இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Saturday 17 July, 2010

தெலங்கானா - மாவட்ட வாரியான வரைபடக் கோப்புகள்
















பெரிது மற்றும் சிறிது படுத்தக் கூடிய கோடுகளால் ஆன (வெக்டர்) தெலங்கானா வரைபடங்களைத் தயாரித்துள்ளேன். தெலங்கானா ஆர்வலர்கள், பதிவர்கள், பதிப்பாளர்கள், மாணவர்கள், சிறுபத்திரிகை நடத்துவோர் மற்றும் அச்சகத்தினர் ஆகியோரின் பயன்பாட்டுக்காக இவ்வரைபடங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். படங்களைப் பயன்படுத்த மேற்கூறியவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. படங்களைப் பயன்படுத்திக் கொள்வோர் என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. எங்களுடைய இன்ன படைப்பில் உங்கள் படங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தகவல் தெரிவித்தால் அதனைத் வாங்கிப் படிக்க, சேகரித்து வைக்க ஏதுவாகும். வணிக ரீதியில் வெளிவரும் நாளேடுகள், வார, வாரமிருமுறை, மாத, மாதமிருமுறை, ஆண்டு, அரையாண்டு, காலாண்டு ஏடுகள் எதுவும் இவற்றைப் பயன்படுத்த எக்காலத்திலும் அனுமதி கிடையாது.

தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களின் வரைபடங்களை ai (adobe illustrator), eps (encapsulated post script, மற்றும் pdf வடிவங்களில் தனித் தனி zip கோப்புகளாக இங்கே இணைத்துள்ளேன். ஆங்கில வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள Arial Black மற்றும் Arial எழுத்துருக்கள் அனைத்துக் கணிணிகளிலும் நிறுவப்பட்டிருக்கும் என்பதால் அந்த எழுத்துருக்கள் இணைக்கப் படவில்லை. தமிழ் வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள TAM3.ttf எழுத்துருவை மட்டும் இணைத்துள்ளேன். படங்கள் வேண்டுவோர் தாராளமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

[தெலங்கானா வரைபடங்கள் - தமிழில் 1.59 MB]      [தெலங்கானா வரைபடங்கள் - ஆங்கிலத்தில் 1.64 MB]

3 மறுமொழிகள்:

Anonymous said...

நல்ல முயற்சிகள் விஜய். வாழ்த்துக்கள்.

பி.கே. வாசன்

Anonymous said...

கம்மம் மாவட்டத்தை ஆங்கிலத்தில் எழுதுகையில், Khammam என்று எழுத வேண்டும். உங்களது படத்தில் Kammam என்று இருக்கிறது. திருத்தம் செய்து வெளியிடுங்கள்.

மனோகர்

Unknown said...

நண்பர் மனோகர்,

கோப்புகளில் நேற்று இரவே மாற்றம் செய்துவிட்டேன். படத்தில் மாற்றம் செய்யாமல் விடுபட்டுப் போய்விட்டது. அதையும் தற்போது சரி செய்துள்ளேன்.

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan