இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 15 November, 2010

மிருக புத்திரன் கவிதைகள் - பகுதி 1 [15/11/210]

________________ (டேஷ்) புத்திரன்

அக்னி புத்திரன்
பாரதி புத்திரன்
காந்தி புத்திரன்
தேவி புத்திரன்
கேரள புத்திரன்
ஆந்திர புத்திரன்
கர்நாடக புத்திரன்
வேளாள புத்திரன்
வன்னிய புத்திரன்
முக்குல புத்திரன்
வட தமிழக புத்திரன்
மதுரை மண்ணின் புத்திரன்
கொங்கு மண்டல புத்திரன்
இவற்றுள் ஒன்றிர்க்குப்
புத்திரனாய் இல்லாவிடில் எழுத்துலகில்
பிழைத்தலரிதென்ற காரணம் பற்றி
கோபால்சாமி புத்திரன் இன்று முதல்
மிருக புத்திரன் ஆகிறேன்,
சகலரும் அறிக.
என் சொல் கேளீர், நீங்களும்
கோடிட்ட இடம் நிரப்பிப்
பெயருக்கு முன் சேர்ப்பீர்!அண்ணாமலைன்னு எனக்கொரு நண்பேன். அவனுக்கு செல்போன்ல பேசுறதுன்னாலே அலர்ஜி. போன்ல கூப்பிடுற எல்லார் கிட்டயும் “எதா இருந்தாலும் லெட்டர் எழுதுங்க”ன்னு சொல்றதுக்கு மட்டும் ஒரு 1100 வச்சிருக்கான். சமீபத்துல கார் எடுக்கறதுக்கு எடைஞ்சலா இருந்த அண்ணாமலையோட பைக்க நகத்தச் சொல்றதுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் காலிங் பெல்லை அடிச்சிருக்கார். “ஏன்யா லெட்டர் எழுதிக் கேட்டுட்டு வரலை”ன்னு அந்தாள்கிட்டயும் சண்டை.

அடுத்த வீட்டுக்கே இந்த நெலைமைன்னா அடுத்த ஸ்டேட்ல இருக்கற என் நிலைமைய யோசிச்சுப் பாருங்க? அஞ்சு பதிவு எழுதியாச்சுன்னா ஆறாவது பதிவு எழுதுறதுக்கு முன்னாடி அந்த அஞ்சு பதிவையும் அதுக்கு வந்த கமெண்ட்சையும் கடிதமா எழுதி அவனுக்கு அனுப்பியாகனும்.

ரீஜண்ட்டா அந்தக் கணக்கு மிஸ்ஸாகி ஆறேழு பதிவு எழுதிட்டேன். வரலாற்றிலேயே மொதல் முறைய அம்பத்தி ரெண்டு செகெண்ட் போன்ல பேசினான். அதுவும் அவுட்-கோயிங். அம்பத்தி ரெண்டு செகெண்ட்ல நான் ஒரு ஹலோ கூட சொல்லலை. ஆனா அதுக்குள்ள லெட்டர் எழுதாததுக்கு கடுமையான வசவு, அடுத்த பதிவுல கவிதை எழுதனும், கவிதை என்ன மாதிரி எழுதனும், என்னைக்குள்ள எழுதனும், எழுதலைன்னா என்ன ஆகும்ங்கறதையெல்லாம் சொல்லிட்டு, நான் சரின்னு சொல்லக் கூட நேரம் குடுக்காம கட் பண்ணிட்டான்.

அவனோட அழைப்பு அம்பத்தி மூணாவது செகெண்டத் தொட்டிருந்தா கூட நீங்க என்னை உயிரோட பாத்திருக்க முடியாது. அவ்வளவு கடுமையா இருந்துச்சு. விளைவுகளுக்குப் பயந்து அவன் சொன்ன புதன் கிழமைக்கு ரெண்டு நாள் இருக்கையிலேயே பதிவு எழுதிட்டேன். அதுவும் அவன் சொன்ன மாதிரியே எழுதிட்டேன்.

மிருக புத்திரன் கவிதைகள இனிமே நீங்க மாசம் ஒரு தடவையாச்சும் படிக்கலாம். அதுக்கு நான் இல்லை, அண்ணாமலை கேரண்ட்டி.

3 மறுமொழிகள்:

jaisankar jaganathan said...

//மிருக புத்திரன் கவிதைகள இனிமே நீங்க மாசம் ஒரு தடவையாச்சும் படிக்கலாம்//
சனி புத்திரன்,யம புத்திரன், உத்தம புத்திரன் 3ம் விட்டுப்போச்சே

கொல்லான் said...

நல்லா இருந்த மனுசனை இப்படிப் பண்ணிப் போட்டாங்களே?
இனி மாசா மாசம் கவுஜை வர்ற அன்னைக்கி எங்கியாச்சும் போயிற வேண்டியது தான்.

jaisankar jaganathan said...

விஜய் உங்களோட wordpress தளத்துக்கு போயி புது ப்லொக் அட்ரஸ் குடுங்க. அதனால தான் இங்க பின்னூட்டம் குறையுதுன்னு நினைக்கிறேன்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan