இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 5 July, 2010

”குடி” மரியாதை

வார இறுதி நாட்களில் சரக்கடிப்பதும், சரக்கடித்த பிறகு பொழுது போகாமல் இணையத்தில் உலாவுவதும் சகஜம் தான் என்றாலும், அவ்வாறான நேரத்தில் செய்யக் கூடாத பத்து விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. சுயநினைவில் இல்லாத போது செய்தவை சுயநினைவுக்கு வந்த பிறகு உங்களைத் துன்புறுத்தக் கூடாதல்லவா?

1. நீங்கள் சரக்கடித்த பிறகு கட்டுப்பாட்டுடன் இருப்பதில் வீராதி வீரராக அல்லது சூராதி சூரராக இருந்தாலும் பணியிடத்திற்குத் தொடர்புடைய மின்னஞ்சல்களையோ இணைய உரையாடல்களையோ தவிர்ப்பது நல்லது.

2. வார இறுதிப் போதை வேளையில் இணைய தொடர்பிலிருக்கக் கூடிய நண்பர்களிடம் உரையாடாமல் இருப்பதும் நலம். அப்படியே உரையாட நேர்ந்தாலும் எந்த விதமான வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் உங்களைச் சந்திக்கிறேன் என்று நீங்கள் உறுதியளித்தது உங்களுக்கே நினைவிலில்லாமல் போகலாம்.

3. சரக்கு போதையில் இருக்கும் போது உங்கள் மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் இதர பயணர் கணக்குகளின் கடவுச் சொற்களை மாற்றாதீர்கள். முக்கியமாகப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடாதீர்கள். கவனக் குறைவாக உங்கள் பயணர் பெயரையும் கடவுச் சொல்லையும் அதற்குள்ள பெட்டிகளில் அல்லாமல் பின்னூடம் எழுதும் பெட்டியில் போட்டுவிடுவீர்களேயானால், நீங்கள் அவற்றை நிரந்தரமாக இழந்துவிடும் அவலமும் நேரலாம்.

4. அழகான பொருட்களை இணையத்தில் பார்த்துவிட்டு அவற்றை வாங்குகிறேன் பேர்வழி என்று உங்கள் கடன் அட்டையையோ ஆன்லைன் வங்கிக் கணக்கையோ பயன்படுத்தி அவற்றை வாங்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அது உங்களுக்குத் தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் நிலையில் நீங்கள் இல்லை.

5. உங்கள் புஜபல பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று உரையாடல் பெட்டியின் ஸ்டேட்டசில் என்ன சரக்கு, எத்தனை லார்ஜ் போன்றவற்றை எழுதாதீர்கள். பிரிண்ட் ஸ்கிரீனுடன் பதிவுலக நண்பர்களால் கலாய்க்கப்படுவீர் ஜாக்கிரதை.

6. நீங்கள் பயன்படுத்துவது உங்கள் வீட்டிலுள்ள அனைவருக்குமான பகிர் கணிணி என்றால் போதை நேரங்களில் அதில் ஆபாசக் காட்சிகளையோ படங்களையோ தரவி்றக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட கணிணியாகவே இருந்தாலும் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துவிடுங்கள்.

7. ஏதாவது காரணங்களால் மனஸ்தாபத்தில் இருக்கிற நண்பர்களை இது போன்ற நேரத்தில் உரையாடல் பெட்டியில் காண நேர்ந்தால் அவர்களை உரையாடலுக்கு அழைக்காதீர்கள். நீங்கள் சொல்லுகிற ஹாய், ஹலோ, வணக்கம் நண்பா, போன்றவை கூடத் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படும் சாத்தியம் உள்ளது.

8. எதிர்பாலினரை உரையாடல் பெட்டியில் காண நேர்ந்தாலோ அல்லது அவர்கள் உங்களை உரையாட அழைத்தாலோ கவனமாகத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது நீங்கள் உண்மை விளம்பியாக உருவெடுத்திருக்கும் நேரம். உண்மை எல்லா நேரமும் இனிக்காது!!!

9. எக்காரணத்தை முன்னிட்டும் உரையாடல் பெட்டி வழியாகக் கடன் கேட்காதீர்கள். நீங்கள் கடன் கொடுத்தவர்களிடமும் திருப்பியும் கேட்காதீர்கள். அதற்கான முறையான வழி நேரில் கேட்பது அல்லது தொலைபேசியில் கேட்பது. அதையும் நீங்கள் போதையிலிருக்கிற நேரத்தில் கேட்க வேண்டாம்.

10.  மறந்துபோன மறைத்து வைத்திருக்கும் காழ்ப்புணர்ச்சி சுதந்திரமாக வெளி வரும் நேரம் எனவே உங்கள் மீது காண்டில் இருக்கும் அல்லது நீங்கள் காண்டில் இருக்கும் நபர்களுடன் ச்சேட்ட வேண்டாம்!!!


நன்றி: டாப்-10ல் 7 என்னுடையவை, மீதம் 3ஐத் தந்துதவிய கடை-மூண்று-வள்ளல் லதானந்தருக்கு நன்றி.இதில் அவருடைய மூண்று எதுவென்று சரியாகக் கண்டுபிடிக்க முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

13 மறுமொழிகள்:

Anonymous said...

எங்க, பர்தா உயர்குடின்னு நீயும் கெளம்பிட்டியோன்னு நெனைச்சேன். பரவால்ல, அப்படி ஒன்னும் மரண மொக்கையில்லை.

இது அப்படி ஒன்றும் மொக்கையில்லை,
ஆனால் இது போல் மொக்கையில்லை

பி.கே. வாசன்

கொல்லான் said...

அருமை விஜய்.
பயனுள்ள பதிவு.

ஆப்பீசர் சொன்ன பாயிண்ட்கள் :
ஆறு
எட்டு
பத்து.

சரியா விஜய்?

Unknown said...

அண்ணாத்தே,

வரவர கடை அநியாயத்துக்கு காத்தாடுது. அதுனால ஆபிசர் பேரக் கோத்துவிட்டாலாச்சும் கொஞ்சம் கமெண்ட் தேறுமான்னு பாத்தேன். அப்பயும் பதிவு போட்டு மூணு மணி நேரத்துல ரெண்டு கமெண்ட் தான் தேறுது. ஆனா ஆபிசர் எழுதுனதா மூணு பாயிண்ட் சொன்னீங்களே, அதுலயே நா கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகிட்டிருக்கேன்னு தெரியுது. நெம்ப சந்தோசம்.

மின்னுது மின்னல் said...

விஜய்கோபால்சாமி said...

ரவி, நேத்திக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு பதில் மரியாதை வாங்கி நொந்து போயிருந்தேன். ஒருவேளை அவராவே ஃபேக் ஐடில கமெண்ட் போடுறாரோன்னு இன்னிக்குக் காலைலதான் சந்தேகம் தோணுச்சு. இங்க அதையே நீங்களும் எழுதிருக்கீங்க.

அங்கே எனக்கும் மின்னுது மின்னல் அலையஸ் சிவாவுக்கும் நடந்த உரையாடல் கீழே:
//


பாஸ் நான் சிவா அலையஸ் இல்லை மின்னுது மின்னல் என்ற பழைய பதிவர் தான் நிறைய பேருக்கு தெரியும் நான் துபாயில் இருக்கிறேன் துபாய் பதிவர்களை சந்தித்து விருந்து குடுத்து இருக்கிறேன்


சிவா பெங்களூரில் இருக்கிறார்

நான் கூறியதற்கும் நீங்க கூறியதை மீண்டும் படித்து பார்க்கவும்

ஜில்தண்ணி said...

//வணக்கம் நண்பா, போன்றவை கூடத் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படும் சாத்தியம் உள்ளது.//

ரைட்டு தான்

இப்படியுமா யோசிப்பீங்க தலைவரே,நல்லாயிருக்கு

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் ஏற்றுகொள்ளும் ஒன்றுதான் . இதனையை பண்ணுவதற்கு தக்காளி அந்த சரக்கையே விட்டுரவேண்டியதுதானே !

Anonymous said...

சரக்கடித்துவிட்டு இந்த மாதிரி வம்பில் அகப்பட்டுக் கொள்வது குடிகாரர் ஆவதின் முதல் படி,அல்லது நடுப்படி ஆனால் உருப்படாத படி.
இம்த மாதிரி நண்பருக்கு ஏற்பட்டால் அவரை முதலில் குடிப்பழக்கத்திலிருந்து விடுவியுங்கள்.
குடி ஒரு மன நோய். அதற்குச் சரியான வழி முறைகளுடன் குணப்படுத்த வேண்டும்.
குடிப்பவர் எல்லாம் குடி கார்ரல்ல.ஆனால் குடித்து மறப்பவர் குடிகாரார் ஆகி அனைத்தையும் இழக்கும் நாள் விரைவில் !!
முப்பது நாட்கள் குடிக்காமல் இருக்க முடிகிறதா? பாருங்கள்.முடியவில்லையா? ஓடுங்கள்,உதவி தேடி.

Anonymous said...

Kindly spread this message across asap to all stiff drunkards :)

Unknown said...

@மின்னுது மின்னல்:

பழைய பதிவர்னு சொல்றீங்க. எங்க போச்சு உங்க தளம்? நேற்றைக்குப் பார்த்தபோது பதிவுகள் எதுவும் இல்லாமல் காலியா இருந்துச்சு. இன்னைக்குப் பாத்தா அதையும் காணும். நீங்க பழைய நான் பதிவர்ங்கறத எப்படி நம்பறது மின்னல்?

Unknown said...

வந்திருந்து வாழ்த்திய சுற்றத்தாருக்கும் நட்புகளுக்கும் மிக்க நன்றி, வளர நன்னி. க்ருதக்ஞேதலு, தன்யவாத்.

கொல்லான் said...

கடை களை கட்டிடிச்சி போல?

Unknown said...

ஆமாம் அண்ணாத்தே... நன்றி

Unknown said...

//கொல்லான் said...

கடை களை கட்டிடிச்சி போல? //

repeataaii

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan