இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Friday, 26 February, 2010

உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா....

உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா. நாங்க ஏதோ எங்க பொழப்பப் பாத்துக்கிட்டு எங்க வழியில போயிக்கிட்டிருக்கோம். ராவும் பகலுமா சந்தையில கெடந்து சீரழியிற பொழப்பாக் கெடக்குது எங்க பொழப்பு. இதுல நாங்க என்னமோ ராஜவாழ்க்கை வாழறோம்னு நெனைச்சுக்கிட்டு எங்களோட போட்டி போட வெளிநாட்டுலேந்தெல்லாம் போட்டிக்கு வற்றானுங்க.

எவன் காதலிச்சா எங்களுக்கு என்னய்யா? நாங்க என்னமோ உங்க பொண்ணுங்களையும் பசங்களையும் காதலிக்கத் தூண்டுனமாதிரி எதுக்கெடுத்தாலும் எங்களையே குறை சொல்லுறீங்க. புள்ளைங்கள ஒழுங்க வளக்க வக்கில்லாத நீங்க எங்கள எதுக்குய்யா குறை சொல்றீங்க. உங்க வீட்டுப் புள்ளைங்க காதலிச்சு ஓடிப்போறதுக்கு நாங்களா பஸ் ஏத்தி டிக்கெட் வாங்கிக் குடுத்தோம்? மனசாட்சியே இல்லாம ஏன்யா எங்கள சந்திக்கு இழுக்குறீங்க.

நீங்க நல்லா சாப்பிட்டு உயிர் வாழறதுக்குத்தானய்யா நாங்க தெனம் தெனம் உயிர விடுறதுக்காகவே சந்தைக்கு வற்றோம். ச்சீச்சீ... அந்த நன்றி விசுவாசம் கூட இல்லாத நீங்கள்ளாம் மனுஷங்களாய்யா... கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன். நான் தனி ஆளில்ல...

என்னது நான் யாரா? இவ்வளவு தூரம் வந்தீங்கள்ள, இன்னும் கொஞ்ச தூரம் மௌச உருட்டி நீங்களாவே கீஈஈஈழ வந்து பாத்துட்டுப் போங்க.6 மறுமொழிகள்:

அண்ணாமலையான் said...

ம்ம்ம் நடத்துங்க....

Madurai Saravanan said...

அய்யா எங்களுக்கு ஒரு டுவிஷ்டு கடைசியிலே ...சுப்பர். வாழ்த்துக்கள்

விஜய்கோபால்சாமி said...

அண்ணாமலை அண்ணே, தொடர்ந்து வாசிச்சு இன்ப அதிர்ச்சி குடுக்குறீங்க.

என்ன கொடுமை சரவணன்? புதுசா ஒரு ப்ளாகத் தொறந்து அதை மார்கெட் பண்றதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு பாருங்க.

jaisankar jaganathan said...

நான் முருங்கைக்காயை எதிர்பார்த்தேன்

jaisankar jaganathan said...

//உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா....//
என்கிட்ட கேக்குற மாதிரி இருக்குது
என்ன தல இது

விஜய்கோபால்சாமி said...

ஜெய், உங்களைப் போலவே ஒரு நண்பர் பூசணிக் காயை எதிர்பார்த்ததாய்த் தொலைபேசியில் சொன்னார்.

இது வாசகர்களைப் பாத்து நான் கேக்கற கேள்வியில்லை. கத்திரிக்காய் கேட்கிற கேள்வி? முதலில் “ஏண்டா, உங்களுக்கெல்லாம் அறிவே கெடையாதா”ன்னு தலைப்பு வைக்கச் சொல்லி கத்திரிக்காய் என்னிடம் சொன்னது. மரியாதை கருதி அவ்வாறு தலைப்பு வைக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்... :))

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan