இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 5 April, 2010

விஜய்கோபால்சாமி பதில்கள் - 1

[சில பேர் கேள்வி பதில் எழுதுறதப் பாத்து, எனக்கும் பதிவர்களின் கேள்விக்குப் பதில் எழுதனும்னு கொலை வெறியாகிப் போச்சு. அதன் விளைவுதான் நீங்க படிக்கிற இந்தப் பதிவு. முதல் முறை என்பதால் விஜய்கோபால்சாமி என்ற ஒரே ஒரு பதிவரின் கேள்விக்கு மட்டும் இங்கே பதில் எதுகிறேன். இதையே அழைப்பா எடுத்துக்கிட்டு நீங்களும் கேள்விகள அனுப்புங்க. குறைந்தது அஞ்சு கேள்வி சேந்தாலும் பதிவு போட்டு பதில் சொல்லிடுவேன்.]



தில்லானா மோகனாம்பாள் படத்த இப்போ ரீமேக் பண்ணா, யார் யார் நடிச்சா பொருத்தமா இருக்கும்?
ஏம்ப்பா, நீ இருபத்தஞ்சு வருஷமா கோமால இருந்தியா? ஏற்கெனவே கங்கைஅமரனும் சுரேஷ்கிருஷ்னாவும் ரீமேக் பண்ணிட்டாங்கப்பா. முடிஞ்சா தி.மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமம் மூணு படத்தையும் அடுத்தடுத்து டிவிடி ப்ளேயர்ல ஓடவிட்டுப் பாரு.


சானியா ரெண்டாந்தாரமா வாக்கப்படப் போறாங்களாமே? என்ன கொடுமை இது?
கல்யாணம் பண்ற வகையில சானியா மாலிக்குக்கு ரெண்டாவது. நிச்சயம் பண்ணுன வகையில மாலிக் சானியாவுக்கு ரெண்டாவது. ரெண்டுக்கு ரெண்டு சரியாப் போச்சு... விடுங்கப்பா இதையெல்லாம் போய் நோண்டிக்கிட்டு.


ஐடி கம்பெனி டிரைனேஜ்ல கிலோ கிலோவா காண்டம் கிடைச்ச செய்தியெல்லாம் சமீபமா பேப்பர்கள்ள வற்றதில்லையே?
எந்தக் காலத்துலய்யா இருக்கே? அது மாதிரி விஷயங்கள் எல்லாம் இப்போ சிடில தான் வருது. இனிமே உனக்கு சிடி வாங்குற செலவும் இருக்காது. எதாவது ஒரு நியூஸ் சேனலப் போட்டுப் பாத்தாலே போதும்.


மனோகரா படத்தை யாராச்சும் ரீமிக்ஸ் பண்ண மாட்டாங்களா?
வேணாம்டா, அப்புறம் அதுக்கொரு பாராட்டு விழா நடக்கும்.


நடிகை புவனேஸ்வரி இப்போ எங்கே இருக்காங்க?
எங்க இருந்தா உனக்கென்ன? மூடிக்கிட்டு சும்மா இரு.


பிரகாஷ்ராஜ் அடுத்து ஏதாவது புத்தகம் எழுதுகிறாரா?
எழுதுன ஒன்னே போதும்டா சாமி. காதெல்லாம் ரத்தம்...


ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வருமா?
ஆண்ட்ரியாவா ரீமாவா யாரு ரொம்ப அழகுன்னு முடிவு பண்றதுக்குள்ள படமே முடிஞ்சு போச்சு. அதனால  இன்னொரு பார்ட் வந்தாலும் தப்பில்லை. மறக்காம பார்த்திபன வெட்டி விட்டுருங்கடா டேய்...

[அடுத்த பகுதி உங்கள் ஆதரவைப் பொறுத்து. கேள்வி வரலேன்னா கேள்வி பதில் பகுதி போடாம இருந்துடுவேன்னு தப்புக் கணக்குப் போட்டுட வேண்டாம். யாருமே கேக்கலேன்னா நானே கேள்வி-நானே பதில்தான். மருவாதியா ஆளுக்கு கொஞ்சம் கேள்வியக் கேட்டுடுங்க.]

6 மறுமொழிகள்:

சரவணகுமரன் said...

ஒரு கேள்விக்கு எவ்ளோ கொடுப்பீங்க? (இது தான் என்னோட கேள்வி :-))

Unknown said...

@சரவணகுமரன்: பதில் சொல்வதற்கு எதையுமே எதிர்பார்க்காத காரணத்தால் இது இரு தரப்பிலும் இலவச சேவையே... ஹி ஹி ஹி

Prema said...

உங்கள் பதில்கள் ஈர்க்கும் வகையில் இல்லியே ...

Unknown said...

@பிரேமா: ஆமாம், கேள்வியும் நானே, பதிலும் நானேங்கறதால ஏனோதானோன்னு எழுதிருக்கலாம். ஒருவேளை வேற யாராவது கேள்வி கேட்டா சிரத்தையா பதில் சொல்லுவேனோ என்னவோ...

லதானந்த் said...

1) நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
2) யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
3) எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
4)அவசமாக டாய்ல போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
5) இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
6) சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
7) நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
8) அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
9) அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா ய்யருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
10) அஞ்சு கேள்வி வந்தாலும் பதில் சொல்வேன் என்றீர்கள். இதோ இதையும் சேர்த்து 10 கேள்வி ஆகிவிட்டது. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?

Unknown said...

@Uncle: Thanks. I'll post answers for your questions by this Saturday (17th Apr). Thanks very much once again

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan