இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 25 February, 2010

அப்ரைசல்

வணக்கம்.

இங்க ப்ளாக் படிக்கிறவங்க, எழுதுறவங்க நெறைய பேர் ஐடி ஃபீல்டுல வேலை பாக்கறவங்களாத்தான் இருப்பீங்க. நானும் ஒரு மல்டி நேஷனல் கம்பெனி எம்ப்ளாயிதான். எனக்கு நடந்தத உங்களுக்கெல்லாம் சொல்லனும்னு தோணுச்சு. அதான் இங்கே போஸ்ட் போடுறேன்.

மொதல்ல நான் வேற ஒரு கம்பெனில வேலை பாத்தேன். அங்க எனக்கு நல்ல மரியாத இருந்துச்சு. எனக்கு நெறைய ப்ராஜெக்ட்ஸ் வந்துச்சு. நானும் நல்லாதான் பெர்ஃபார்ம் பண்ணிட்டிருந்தேன்.

என்ன பிரச்சனையோ தெரியல, எங்க கம்பெனிய இன்னொரு கம்பெனி விலைக்கு வாங்கிருச்சு. புது மேனேஜ்மெண்ட்ல என்ன கொஞ்ச கொஞ்சமா இக்னோர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வந்துகிட்டிருந்த ப்ராஜெக்ட்ஸ் படிப்படியா குறைஞ்சு, ஒரு கட்டத்துல சுத்தமா நின்னு போச்சு.

இத விட வேதனை என்னன்னா, சீனியரான என்ன விட்டுட்டு புதுசா வந்த பசங்களுக்கு நெறைய ப்ராஜெக்ட்ஸ் குடுக்க ஆரம்பிச்சாங்க. இயர் எண்ட்ல அவங்களுக்கு நல்ல ஹைக்கும் போனசும் குடுத்தாங்க. ஆனா எனக்கு அவுங்க அளவுக்கு ஹைக்கோ போனசோ குடுக்கல.

எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. சமயத்துல பேப்பர் போட்டுரலாமான்னு (ரிசைன் பண்ணிடலாமான்னு) தோணும். ஆனா, இருக்கற ரெசெஷன்ல இந்த வேலையும் போச்சுன்னா சோத்துக்கு அல்லாடற நெலமை வந்துடுமேன்னு பல்லக் கடிச்சிக்கிட்டு பொறுத்துக்கிட்டிருக்கேன். என் நிலமை உங்க யாருக்கும் வரக் கூடாது. இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியல. துக்கம் தொண்டைய அடைக்குது. நான் யாருன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இருந்தா ஸ்க்ரோல் பண்ணி கீழ வாங்க.
3 மறுமொழிகள்:

காரணம் ஆயிரம்™ said...

அட ஏங்க நீங்க வேற, சமயமில்லாத சமயமா...

cheena (சீனா) said...

அய்யோ பாவமே

cheena (சீனா) said...

அய்யோ பாவமே

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan