இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 28 February, 2011

உனக்கேண்டா இந்த வேண்டாத வேலை!

எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. உனக்கேன் இந்த வேண்டாத வேலை. உள்ளூர்லயே வெல போகலியே, ஐட்ராபாட் போய் நூவ் ஏம் பீக்குதாவு செப்பு...

டிஸ்கி: அனுஷ்கா தயவுல இந்தப் படம் ஓடுனா அதுக்கும் இளைய தளபதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... கிடையாது... கிடையாது...

இந்தக் கொடுமையை தெலுங்கில் கேட்க இந்த சுட்டியைச் சொடுக்குங்கோ:

புலி வேட்டா

விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் நடுவுல பேக்ரவுண்ட்ல ஒருத்தர் இருக்காரே, அவரு தான் நம்ம டிஸ்கோ சாந்தி அம்மா வீட்டுக்காரரு. பேரு ஸ்ரீஹரி.

Wednesday 23 February, 2011

சித்தப்பா... சித்தப்பா...

தமிழ்நாட்டை மகிழ்விக்க எப்படி ஒரு Gap-10 பிறந்திருக்கிறாரோ அவ்வாறே ஆந்திராவை மகிழ்விக்கப் பிறந்தவர் தான் பாலையா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. அவரையும் அவரது அண்ணன் ஹரிகிருஷ்ணாவின் மகன் “ஜூனியர் என்.டி.ஆர்.”ஐயும் வைத்து படம் எடுக்க வசதியில்லாதவர்கள், தங்கள் மனக்குறையைப் போக்கிக் கொள்ள புதிய புதிய கதைகளைக் குறுஞ்செய்திகள் மூலமாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். உங்கள் சந்தோஷத்துக்காக இங்கே கொஞ்சம் வெளியிடுகிறேன்.


[செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையில்...]
பாலகிருஷ்ணா: தம்பி, இந்த ஐடியா நம்பருக்கு முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுப்பா...
கடைகாரர்: 28 ரூபாய் டாக் டைம் வரும் சார்...
பாலகிருஷ்ணா: மீதி ரெண்டு ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட் குடுத்துடு...
ஜூனியர் என்.டி.ஆர்.: சித்தப்பா, க்ரீம் பிஸ்கெட் பாக்கெட்னு கேளு சித்தப்பா...


[பாலகிருஷ்ணா ஓய்வாகப் படுத்திருக்கிறார்...]
ஜூ. என்.டி.ஆர்.: சித்தப்பா, நம்ம காலனில ஸ்விம்மிங் பூல் கட்றதுக்கு நன்கொடை கேட்டு வந்திருக்காங்க...
பாலகிருஷ்ணா: உள்ள போய் சித்தி கிட்ட ஒரு சொம்பு தண்ணி வாங்கி அவுங்ககிட்ட குடுத்துடு நைனா...
ஜூ. என்.டி.ஆர்.: நீ மனுஷன் இல்லை சித்தப்பா... தெய்வம்...


[பாலகிருஷ்ணா ஜூனியர் என்.டி.ஆர்.ஐத் தூங்க வைக்க கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்...]
பாலகிருஷ்ணா: தாத்தா சாகும் போது அவருக்கு 70 வயசு. அப்போ கூட அவரு க்ளாஸ் (Glass) போட்டதில்லை தெரியுமா...
ஜூ. என்.டி.ஆர்.: ஏன் சித்தப்பா? அவரு பாட்டிலோட ராவ அடிச்சிருவாரா?


[பாலகிருஷ்ணாவிடம் சந்தேகம் கேட்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்...]
ஜூ. என்.டி.ஆர்: ஐ.ஐ.டி.க்கு ஆப்போசிட் என்ன சித்தப்பா...
பாலகிருஷ்ணா: யூ.யூ.காஃபி டா கண்ணா...

[பாலகிருஷ்ணாவிடம் ஜூனியர் என்.டி.ஆர்...]
ஜூ. என்.டி.ஆர்: சித்தப்பா, சித்தி புதுசா ஒரு காலேஜ் கட்டிருக்காங்களே, அது பேர் என்ன சித்தப்பா?
பாலகிருஷ்ணா: “பாலகிருஷ்ணா மெடிகல் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்”

[பாலகிருஷ்ணா ஒரு புது நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்...]
ஜூ. என்.டி.ஆர்.: சித்தப்பா, சேர் புதுசா இருக்கு, எப்போ வாங்குனீங்க...
பாலகிருஷ்ணா: இல்லைடா கண்ணா, ஒரு ஆடியோ ரிலீஸ்க்கு போயிருந்தேன். அங்கே “டேக் யுவர் சீட்”னு சொன்னாங்க. அதான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்...

[ஜூனியர் என்.டி.ஆர். சற்று கோபமாக...]
ஜூ. என்.டி.ஆர்.: என்ன சித்தப்பா, ரன்னிங் ரேஸ்ல 1, 2, 3 சொன்ன உடனே ஓட வேண்டியது தானே... ஏன் ஓடல...
பாலகிருஷ்ணா: என் டி-ஷர்ட்ல 4ன்னு நம்பர் போட்டிருந்துச்சு. 1, 2, 3, சொன்னவன் 4 சொல்லுவான்னு காத்திருந்தேன், அவன் சொல்லவே இல்லை...

உங்களுக்காக ஒரு சினி பிட்:


ஏண்டா, அது என்ன பாமா, பம்பு செட்டு சுச்சு போர்டாடா.... டைம் பாம்ல எவண்டா ஆன், ஆஃப், சுச்செல்லாம் வெக்கிறான்...


Balakrishna will delete the recycle bin which others can't delete. Mind it!

Thursday 10 February, 2011

மறவாதீர் பிப்ரவரி 14

நண்பர்களே, பெட்ரோல் டீசல் விலையை வைத்து மக்களிடம் எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கிற கொள்ளைக்கு வெறும் கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போன்றவை மட்டுமே சரியான தீர்வாகாது. இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் போலவே பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் நள்ளிரவுகளில் முன்னறிவிப்பின்றி அமல் படுத்துகின்றன இந்த நிறுவனங்கள்.

பெட்ரோலியப் பொருட்களின் விலைதான் மற்ற அனைத்து அத்யாவசியப் பொருட்களின் விலைகளையும் நிர்ணயிக்கின்றன. நினைத்த நேரத்தில் இவர்கள் விலையை உயர்த்துவதை எத்தனை நாள் தான் சகித்துக் கொள்வது. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்துதான் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் இனி எடுபடாது நண்பர்களே.

ஒரு முதலமைச்சரோ பிரதமரோ சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தூக்கியெறியும் வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் இந்த எண்ணெய் நிறுவனங்களின் போக்கு அப்படியே தான் இருக்கிறது. மக்களே இந்த எண்ணெய் நிறுவனங்களைப் பழிக்குப் பழி வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.

ஒரே ஒரு நாள் அவர்களது வியாபாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அணி திரளுவோம். பிப்ரவரி 14ம் நாளில் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் வாங்காமலிருக்க உறுதியேற்போம்.

மீண்டும் மீண்டும் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்துகிற எண்ணெய் நிறுவனங்களைப் போன்றே நாமும் தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் புறக்கணித்துப் பழி வாங்குவோம்.

#tnfishermen போலவே இந்த முயற்சியும் பரவலான கவனத்தைப் பெற வேண்டும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைய நம் அணைவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம். நண்பர்களே, இந்தப் பதிவின் உள்ளடக்கத்தை பேஸ்புக், ஓர்குட், மற்றைய சோசியல் நெட்வொர்க் தளங்களில் வெட்டி ஒட்டி உங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். நாட்கள் குறைவு. பதிவின் தொடுப்பை ட்விட்டரில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்யுங்கள். இத்துடன் மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதையும் கண்டித்து #AntiPetrolPriceDay #tnfishermen என்ற இரண்டு ஹேஷ் டேகுகளுடன் உங்கள் ட்விட்டுகளை வெளியிடுங்கள். மிக்க நன்றி.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan