இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Friday, 26 February, 2010

உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா....

உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா. நாங்க ஏதோ எங்க பொழப்பப் பாத்துக்கிட்டு எங்க வழியில போயிக்கிட்டிருக்கோம். ராவும் பகலுமா சந்தையில கெடந்து சீரழியிற பொழப்பாக் கெடக்குது எங்க பொழப்பு. இதுல நாங்க என்னமோ ராஜவாழ்க்கை வாழறோம்னு நெனைச்சுக்கிட்டு எங்களோட போட்டி போட வெளிநாட்டுலேந்தெல்லாம் போட்டிக்கு வற்றானுங்க.

எவன் காதலிச்சா எங்களுக்கு என்னய்யா? நாங்க என்னமோ உங்க பொண்ணுங்களையும் பசங்களையும் காதலிக்கத் தூண்டுனமாதிரி எதுக்கெடுத்தாலும் எங்களையே குறை சொல்லுறீங்க. புள்ளைங்கள ஒழுங்க வளக்க வக்கில்லாத நீங்க எங்கள எதுக்குய்யா குறை சொல்றீங்க. உங்க வீட்டுப் புள்ளைங்க காதலிச்சு ஓடிப்போறதுக்கு நாங்களா பஸ் ஏத்தி டிக்கெட் வாங்கிக் குடுத்தோம்? மனசாட்சியே இல்லாம ஏன்யா எங்கள சந்திக்கு இழுக்குறீங்க.

நீங்க நல்லா சாப்பிட்டு உயிர் வாழறதுக்குத்தானய்யா நாங்க தெனம் தெனம் உயிர விடுறதுக்காகவே சந்தைக்கு வற்றோம். ச்சீச்சீ... அந்த நன்றி விசுவாசம் கூட இல்லாத நீங்கள்ளாம் மனுஷங்களாய்யா... கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன். நான் தனி ஆளில்ல...

என்னது நான் யாரா? இவ்வளவு தூரம் வந்தீங்கள்ள, இன்னும் கொஞ்ச தூரம் மௌச உருட்டி நீங்களாவே கீஈஈஈழ வந்து பாத்துட்டுப் போங்க.Thursday, 25 February, 2010

அப்ரைசல்

வணக்கம்.

இங்க ப்ளாக் படிக்கிறவங்க, எழுதுறவங்க நெறைய பேர் ஐடி ஃபீல்டுல வேலை பாக்கறவங்களாத்தான் இருப்பீங்க. நானும் ஒரு மல்டி நேஷனல் கம்பெனி எம்ப்ளாயிதான். எனக்கு நடந்தத உங்களுக்கெல்லாம் சொல்லனும்னு தோணுச்சு. அதான் இங்கே போஸ்ட் போடுறேன்.

மொதல்ல நான் வேற ஒரு கம்பெனில வேலை பாத்தேன். அங்க எனக்கு நல்ல மரியாத இருந்துச்சு. எனக்கு நெறைய ப்ராஜெக்ட்ஸ் வந்துச்சு. நானும் நல்லாதான் பெர்ஃபார்ம் பண்ணிட்டிருந்தேன்.

என்ன பிரச்சனையோ தெரியல, எங்க கம்பெனிய இன்னொரு கம்பெனி விலைக்கு வாங்கிருச்சு. புது மேனேஜ்மெண்ட்ல என்ன கொஞ்ச கொஞ்சமா இக்னோர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வந்துகிட்டிருந்த ப்ராஜெக்ட்ஸ் படிப்படியா குறைஞ்சு, ஒரு கட்டத்துல சுத்தமா நின்னு போச்சு.

இத விட வேதனை என்னன்னா, சீனியரான என்ன விட்டுட்டு புதுசா வந்த பசங்களுக்கு நெறைய ப்ராஜெக்ட்ஸ் குடுக்க ஆரம்பிச்சாங்க. இயர் எண்ட்ல அவங்களுக்கு நல்ல ஹைக்கும் போனசும் குடுத்தாங்க. ஆனா எனக்கு அவுங்க அளவுக்கு ஹைக்கோ போனசோ குடுக்கல.

எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. சமயத்துல பேப்பர் போட்டுரலாமான்னு (ரிசைன் பண்ணிடலாமான்னு) தோணும். ஆனா, இருக்கற ரெசெஷன்ல இந்த வேலையும் போச்சுன்னா சோத்துக்கு அல்லாடற நெலமை வந்துடுமேன்னு பல்லக் கடிச்சிக்கிட்டு பொறுத்துக்கிட்டிருக்கேன். என் நிலமை உங்க யாருக்கும் வரக் கூடாது. இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியல. துக்கம் தொண்டைய அடைக்குது. நான் யாருன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இருந்தா ஸ்க்ரோல் பண்ணி கீழ வாங்க.
Wednesday, 24 February, 2010

பாரு பாரு நல்லா பாரு...

Sunday, 21 February, 2010

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........

டிவில அம்மன் கோயில் கிழக்காலே படம் ஓடிக்கிட்டிருந்துச்சு. புள்ளைய தொட்டில்ல போட்டு ஆட்டிட்டு அப்பத்தான் வந்து உக்காந்தேன். அதுக்குள்ள க்ளைமேக்சே வந்திருச்சு. சரி வந்தது வந்துட்டோம் இதையாவது பாத்துருவோம்னு உக்காந்தேன்.

ராதா ஜெயிலுக்குப் போயிட்டு அப்பத்தான் திரும்பி வந்தாங்க. நம்ம கேப்-10 வந்து பாக்காத ஏக்கத்துல அவுங்க விஷ பாட்டில தெறக்கறாங்க. அன்னாந்து குடிக்கப் போன நேரத்துல நம்ம கேப்-10 “கண்மணீ.......”ன்னு ஒரு சவுண்டு குடுக்கறாரு.

சரியா அதே நேரம் பின்னாலேந்து ஒரு சத்தம்.

என்ன கொடுமை சார் இது? இதுங்க ஒன்னு சேந்த சந்தோசத்துல சத்தம் போட்டு எம் புள்ளைய எழுப்பிருச்சுங்க....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan