் படத்தையே மனைவியையும் குழந்தையையும் தூங்கவைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு பார்த்த எனக்கு எந்திரனை மகளுடன் அமர்ந்து பார்க்க சற்றே அருவருப்பாகத் தான் இருந்தது. ஒரே ஆறுதல், 21 மாதம் வயதுடைய துவாரகாவால் இந்தப் படத்தைக் காட்சிகளாகப் பார்க்க முடியுமே தவிர கதையை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

இதையே ஜீரணிக்க முடியாத எனக்கு “ராணா” படத்தில் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோணே நடிக்கிறாராம்! ராணாவைப் பார்த்த பிறகு நடுநிசி நாய்கள் குறித்த எனது அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ரஜினி படத்துக் கதாநாயகிகள் எப்போதுமே விருந்தில் ஊறுகாய் போலத்தான். ஒரு மாற்றத்துக்காக ஸ்ட்ராபெர்ரியில் ஊறுகாய் போடுவதற்கு ஒப்பானதுதான் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கியது. கதையல்ல நிஜம் லட்சுமி மகள் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டாலும் எந்த ரசிகனும் ஏன் என்று கேட்கப் போவதில்லை என்பதால் நானும் அடுத்த விஷயத்துக்கு நகருகிறேன்.

படத்துக்கு வில்லனை ஹாலிவுட்டிலிருந்து அழைத்து வந்தார்களாம். கே.எஸ். ரவிகுமார் படங்களில் வருகிற பஞ்சாயத்துக் காட்சிகளில் நாலாவது வரிசையில் நிற்பதற்குக் கூட லாயக்கில்லாத மூஞ்சி. இதுக்கு செலவோட செலவா ரகுவரனையே கிராபிக்சில் கொண்டு வந்திருக்கலாம். கொஞ்சமாச்சும் மனசு ஆறுதலடைஞ்சிருக்கும்.

மனதில் நிற்கிற கதாபாத்திரங்கள் என்று சொல்வதானால் ரஜினியின் பெற்றோராக நடித்த டெல்லி குமார் மற்றும் ரேவதி சங்கரன் ஆகியோரைத் தான் சொல்ல வேண்டும். பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த அனுபவம், இங்கே கை கொடுத்திருக்கிறது. ஹாட்பாக்சைத் தூக்கிக் கொண்டு வந்து “ரோபோ, நீயும் ரெண்டு இட்லி சாப்பிடு” என்று சொல்லுகிற காட்சியில் ரேவதி சங்கரன் ராக்ஸ்.

வயசான சயிண்டிஸ்ட்டுக்கும் ”33 வயது” டீன் ஏஜ் மெடிகல் ஸ்டூடண்ட்டுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தைக் ”கலாச்சார பேரழிவின் உச்சம்” என்று தான் சொல்ல வேண்டும். :) சில பேர் சினிமாவை சினிமாவாகத் தான் பார்க்கணும் என்று முன்பே பல பதிவுகளில் சொல்லியிருப்பதால் நானும் இதை சினிமாவாகவே பார்த்தேன். அப்போதும் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த “33 வயது” டீன் ஏஜ் கதாநாயகி அந்த ரோபோவின் காதலையாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம். டிவிடி வாங்குன காசு வீணாப் போகலைன்னு ஆறுதல் பட்டிருப்பேன்.

மற்றபடி, கலைஞானியின் தத்துவார்த்த வாந்திகளைவிடவும், இது போன்ற படங்களால் ஆபத்து அதிகமில்லை என்பதால் நூற்றுக்கு 3.5 மதிப்பெண்கள் போட்டு ஃபெயிலாக்குகிறேன். இந்தப் பதிவைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் யாராவது வருத்தப்பட்டால் பின்னூட்டம் அல்லது மின்மடல் வாயிலாகத் தெரிவிக்கவும். தூக்கு தண்டனைத் தீர்ப்பு எழுதிய பேனாவை உடைப்பது போல இந்தப் பதிவை எழுதிய கீ போர்டை உடைத்துப் போட்டுவிட்டு புதியது வாங்கிக் கொள்கிறேன்.

துளி கூட அரசியல் கலக்காமல் எழுதப் பட்ட பதிவு இது. காரணம் இதில் மாறன் பிரதர்ஸ் பெயரை ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை.

Monday 28 February, 2011

உனக்கேண்டா இந்த வேண்டாத வேலை!

எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. உனக்கேன் இந்த வேண்டாத வேலை. உள்ளூர்லயே வெல போகலியே, ஐட்ராபாட் போய் நூவ் ஏம் பீக்குதாவு செப்பு...

டிஸ்கி: அனுஷ்கா தயவுல இந்தப் படம் ஓடுனா அதுக்கும் இளைய தளபதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... கிடையாது... கிடையாது...

இந்தக் கொடுமையை தெலுங்கில் கேட்க இந்த சுட்டியைச் சொடுக்குங்கோ:

புலி வேட்டா

விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் நடுவுல பேக்ரவுண்ட்ல ஒருத்தர் இருக்காரே, அவரு தான் நம்ம டிஸ்கோ சாந்தி அம்மா வீட்டுக்காரரு. பேரு ஸ்ரீஹரி.

Wednesday 23 February, 2011

சித்தப்பா... சித்தப்பா...

தமிழ்நாட்டை மகிழ்விக்க எப்படி ஒரு Gap-10 பிறந்திருக்கிறாரோ அவ்வாறே ஆந்திராவை மகிழ்விக்கப் பிறந்தவர் தான் பாலையா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. அவரையும் அவரது அண்ணன் ஹரிகிருஷ்ணாவின் மகன் “ஜூனியர் என்.டி.ஆர்.”ஐயும் வைத்து படம் எடுக்க வசதியில்லாதவர்கள், தங்கள் மனக்குறையைப் போக்கிக் கொள்ள புதிய புதிய கதைகளைக் குறுஞ்செய்திகள் மூலமாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். உங்கள் சந்தோஷத்துக்காக இங்கே கொஞ்சம் வெளியிடுகிறேன்.


[செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையில்...]
பாலகிருஷ்ணா: தம்பி, இந்த ஐடியா நம்பருக்கு முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுப்பா...
கடைகாரர்: 28 ரூபாய் டாக் டைம் வரும் சார்...
பாலகிருஷ்ணா: மீதி ரெண்டு ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட் குடுத்துடு...
ஜூனியர் என்.டி.ஆர்.: சித்தப்பா, க்ரீம் பிஸ்கெட் பாக்கெட்னு கேளு சித்தப்பா...


[பாலகிருஷ்ணா ஓய்வாகப் படுத்திருக்கிறார்...]
ஜூ. என்.டி.ஆர்.: சித்தப்பா, நம்ம காலனில ஸ்விம்மிங் பூல் கட்றதுக்கு நன்கொடை கேட்டு வந்திருக்காங்க...
பாலகிருஷ்ணா: உள்ள போய் சித்தி கிட்ட ஒரு சொம்பு தண்ணி வாங்கி அவுங்ககிட்ட குடுத்துடு நைனா...
ஜூ. என்.டி.ஆர்.: நீ மனுஷன் இல்லை சித்தப்பா... தெய்வம்...


[பாலகிருஷ்ணா ஜூனியர் என்.டி.ஆர்.ஐத் தூங்க வைக்க கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்...]
பாலகிருஷ்ணா: தாத்தா சாகும் போது அவருக்கு 70 வயசு. அப்போ கூட அவரு க்ளாஸ் (Glass) போட்டதில்லை தெரியுமா...
ஜூ. என்.டி.ஆர்.: ஏன் சித்தப்பா? அவரு பாட்டிலோட ராவ அடிச்சிருவாரா?


[பாலகிருஷ்ணாவிடம் சந்தேகம் கேட்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்...]
ஜூ. என்.டி.ஆர்: ஐ.ஐ.டி.க்கு ஆப்போசிட் என்ன சித்தப்பா...
பாலகிருஷ்ணா: யூ.யூ.காஃபி டா கண்ணா...

[பாலகிருஷ்ணாவிடம் ஜூனியர் என்.டி.ஆர்...]
ஜூ. என்.டி.ஆர்: சித்தப்பா, சித்தி புதுசா ஒரு காலேஜ் கட்டிருக்காங்களே, அது பேர் என்ன சித்தப்பா?
பாலகிருஷ்ணா: “பாலகிருஷ்ணா மெடிகல் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்”

[பாலகிருஷ்ணா ஒரு புது நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்...]
ஜூ. என்.டி.ஆர்.: சித்தப்பா, சேர் புதுசா இருக்கு, எப்போ வாங்குனீங்க...
பாலகிருஷ்ணா: இல்லைடா கண்ணா, ஒரு ஆடியோ ரிலீஸ்க்கு போயிருந்தேன். அங்கே “டேக் யுவர் சீட்”னு சொன்னாங்க. அதான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்...

[ஜூனியர் என்.டி.ஆர். சற்று கோபமாக...]
ஜூ. என்.டி.ஆர்.: என்ன சித்தப்பா, ரன்னிங் ரேஸ்ல 1, 2, 3 சொன்ன உடனே ஓட வேண்டியது தானே... ஏன் ஓடல...
பாலகிருஷ்ணா: என் டி-ஷர்ட்ல 4ன்னு நம்பர் போட்டிருந்துச்சு. 1, 2, 3, சொன்னவன் 4 சொல்லுவான்னு காத்திருந்தேன், அவன் சொல்லவே இல்லை...

உங்களுக்காக ஒரு சினி பிட்:


ஏண்டா, அது என்ன பாமா, பம்பு செட்டு சுச்சு போர்டாடா.... டைம் பாம்ல எவண்டா ஆன், ஆஃப், சுச்செல்லாம் வெக்கிறான்...


Balakrishna will delete the recycle bin which others can't delete. Mind it!

Thursday 10 February, 2011

மறவாதீர் பிப்ரவரி 14

நண்பர்களே, பெட்ரோல் டீசல் விலையை வைத்து மக்களிடம் எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கிற கொள்ளைக்கு வெறும் கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போன்றவை மட்டுமே சரியான தீர்வாகாது. இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் போலவே பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் நள்ளிரவுகளில் முன்னறிவிப்பின்றி அமல் படுத்துகின்றன இந்த நிறுவனங்கள்.

பெட்ரோலியப் பொருட்களின் விலைதான் மற்ற அனைத்து அத்யாவசியப் பொருட்களின் விலைகளையும் நிர்ணயிக்கின்றன. நினைத்த நேரத்தில் இவர்கள் விலையை உயர்த்துவதை எத்தனை நாள் தான் சகித்துக் கொள்வது. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்துதான் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் இனி எடுபடாது நண்பர்களே.

ஒரு முதலமைச்சரோ பிரதமரோ சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தூக்கியெறியும் வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் இந்த எண்ணெய் நிறுவனங்களின் போக்கு அப்படியே தான் இருக்கிறது. மக்களே இந்த எண்ணெய் நிறுவனங்களைப் பழிக்குப் பழி வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.

ஒரே ஒரு நாள் அவர்களது வியாபாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அணி திரளுவோம். பிப்ரவரி 14ம் நாளில் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் வாங்காமலிருக்க உறுதியேற்போம்.

மீண்டும் மீண்டும் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்துகிற எண்ணெய் நிறுவனங்களைப் போன்றே நாமும் தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் புறக்கணித்துப் பழி வாங்குவோம்.

#tnfishermen போலவே இந்த முயற்சியும் பரவலான கவனத்தைப் பெற வேண்டும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைய நம் அணைவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம். நண்பர்களே, இந்தப் பதிவின் உள்ளடக்கத்தை பேஸ்புக், ஓர்குட், மற்றைய சோசியல் நெட்வொர்க் தளங்களில் வெட்டி ஒட்டி உங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். நாட்கள் குறைவு. பதிவின் தொடுப்பை ட்விட்டரில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்யுங்கள். இத்துடன் மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதையும் கண்டித்து #AntiPetrolPriceDay #tnfishermen என்ற இரண்டு ஹேஷ் டேகுகளுடன் உங்கள் ட்விட்டுகளை வெளியிடுங்கள். மிக்க நன்றி.

Monday 17 January, 2011

பாசத் தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியீடு








நாட்கள் குறைவு, இன்றே டெம்ப்ளேட்டை நிரப்பிடுவீர்...

Thursday 6 January, 2011

தெலங்கானா - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை

”உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் உண்மையை ஒருநாள் நேர்கொண்டே ஆக வேண்டும்.” இந்த வாக்கியத்துடன் முடிகிறது ஸ்ரீகிருஷ்னா கமிட்டியின் அறிக்கை. பிப்ரவரி 2010ல் அமைக்கப் பெற்ற இந்த ஐந்து நபர் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா தலைமை வகித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலங்கானா தனி மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது. கடந்த வியாழனன்று உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை விபரத்தைப் படிப்பதற்காகத் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்ட போது மிக அதிகமானோர் இதே அறிக்கையைத் தரவிறக்கப் போராடிக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறும் 11 எம்பி அளவுள்ள கோப்பை தரவிறக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. என்.டி.டிவி, இந்து போன்ற பெரிய பத்திரிகைகளால் கூட அறிக்கையைத் தரவிறக்க முடியாமல் உடனடியாகச் செய்தியைக் கொடுத்தாக வேண்டிய அவசரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடுப்பையே செய்தியாகப் போட்டிருந்தனர்.

இப்படித் தான் இருக்கும் என்று ஊகிக்கக் கூடிய விதத்திலேயே வந்திருக்கிறது அறிக்கை. இந்தச் சிக்கலுக்கு ஆறு விதத்தில் தீர்வு காணலாம் என்று பரிந்துரைக்கிறது கமிட்டி.

1. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தற்போதைய ஆந்திரப் பிரதேசம்
2. ஆந்திரப் பிரதேசம் - தெலங்கானா = சீமாந்திரா (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா)
3. ஆந்திரப் பிரதேசம் - கடற்கரை ஆந்திரா = ராயல தெலங்கானா (ராயலசீமை + தெலங்கானா)
4. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா - ஹைதராபாத் யூனியன் பிரதேசம் = (ஹைதராபாத் இல்லாத) தெலங்கானா
5. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா = ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா
6. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கௌன்சிலுடன் கூடிய ஆந்திரப் பிரதேசம்

இந்த ஆறு தீர்வுகளில் முதல் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை என்று அறிக்கையைத் தயாரித்த ஸ்ரீகிருஷ்னா தலைமியிலான குழுவே தெரிவிக்கிறது. நான்கு, ஐந்து அல்லது ஆறு, இம்மூண்றில் ஒன்றைத் தீர்வாக முன்னெடுக்க அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசிக்க இருக்கிறது மத்திய அரசு.

பரிந்துரை நான்கில் கூறியுள்ளபடி ஹைதராபாத் தனி யூனியனாகவும், தெலங்கானா மற்றும் சீமாந்திரா தனித் தனி மாநிலங்களாகவும் பிரிக்கப் படுவதும் முதல் மூண்று பரிந்துரையைப் போலவே சாத்தியமற்றது என்று தான் சொல்ல வேண்டும். அமையவுள்ள தெலங்கானா மாநிலத்தின் வருவாய் ஆதாரமே ஹைதராபாத் பகுதி தான் எனும்போது தெலங்கானா பகுதியினராலும் இந்தத் தீர்வை ஏற்க முடியாது. இந்தத் தீர்வு முன்னெடுக்கப் படுமானால் தெலங்கானா வளர்ச்சி குறைந்த பகுதி என்பதிலிருந்து வளர்ச்சி குறைந்த மாநிலம் என்பதாக வேண்டுமானால் பரினாமம் பெறலாம். மேலும் தற்போதைய ஹைதராபாத் பகுதியை மட்டும் கொண்டு தனி யூனியனைக் கட்டமைத்துவிட முடியாது. கடற்கரை ஆந்திராவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியே ஹைதராபாத் யூனியனை உருவாக்க முடியும். இதற்கு கடற்கரை ஆந்திர மக்களும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை.

அடுத்து ஐந்தாவது பரிந்துரை. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப காலம் முதல் வலியுறுத்தி வரும் தீர்வும் இது தான். இதன்படி பழைய நிஜாம் சமஸ்தானம் மொத்தமும் தனி மாநிலமாகப் பிரிக்கப்படும். ஏறக்குறைய 1956ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை என்று சொல்லலாம். ஆனால் இந்தத் தீர்வும் பல சிக்கல்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஆசிரியர், அரசு ஊழியர், காவல் துறையினர், வணிகர்கள் என்று பல தரப்பிலும் சீமாந்திர பகுதியைச் சேர்ந்தவர்களே தெலங்கானாவிலும் கோலோச்சுகின்றனர். இந்த அளவுக்குத் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் சீமாந்திராவில் இல்லை. மாநிலப் பிரிவின் கீழ் வருகிற துறைகளில் இடமாறுதல் என்பது பெரும் சிக்கலுக்கு உள்ளாகும்.

தெலங்கானா மாநிலம் அமைந்தாலும் கூட பழையபடியே சீமாந்திராவைச் சேர்ந்தவர்களே கல்வி, காவல் துறை போன்றவற்றில் தொடர்ந்து கோலோச்சுவர். ராமாநாயுடு, ராமோஜி ராவ், ஜி.எம்.ஆர் குழுமத்தினர் என்று சீமாந்திராவிலிருந்து வந்தவர்கள் தங்களது வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய அளவுக்கு தெலங்கானா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எவரும் வளரவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது . அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறை இவற்றில் உள்ள சீமாந்திரப் பகுதியினர் ஓய்வு பெற்று அந்த இடங்கள் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்தத் தீர்வின் கீழ் உள்ள இன்னொரு சிக்கல் நதி நீர்ப் பங்கீடு. தெலங்கானா பகுதில் ஓடுகிற நதிகள் இருந்தாலும், உருவாகிற நதிகள் எதுவும் இல்லை. மராட்டியத்தில் உருவாகிற கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகளை நம்பித்தான் மொத்த ஆந்திர மாநிலத்தின் விவசாயமும். பிரிகிற இரண்டு பிரதேசங்களும் நதிநீருக்காக மோதிக் கொள்ளுகிற நிலை ஏற்படலாம். ஆகவே தனி மாநிலம் அமைவதற்கு முன்னாலேயே இது போன்ற சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நதிநீர்ப் பங்கீட்டுக்கு நீண்ட காலம் செல்லுபடியாகக் கூடிய ஒப்பந்தம் இரு பிராந்தியங்களுக்கிடையில் கையெழுத்தாக வேண்டும்.

ஆறாவது பரிந்துரைக்கும் முதல் பரிந்துரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கவுன்சில் ஒன்று மட்டும் புதிதாக முளைத்திருக்கும். முந்தைய பரிந்துரையில் அலசப்பட்ட சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்யும் அமைப்பாக இது இருக்கும். இந்தத் தீர்வு தெலங்கானாவை ஆதரிக்கும் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகலாம். ஆனால் சீமாந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீர்வையே வலியுறுத்துவார்கள்.

இந்தப் பரிந்துரைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரியும். இரு தரப்பினருக்கும் இணைந்திருக்கும் விருப்பம் இல்லை. அதே நேரத்தில் ஹைதராபாத் பகுதியையும் இழக்க விரும்பவில்லை. சற்றேரக் குறைய மாநிலத்தின் 42 சதவீத வருவாயை ஈட்டித் தரும் பிராந்தியம் தெலங்கானா. தெலங்கானா பிராந்தியத்திலும் குறிப்பாக ஹைதராபாதிலிருந்து தான் பெரும்பங்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இதல்லாமல் கிருஷ்ணா நதி மாநிலத்தினுள் நுழையும் இடமும் தெலங்கானா பிராந்தியத்திலேயே அமைந்திருக்கிறது. ஆகவே தெலங்கானா பிரிந்து போவதை சீமாந்திர மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை. அதே நேரம் இந்தப் போராட்டத்தின் நிமித்தமாக ஏராளமான உயிர்சேதங்களைச் சந்தித்த தெலங்கானா மக்களும் தலைவர்களும் மாநிலப் பிரிவினையைத் தவிர்த்து வேறு எதனாலும் சமாதானமடையப் போவதில்லை.

2010 தொடக்கத்தில் பற்றி எரிந்த பிரச்சினையைப் பதினோரு மாதங்கள் ஆறப் போட்டது தவிர இந்தக் கமிட்டி பெரிதாக என்ன சாதித்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொறுத்திருக்க நாம் தயாராக இருந்தாலும் தெலங்கானா ஆதரவாளர்கள் தயாராக இல்லை. இதோ ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தணிந்திருந்த போராட்டக் கணல் சாம்பல் விலகி வெளிச்சம் காட்டத் தொடங்கிவிட்டது.

Tuesday 4 January, 2011

ரக்த சரித்திரம் - III

மணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள் இருவரைக் குறித்து ஏதும் நினைவில் ஓடவில்லை.

அலுவலகம் வந்தடைந்த போது உணவருந்துமிடத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைக் கூட கவனிக்கத் தோண்றவில்லை. என் இருக்கையில் அமர்ந்த போது தான் பின்னால் இருவர் சூரியைக் குறித்துப் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. சூரி தாக்கப்பட்டார் என்ற அளவில் தான் அப்போதைய பேச்சுக்கள் இருந்தன. இரவு 12:30க்கு வீட்டுக்கு வந்து சேர்ந்த போது தொலைக்காட்சி செய்திகள் சூரியின் மரணத்தை உறுதி செய்தது. சாக்‌ஷி தொலைக்காட்சியில் பிணையில் விடுதலையாகி வந்த பிறகு சூரியிடம் பேட்டி கண்ட காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ரக்த சரித்திரம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் முழுக்க முழுக்க சூரியைத் தூக்கிப் பிடிக்கிற விதமாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ரவி தரப்பினரின் கருத்து. தெரிந்தோ தெரியாமலோ ராம்கோபால்வர்மா இரு தரப்பிலும் புகைந்து கொண்டிருந்த பழி உணர்ச்சிக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது. சூரியின் கொலையில் ஆந்திர காங்கிரசின் பெரிய கைகளுக்குத் தொடர்பிருக்கிறது என்று தனி ஆவர்தனம் செய்கிறார் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர வரலாற்றில் பரிதாளா ரவியின் அத்தியாயம் முற்றுப் பெற்ற பிறகு சூரியின் தயவு காங்கிரசுக்குத் தேவையில்லாமல் போய்விட்ட நிலையில் ஜகன்மோகன் ரெட்டியின் கூற்று நிராகரிக்கத் தக்கதல்ல.

சீமாந்திர (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா) அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டம் அனந்தபூர். ரவி மற்றும் சூரியின் குடும்பங்களைக் கணக்கில் கொள்ளாவிடில் அனந்தபூர் சரித்திரம் நிறைவுபெறாது. ஜெகன்மோகன் தொடங்கவிருக்கும் தனிக்கட்சி இந்த சீமாந்திரப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை தெலங்கானா மாநிலம் அமைக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளிக்குமானால், சீமாந்திராவைக் தனது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்புகிறார் ஜெகன். இப்பகுதியின் முக்கிய மாவட்டமான அனந்தபூரில் செல்வாக்குப் பெறாவிடில் சீமாந்திராவில் கோலோச்சுவது நடவாத காரியம். பரிதாளா ரவியின் ஆதரவாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரி படுகொலை ஜெகன்மோகனுக்குப் பயன்படக்கூடும் என்றும் நம்பப்படுவதால் சந்தேகத்தின் நிழல் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் விழுகிறது.

ஜனவரி 6ம் நாள் தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஆந்திர மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவாதிக்க உள்ள நிலையில் நடந்தேறியுள்ள இந்தக் கொலைச் சம்பவம் சீமாந்திரப் பகுதியின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும் முழுவதுமாக நிராகரிப்பதற்கில்லை.

குழுவாதியாக (ஃபேக்‌ஷனிஸ்ட்) இருந்ததால் வாழ்க்கையின் முக்கியமான சந்தோஷங்கள் பலவற்றை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்த சூரி, இரு தரப்பிலும் பழிவாங்குதலுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிற எல்லோரும் தத்தமது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இரண்டு தரப்புக்கும் இடையே நடந்த உக்கிரமான மோதலில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகு சூரிக்கு வந்தது காலம் கடந்த ஞானோதயம் என்று தான் சொல்ல முடியும். எது எப்படியோ, பழிவாங்கும் படலத்தின் பற்களை நனைத்திருக்கும் சூரியின் குரல்வளை ரத்தம் “ரக்த சரித்திரம் - III" க்கு பேனா மையாகப் பயன்படக்கூடும்.

முற்றும் அல்லது தொடரும்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan