இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 11 March, 2010

அடுத்தது யார் ஜக்கியா? ரவிஷங்கரா?

தலைப்புக்கு நன்றி: நண்பர் ஜெய்ஷங்கர்

ஜக்கி வாசுதேவ் - கர்னாடக மாநிலத்தில் பிறந்துவளர்ந்த ஜக்கி வாசுதேவ், ஈஷா யோக மையம் என்ற தனது ஆசிரமத்தை நடத்தி வருவது வெள்ளியங்கிரி மலையில். இவரும் நித்தி மாதிரியே கவர்ச்சியான தலைப்புகள்ல கட்டுரைகள் எழுதுனவர். உதாரணம், அத்தனைக்கும் ஆசைப்படு. யோகா கத்துக் குடுக்கறது, பிரசங்கம் நடத்துறது இது மாதிரி வேலைகளோட மானசரோவர் டூர் கூட்டிட்டுப் போற டூரிஸ்ட் கம்பெனி வேலையும் சைட்ல ஓடிக்கிட்டிருக்கு.

இவரது ஆசிரமத்திலும் மிக அதிகமாக சம்பாதிக்கக் கூடிய பலர் முழுநேர சிஷ்யர்களாக இருக்கிறார்கள். சாமியார்களுக்குரிய ஆடைகளை மட்டுமே இவர்கள் அணிய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் அவர்களது வருமானம் பாதிக்கப்படும் என்பதனாலோ என்னவோ அதைக் கட்டாயப் படுத்துவதில்லை. இந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜக்கியும் பல வண்ண உடைகளில் பத்திரிகைகளுக்குப் போஸ் கொடுத்து வருகிறார்.

ஊர் ஊருக்கு கேம்ப் அடிச்சி யோகா க்ளாஸ் நடத்தி நல்லாவே கல்லா கட்டுறாங்க. வாழ்த்துக்கள். இவரது மனைவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரிடமிருந்தும் கேட்டறிய நேர்ந்தது. மேலும், குமுதத்தில் எழுதிய நித்தியா இப்போது கம்பியை எண்ணக் காத்திருக்கிறார். தற்போது ஜக்கி குமுதத்தில் எழுதவில்லை என்றாலும், யாரோ “ப்ரியா கல்யாணராமன்” என்பவர் இவரைப் பற்றி எழுதி வருகிறார். குமுதத்தின் ராசி இவரையும் விட்டுவைக்காமல் அதி விரைவில் அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்ப்போமாக.

அடுத்ததாக வாழும் கலை ரவிஷங்கர். இவர் கொஞ்சம் அல்பத்தனமான விளம்பரப் பிரியரோ என்று நினைக்குமளவுக்கு சமயங்களில் இவரைப் பற்றிய விளம்பரங்கள் அடிக்கடி ஓவர் டோசாகிறது. பெயருக்கு முன்னால் இரண்டு முறை மட்டும் ஸ்ரீ ஸ்ரீ என்று போட்டுக் கொள்வதால் நல்ல வேளை இரண்டோடு விட்டாரெ என்று பலரும் நிம்மதி அடைகின்றனர் (மைல் நீளத்துக்கு இம்போசிஷன் மாதிரு எழுத விட்டா என்ன செய்யுறது). இவரது அமைப்பின் துணை அமைப்பாக ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மையம் செயல்பட்டு வருகிறதாம். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. இவரது மறுபக்கம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

இப்போதைக்கு குமுதத்தில் முகத்தைக் காட்டி வருவதாலும், கவர்ச்சியான தலைப்புகளில் எழுதி வருவதாலும், மனைவியின் கொலை வழக்கு நடந்து வருவதாலும் ஜக்கி முன்னிலையில் இருக்கிறார். என்றாலும் கடைசிக் கட்ட நிலவரங்கள் மாறுதலுக்குட்பட்டவையாக இருப்பதால் வாழும் கலை ரவிஷங்கர் கம்பி எண்ணவும் வாய்ப்புகள் உருவாகலாம். நாம் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக (எழுதிய நான் உள்பட) இவர்கள் இருவரையும் தவிர்த்த வேறொருவர் உள்ளே போனாலும் போகலாம். தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்!

11 மறுமொழிகள்:

பரிதி நிலவன் said...

இந்த எல்லா நாய்ங்களும் மாட்டினா மகிழ்ச்சிதான்

Dr.Rudhran said...

i bet on jaggi!

Anonymous said...

பல படித்தவர்கள், அறிவாளிகளாகத் தெரிபவர்கள் இவர்களின் பேச்சில் மயங்கி ஏமாறுவதுதான் வேடிக்கை.
சில நல்லது செய்வது போலச் செய்து பணத்தைக் கொள்ளையடிக்கும் இவர்களின் வரவு செலவு கணக்குகள் ஒழுங்காகப் பார்த்தாலே போதும், புகழுக்குள் புகழிழந்து அடை படுவார்கள்.
அரசு துணிவுடன் செய்ய வேண்டும்.
காஞ்சி சுப்புணி தப்பித்தால் இனி கோவிலகள் கொலைக் கூடங்கள் ஆகிவிடும்.

விஜய்கோபால்சாமி said...

@பரிதி: எல்லா வெண்ணையும் உடனே மாட்டனும்னு ஆசைப்பட்டா அது பேராசை. ஒன்னு ஒன்னாதான் மாட்டும். பொறுமை பொறுமை...

@மரு. ருத்ரன்: வாங்க ஐயா. முதல் போனி யாராக இருந்தாலும் நாம நிச்சயம் சந்தோஷப் படலாம். ஆகவே... அடுத்த சாமியார் மாட்டும் வரை காத்திருப்போம்...

@பெயரில்லா: இந்த சாமியார்கள் சிக்குவது அவர்களை மட்டுமல்லாது, அவர்களைப் பிரச்சாரம் செய்தவர்களையும் பிடரியைப் பிடித்து உலுக்கும் அளவுக்கு மக்களுக்குக் கொஞ்சம் போல விழிப்புணர்வு வந்திருக்கிறது. அதனால் இந்த சாமியார்கள் வழியாக நீங்கள் சொல்லுகிற படித்த, அறிவாளிகளாகத் தெரிபவர்கள் (இருப்பவர்கள் அல்ல) இவர்கள் எல்லாம் அம்பலப் படுவார்கள்.

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

நாமக்கல் சிபி said...

//இவர்கள் இருவரையும் தவிர்த்த வேறொருவர்//

//நாம் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக (எழுதிய நான் உள்பட)//

அந்த வேறொருவர் லிஸ்ட்ல நீங்களுமா?

விஜய்கோபால்சாமி said...

வாங்... சிபி அண்ணோவ்... போன வருசம் பொங்கலுக்குப் பாத்தது...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காலம் கடத்தி , அவர்களை உசார் படுத்தாமல் உடனே செய்யவேண்டும்.
சாயிபாபா மேலும் பல புகார் உண்டு. இந்த சாமிமாரை நம்பும், காலில் விழும் அரசியல் வாதிகளை என்ன? செய்வதாக உத்தேசம்.

மாயாவி said...

கல்கி, அம்மா பகவான் அப்படீன்னு சொல்லிகிட்டு இருக்கிற போதைப் பொருள் வியாபாரியை ஏன் விட்டுட்டீங்க. நித்திக்கு அடுத்து கல்கிதான்.

குலவுசனப்பிரியன் said...

வெட்கங்கெட்டுக் கேட்டுத் திரியும் பாபநாசம் பார்ப்பனர் வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர்:

http://thamizhoviya.blogspot.com/2009/01/blog-post_07.html

ராம்ஜி_யாஹூ said...

if so Nakkeeran, kumudam reporter, junior vikatan need not worry about for their business for next 6 months.

jaisankar jaganathan said...

//. குமுதத்தின் ராசி இவரையும் விட்டுவைக்காமல் அதி விரைவில் அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்ப்போமாக.
//
காசேதான் கடவுளடா.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan