மணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள்...