இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Wednesday, 15 September, 2010

பதிவர்கள் சன் பிக்சர்சிடம் கற்க வேண்டிய பாடங்கள்

பாடம் 1: உங்களிடம் சரக்கு இருக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் பத்து பதிவுகளை எழுதி வலையேற்றக் கூடாது. சன் பிக்சர்ஸ் எப்போதும் ஒரு படம் வெளிவந்து சில நாட்கள் கழித்துத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும். அதே மாடலை நீங்களும் பின்பற்ற வேண்டும்.

பாடம் 2: நீங்கள் வழக்கமாக வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ பதிவு எழுதுபவர் என்றால் முறை வைத்து நீங்கள் எழுதுகிற நாளில் எழுதிவிடுவது நல்லது. முந்தைய பதிவுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதற்காக அடுத்த பதிவை வெளியிடுவதைத் தாமதப் படுத்தக் கூடாது. சன் பிக்சர்சின் புதிய படம் தயாராகிவிட்டால் முந்தைய படத்தைத் தூக்கிவிட்டுக் கூட புதிய படத்தை வெளியிடுவது இங்கே குறிப்பிடத் தக்கது.

பாடம் 3: செலவு பண்ணத் தயங்கக் கூடாது. சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய செலவு பண்ணுகிறார்கள். அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் செலவு பண்ணி யோசித்து எழுத வேண்டும். எழுதுறது மொக்கையாக இருந்தாலும் கர்ம சிரத்தையாக எழுதி அதற்காக நீங்கள் பத்து பதினைந்து மணிநேரம் உழைத்து எழுதிய எஃபெக்டைக் காட்ட வேண்டும்.

பாடம் 4: பப்ளிசிட்டி முக்கியம். சன் பிக்சர்சின் படங்களுக்கு அதன் சகோதர ஊடகங்களான தினகரன் குங்குமம் போன்றவற்றில் நிறைய பப்ளிசிட்டி கொடுப்பார்கள். அதே போல நீங்களும் பதிவு எழுதியதை, ட்விட்டர், ஃபேஸ்புக், ஓர்குட், கூகுள் பஸ், போன்ற அனைத்து சோசியல் நெட்வொர்க்கிங் சைட்களிலும் உள்ள நண்பர் வட்டத்துக்கு அறிவிக்க வேண்டும். பல பேருக்கு உங்கள் புதுப் பதிவுக்கான லிங்க்கை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பாடம் 5: சும்மா பப்ளிசிட்டி மட்டும் கொடுத்தால் பத்தாது. தொடர்ச்சியான பப்ளிசிட்டி முக்கியம். ஒரு மணிநேரத்தில் எத்தனை முறை எந்திரன் ட்ரைலரைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு வழக்கமாகப் பின்னூட்டுகிறவர்கள் உங்களது கடைசிப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டிருக்கவில்லையெனில் அவர்களுக்கு சிறப்பாக மின்னஞ்சல் மூலம் நினைவூட்டலாம்.

பாடம் 6: உங்களுக்கு ஆங்கிலமோ அல்லது வேறு மொழியோ நன்கு தெரியுமெனில், உங்கள் மொழிபெயர்ப்புத் திறமையைக் காட்டத் தயங்கக் கூடாது. “கண்டேன் காதலை” “தில்லாலங்கடி” போன்ற படங்கள் தெலுங்கில் நன்றாக ஓடியவை. ரீமேக் அல்லது ரீமிக்ஸ் செய்யத் தயங்கக் கூடாது. ரைட்ஸ் வாங்கி எழுதுறீங்களோ அல்லது ரைட்சப் பத்தி கவலையே படாம எழுதுறீங்களோ அது விஷயம் இல்லை. ஆனா, தேவையேற்பட்டால் பிறமொழிகளை நம்புவதும் தப்பில்லை. இன்னைக்கே மலையாளமோ தெலுங்கோ கன்னடமோ கற்க ஆரம்பியுங்கள். நிச்சயம் பலனளிக்கும்.

பின்கு: பல நாட்களாக (திண்டுக்கல் சாரதி காலத்திலிருந்து) ட்ராப்டில் இருந்த பதிவு. அங்கே இங்கே கொஞ்சம் சொட்டை தட்டி வலையேற்றியுள்ளேன். (டிஸ்கிளைமரை டிஸ்கின்னு சுருக்குறீங்க, அது மாதிரி நான் பின்குறிப்பை பின்கு ன்னு சுருக்கிருக்கேன். என்னைப் பாத்து நீங்க வேற மாதிரி யோசிச்சு டிஸ்கியையும் பின்குறிப்பையும் சேத்து டின்கு ன்னு சுருக்கி... அதை யாராவது கடைசி எழுத்துலேந்து முதல் எழுத்தா திருப்பி படிச்சு... ஏன் இந்த வேண்டாத சங்கடமெல்லம்...)

11 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//பாடம் 3: செலவு பண்ணத் தயங்கக் கூடாது. சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய செலவு பண்ணுகிறார்கள். அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் செலவு பண்ணி யோசித்து எழுத வேண்டும். எழுதுறது மொக்கையாக இருந்தாலும் கர்ம சிரத்தையாக எழுதி அதற்காக நீங்கள் பத்து பதினைந்து மணிநேரம் உழைத்து எழுதிய எஃபெக்டைக் காட்ட வேண்டும்.//

சன் டிவி உழைக்கிறார்களா ? யாரோட உழைப்பையோ விற்கிறார்கள். பதிவர்களும் அது போல் செய்ய வேண்டுமென்றால் பிறர் பதிவை திருடித்தான் தன் பதிவில் போட்டுக் கொள்ளனும்.

:)

விஜய்கோபால்சாமி said...

கோவி. சார், இது ஒரு இழிவு நவிற்சி... பின்னூட்டத்துல கடைசியா இருக்கற ஸ்மைலியைப் பாத்தா அத நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டது தெளிவா தெரியுது. நன்றி.

சேட்டைக்காரன் said...

சமீபகாலமாக சன் பிக்சர்ஸ், பதிவர்கள் இருவருமே வலையுலகில் மிகவும் ’அடி’படுகிறார்கள் என்பதால் தான் இப்படியொரு இடுகையோ? :-)

நல்லாயிருக்கு!

ஸ்வர்ணரேக்கா said...

//சத்தியமா இது நக்கல்//

ஹா.. ஹா... ஹா...

இது சூப்பர்...

jaisankar jaganathan said...

// சும்மா பப்ளிசிட்டி மட்டும் கொடுத்தால் பத்தாது. //

வரலாறு ரொம்ப முக்கியம். அதுவும் தாத்தாவோட வரலாறு

cheena (சீனா) said...

அன்பின் விஜய்கோபால்சாமி

நல்ல அறிவுரைகளை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்

பின்பற்றலாமே

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

விஜய்கோபால்சாமி said...

அன்பின் சீனா சார்,

நீங்கள் எழுதிய ஆறு பின்னூட்டங்கள் வழியாக, என்னுடைய ஆறு பதிவுகளைப் படித்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். மிக்க நன்றி.

___________________

ஜெய்,

மக்கள் மங்குனிகளாக இருக்கும் வரை மன்னரின் வரலாறு கடல் கடந்து புகழ் பரப்பும்.

___________________

ஸ்வர்ண ரேக, வருக வருக

___________________

சேட்டை, அடிபடுவது கூட பரவாயில்லை, மிதிபடுவது அல்லவா இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

___________________

Anonymous said...

உங்க வலை பக்கம் நல்ல சிரிக்க வக்கிது மற்றும் சிந்திக்கவும் வைகிறது . இரண்டாவது முக்கியம், முதலாவது மிகவும் முக்கியம் ;-)

புதுகைத் தென்றல் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க

முரளிகண்ணன் said...

கலக்கல்

சந்தனமுல்லை said...

hahaa....

/ஆனா, தேவையேற்பட்டால் பிறமொழிகளை நம்புவதும் தப்பில்லை. இன்னைக்கே மலையாளமோ தெலுங்கோ கன்னடமோ கற்க ஆரம்பியுங்கள். நிச்சயம் பலனளிக்கும்.
/ athaavathu pozaichu pogatumey....:-)))

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan