![]() |
பரித்தாள ரவி |
இவர்களில் பரித்தாள ரவியாக இந்தி நடிகர் விவேக் ஓபராயும், சூரியாக நடிகர் சூர்யாவும் நடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரித்தாள ரவி “ப்ரதாப் ரவி”யாகவும் ஒபுல்ரெட்டி “புக்காரெட்டி”யாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
![]() |
மாதல்லசெருவு சூர்யநாராயண ரெட்டி (சூரி) |
மறைந்த என்.டி.ஆரின் மனைவி லக்ஷ்மி சிவபார்வதி ராம்கோபால் வர்மா மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “என்.டி.ஆர் தெலுங்கு மக்களின் பெருமைக்குரிய ஆளுமை. அவர் ரவுடியிசத்தை ஆதரிப்பது போன்று சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராம்கோபால் வர்மா என்ற சைக்கோ தொடர்ந்து இது போன்ற படங்களையே எடுத்து வருகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்துத் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில் “என்.டி.ஆர். தெலுங்கு மக்களின் ஆதர்ச நாயகன். அவரை அவதூறு செய்வதை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது. என்.டி.ஆரை அவதூறு செய்கிற அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ராம்கோபால் வர்மா தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளில் பரித்தாள ரவி, ஒபுல்ரெட்டி, சூரி, இந்த மூவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது என்று சொல்லி வந்தார். தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு மேற்சொன்ன மூவருக்கும் இடையிலான குடும்பப் பகைதான் கதையின் அடிநாதம் என்று கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய சிவாஜிராவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இது குறித்து ராம் கோபால் வர்மா தரப்பிலிருந்து “என்.டி.ஆர். ரசிகர்களைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. சத்ருகன் சின்ஹா வருகிற பகுதி முழுவதும் கற்பனை என்ற போதிலும் இதனால் பலர் மனம் புண்பட்டிருக்கிற காரணத்தால் அந்தக் காட்சிகள் நீக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்து.
5 மறுமொழிகள்:
சேனல் மாத்தும்போது, யாரோ ஒருத்தர் கோபாவேசமா பேசிக்கிட்டிருக்கார். திடீர்ன்னு ஒரு கிளிப்பிங்ஸ்...ரெண்டு பேரு கழுத்தை நெறிச்சுக்கறாங்க... ப்ரியாமணி வேற மிரண்டு போய் உட்கார்ந்திருக்காங்க...ஒன்னும் புரியாம மாத்திட்டேன்...:-))...ஸ்ஸப்பா....இப்போ புரியுது...பகிர்வுக்கு நன்றி!
தமிழ்ல வந்தா பார்க்கலாம்
@சந்தனமுல்லை: வருக வருக...
@யாசவி: படத்தின் தமிழ் உரிமையை “ரெட் ஜெயண்ட்” நிறுவனம் வாங்கியிருப்பதாகக் கேள்வி.
கொசுறுத் தகவல்: படத்தின் இரண்டாம் பகுதி இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகுமாம்.
எல்லா நீயூஸும் தெலுங்கு தேசம் பத்தினதாவே இருக்கு. தமிழ் நாட்டை மறந்துடாதீங்க
வாங்கப்பூ... பின்னூட்டுல தான் சொல்லிருக்கோம்ல... ரெட் ஜெயண்ட் தமிழ் ரைட்ஸ் வாங்கிருக்காங்கன்னு... பின்ன எப்படி முழுக்க முழுக்க தெலுங்கு தேச நியூசுன்னு சொல்றீங்க
Post a Comment