இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 19 April, 2010

கேள்வியுடன் லதானந்த்...

1. அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
கிடைக்காமல் திண்டாடியதை விட கிடைத்துத் திண்டாடிய அனுபவம் சுவையானது. கதவு மேல எழுதிருக்கறதையாச்சும் படிச்சுட்டுப் போயிருக்கனும். இல்லையா எழுத்துக்கு மேல இருந்த படத்தையாவது பாத்துட்டுப் போயிருக்கனும். ரெண்டையுமே பண்ணாததால கடைசியா ப்ளம்பர்னு சொல்லித் தப்பிச்சேன்.

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
வெறுத்து ஒதுக்கியவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஓரளவு முன்னேறியிருக்கிறேன் என்றால் அது சில நண்பர்கள் மீதான பொறாமையினால்தான். நட்பும் தொடர வேண்டும் என்ற காரணத்தால் பதிலை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
எதிர்பார்த்தே எந்த அனுபவமும் கிடைக்கலை... எதிர்பாக்கலைன்னா மட்டும் கெடைச்சுடுமாக்கும்... :(

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
அந்த அனுபவத்தைத்தான் மொதல் கேள்விக்குப் பதிலா சொல்லிருக்கேன்.

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
மரித்துப் போனவர்களிடம் கேட்காமல்  விட்ட மன்னிப்புகள் சில.

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
அது கொஞ்சம் ஏடா கூடமான படம். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக இருட்டுக்குள் ஒளிந்து கொள்ள விரைந்த நேரம் டிக்கெட் கிழிப்பவன் என் முகத்தை உற்று நோக்கி “நீங்க... நீங்க...” என்று எதையோ யோசிக்கத் தொடங்கினான். “அடப் பாவி... நீ எங்க வீட்டுக்குத் தெரிஞ்சவனா?” என்று மனதுக்குள் பதறிய வேளையில் “போன வாரம் பழைய டிக்கெட்ட ப்ளாக்ல வாங்கி ஏமாந்தது நீங்கதானே” என்றான். போன உயிர் அப்போதுதான் திரும்பி வந்தது.

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
கூட்ட நெரிசல் தாளாமல் சாதாரண டிக்கெட்டுடன் முதல் வகுப்பில் (பரங்கிமலை - கிண்டி) பயணம் செய்ததுதான் நான் செய்ததில் ஆகப் பெரிய சட்ட மீறல், பரிசோதகரிடம் பிடிபடாமல். சொந்தமாக வீடோ நிலமோ இன்னும் வாங்காத காரணத்தால் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
வாதம் செய்பவர்களிடம் முகம் கொடுத்து விவாதிக்கலாம். விதண்டாவாதம் செய்வதற்கென்றே சிலர் எழுதுவார்கள். அவர்களிடம் அடையாளங்களை மறைத்துக் கொண்டுதான் விவாதிக்க நேரிடும். அனானி கமெண்ட் என்றாலும் தனிநபர் தாக்குதல்களற்று சரியான பதில்கள் அல்லது கேள்விகளுடன் பின்னூட்டியிருக்கிறேன். சாக்கடைகளுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல அவசியம் இல்லை.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
இரண்டையும் படிக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும் சாரு நிவேதிதா என்ற புண்ணியவான் அந்தக் குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்துள்ளார்.

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா? 
தாராளமா குடுக்கலாம். எனக்கு விளம்பரம்னா ரொம்ப பிடிக்கும்.

கொசுறு: கடந்த ஜி-டாக் உரையாடலில் காதுகுத்துக்கு வாரதமை குறித்து கேட்கவில்லை. காரணத்துடன் தான். ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு வாத்தியார் மாதிரி யாரையும் கேள்வி கேட்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. அதனாலேயே கேட்கவில்லை. மற்றபடி என் வீட்டு நிகழ்வைச் சாக்கிட்டு உங்கள் தமக்கையைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தீர்கள். அது முடியாமல் போன வகையில் எனக்கும் கொஞ்சம் வருத்தமே.

4 மறுமொழிகள்:

Unknown said...

சாட்டிங்கலியே காலம் ஓடுதுபோல

லதானந்த் said...

பதில்கள் மீதான குறிப்புறையைத் தனி இடுகையாக வெளியிட்டிருக்கிறேன்.

கொல்லான் said...

பதில்கள் நல்லாத்தான் இருக்கு.
ஆப்பீசர் மட்டும்தான் கேள்வி கேக்கணுமா?
இதோ எனக்கும் கேள்வி கேக்க தெரியும்.

ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க?

വിജയ ഗോപല്സാമി എന്ടര് പെയര്‍ വൈത്തതന്‍ കാരണം?- இதுக்கு கண்டிப்பா சரியான பதில் சொல்லியே ஆகணும்

உங்க அப்பாவுக்கு நீங்க எத்தினையாவது பையன்? - இதை இங்கிலீஸ்ல எப்படி சொல்லறது?

புறா கால்ல கடுதாசி கட்டி அனுப்பி வெச்சா புறாவ என்ன பண்ணுவீங்க?

நீங்க பாமரனா இல்ல பண்டிதனா?

Unknown said...

கொல்லான், பதில்கள் திங்கட்கிழமை மாலைக்கு ஷெட்யூல் செய்யப்பட்டுள்ளது. நன்றி.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan