இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Saturday 10 July, 2010

பால் இங்க்கா மணி - கெலுபு எவரிகி

வழக்கமாக இரவு உணவின் போது துணைக்கு எவராவது இருந்தால் தொலைக்காட்சியைக் கவனிக்க மாட்டேன். இன்று தனியாக உணவு உண்ண வேண்டிய நிலையிலிருந்ததால் தொலைக்காட்சியைக் கவனித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

தெலுங்கு செய்தி அலைவரிசை ஒன்றில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் பற்றிய ஆரூடங்கள் குறித்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த பால் என்கிற கடல்வாழ் உயிரியையும், சிங்கப்பூரைச் சேர்ந்த மணி என்கிற ஜோதிடக் கிளியைக் குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஜெர்மனியில் உள்ள கடல் உயிர் அருங்காட்சியகம் ஒன்றின் பராமரிப்பில் இருக்கிறது பால் என்கிற ஆக்டோபஸ். இதுவரை ஆறு அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகளையும் துல்லியமாகக் கூறியுள்ளது. கடைசியாக ஜெர்மனி தோற்றுப் போகும் என்பதைக் கணித்துச் சொன்ன பிறகு பாலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தீவிர ஜெர்மனி கால்பந்தாட்ட ரசிகர்கள் “பாலை வறுத்து சாப்பிட வேண்டும்” “அதை சூப் வைத்துக் குடிக்க வேண்டும்” என்று கொலை வெறியோடு கருத்துக் கூறி வருகிறார்கள். இதையடுத்து பிராணிகள் நல அமைப்புகள் பாலை ஆழ்கடல் பகுதிக்குக் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர் முனியப்பா கிளி ஜோதிடம் பார்ப்பவர். அவர் வளர்க்கிற மணி என்கிற கிளியும் பால் சொன்னது போலவே இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகளைக் குறித்து துல்லியமாகச் சொல்லி வந்திருக்கிறது. மணி ஒருமுறை சீட்டெடுக்க இதுவரை 15 சிங்கப்பூர் டாலர்களைக் கட்டணமாக வாங்கி வந்த முனியப்பா இப்போது வாங்குவது 300 சிங்கப்பூர் டாலர்கள்.

ஜெயிக்கிற அணிகள் மீது பந்தயம் கட்ட விரும்புகிறவர்கள் மணியை மொய்க்கின்றனர். இதுவரை பால் கூறிய அதே முடிவுகளை மணியும் ஒன்று போலவே கூறிவந்தது. இப்போது இருவரும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிற எதிரெதிர் அணிகளைக் கை காட்டுகிறார்கள். பால் ஸ்பெயின் தான் என்று கூறுகிறது, மணியோ நெதர்லாந்து அணிதான் என்று கூறுகிறது.

ஜோதிடத்தை நம்புகிறவர்கள் பலரும் இந்த ஆருடத்தை வரவேற்கலாம், நம்பலாம். ஆனால் இப்போதும் பகுத்தறிவுதான் வென்றிருக்கிறது. இது போன்ற ஆருடங்கள் உண்மையாய் இருந்திருந்தால் இம்முறையும் பால் கூறிய முடிவையே மணியும் கூறியிருக்க வேண்டும் அல்லது மணியின் முடிவையே பாலும் கூறியிருக்க வேண்டும். இவை இரண்டும் இப்போது முரண்படுவதிலேயே தெரிகிறது இதுவரை இவை கூறி வந்த முடிவுகள் தற்செயலானவையே என்று. கணிதத்தில் வரும் ப்ராபபிலிட்டி தான் இதன் அடிப்படை.

ஆடுகிற இரண்டு அணிகளில் எது வெற்றி பெரும் என்று கேட்டால் இரண்டில் ஒன்றைத்தான் சொல்ல முடியும். மூண்றாவதாக இன்னொன்றைச் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லப்பட்ட அணி வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதே ஆக்டோபசிடமோ கிளியிடமோ இறுதிப் போட்டியில் எந்த இரு அணிகள் மோதும் என்று அரையிறுதிகளின் ஆரம்பத்துக்கு முன்பு ஆரூடம் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் செய்தி!

பாலைப் பொறிக்கப் போறாங்களா மணிய குருமா வைக்கப் போறாங்களா என்று திங்கட்கிழமை விடிந்தால் தெரிந்துவிடும். அது வரை பொறு மனமே!!!

8 மறுமொழிகள்:

Unknown said...

ட்விட்டரில் நண்பர் டிபிசிடி:

TBCD:

http://twitter.com/TBCD/status/18212203914

http://twitter.com/TBCD/status/18212248699

டுவிட்டர் கணக்கு இருக்கிறவர்கள் சென்று பாருங்கள். கணக்கில்லாதோர் இன்றே தொடங்குவீர்....

Unknown said...

ட்விட்டரில் என். சொக்கன் அவர்கள்:

http://twitter.com/nchokkan/status/18256537134

வாத்தியார், திருத்தம் போட்டாச்சு. மிக்க நன்றி

கொல்லான் said...

அதுல அவரு போட்டோ இருக்காது, கலர் இருக்காது,
அவ்வளவு ஏன், அவரோட டச் கூட இருக்காது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கொல்லான் said...

ஆக்டோபஸ். இதுவரை ஆறு அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகளையும் துல்லியமாகக் கூறியுள்ளது.


HI HI HI HI HI HI HI HI HI H H--

கொல்லான் said...

//டுவிட்டர் கணக்கு இருக்கிறவர்கள் சென்று பாருங்கள். கணக்கில்லாதோர் இன்றே தொடங்குவீர்.... //
அதெல்லாம் ஆகாது, ஆகாது.

சந்தனமுல்லை said...

:))

கலக்கல்!

Unknown said...

வந்தனமய்யா வந்தனம். அனைவருக்கும் வந்தனம்.

Jey said...

ஹஹஹஹா

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan