இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 29 November 2010

குமுதம் எல்லாம் நம்மள... ஹி ஹி

நெட்டில் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே நிறைய சைட்டுகள் இருக்கிறதாமே? - ராஜிராதா, பெங்களூர்
ஒருவர் மீது ஒருவர் அல்ல, ஒருவர் மீது மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிறைய சைட்டுகள் இருக்கின்றன. அவர் தமிழக முதல்வர். சாலையில் நார் மீதாவது காகம் எச்சம் போட்டுவிட்டால் கூட “என்ன ஆட்சி இது. காகம் எச்சம் போடுகிறது” என்று எரிந்து விழுகிறார்கள். [அரசு பதில்கள், குமுதம் 24.11.2010]
அடிச்சான் பாருய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! வலையுலகம் குமுதத்தை விமர்சனம் செய்த காலமெல்லாம் போய் குமுதம் வலையுலகைக் கேலி செய்யிற நெலைமை வந்திருச்சு பாருங்க. அதோட சேத்து முதலமைச்சருக்குப் பொன்னாடையும் போத்திருச்சுங்களே, பண்ணாடைங்க.

கொஞ்ச நாள் முந்தி குமுதத்துல ஒரு காக்கா தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மேலயே எச்சம் போட்டுக்கிட்டிருந்துச்சு. அந்த எச்ச காக்கா இப்போ கல்கில எழுதுது. இதையெல்லாம் வசதியா மறந்துடுறானுங்க. வாய்ல வடையிருக்கிற காக்காயத் தான இவனுங்க காக்கா புடிப்பானுங்க. புடிக்கட்டும் புடிக்கட்டும்.

4 மறுமொழிகள்:

Unknown said...

குமுதம் நித்தியானந்தா பத்தி எழுதுங்க. வுடாதீங்க

பாலு மகேந்திரன் said...

குமுதம் வாங்குனோமா படம் பார்த்தோமான்னு இல்லாம, அந்தக் கருமத்தை ஏன் படிக்கிறீர்?

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha ,sema matter

சி.பி.செந்தில்குமார் said...

>>>பாலு மகேந்திரன் said...
குமுதம் வாங்குனோமா படம் பார்த்தோமான்னு இல்லாம, அந்தக் கருமத்தை ஏன் படிக்கிறீ

haa haa sema coment

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan