இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Sunday 25 April, 2010

கேள்வியுடன் கொல்லான்...

நண்பர் கொல்லான் அவர்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் கொடுத்துள்ளேன். மூண்றாவது கேள்வியப் பாத்த பிறகு இவரு கொல்லானா கொலைவெறியானான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு.
நண்பர் கொல்லான் தனது வலைப்பூவில் புதிதாகக் கேள்வி பதில் தொடங்கியிருக்கிறார். அதுக்கு நான் தான் ஊக்கின்னு வேற சொல்லிருக்கறாரு. எத்தனை பாவத்துக்கு நான் ஆளாகறது சொல்லுங்க? அது பற்றி அறிவிப்புப் பதிவும் போட்டிருக்கிறார். இனி வருவது அவர் அனுப்பிய கேள்விகளும் என் பதில்களும்.


ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க?
இதுவும் “காக்கா காக்கான்னு கத்துறதால அதக் காக்கான்னு கூப்பிடுறாங்களா, இல்லை அதக் காக்கான்னு கூப்பிடுறதால அது காக்கான்னு கத்துதா”ங்கற மாதிரிதான். இருந்தாலும் உங்க கேள்விக்கு கொஞ்சம் சரியா பதில் சொல்ல முயற்சி பண்றேன்.

தற்கொலை பண்ணிக்கப் போறவன் கடைக்காரன்கிட்ட விஷம் கேக்கும்போது “நல்ல விஷமா குடுப்பா, குடிச்சோன்ன உயிர் போகற மாதிரி” அப்படீன்னு தானே கேப்பான். அதே போல கடிச்சோன்ன உயிர் போற மாதிரி ”நல்ல விஷம்” வச்சிருக்கறதால அது நல்ல பாம்பா இருக்குமோ என்னவோ. ஏன்ப்பா ஆப்பீசரக் கேக்க வேண்டிய கேள்விய என் கிட்டக் கேட்டு டர்ரக் கெளப்புறீங்க?

വിജയ ഗോപല്സാമി എന്ടര് പെയര്‍ വൈത്തതന്‍ കാരണം?
முதல் ரெண்டு வார்த்தை “விஜய் கோபால்சாமி” அது மட்டும் தான் புரியுது. எனக்கு பத்து பதினைஞ்சு பாஷை தெரியும்னு நீங்களா நெனைச்சுக்கிட்டா நான் என்ன பண்ணட்டும்? இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறீங்களே...

உங்க அப்பாவுக்கு நீங்க எத்தினையாவது பையன்?
What is your chronological rank among your father's children? இதுவா? 

புறா கால்ல கடுதாசி கட்டி அனுப்பி வெச்சா புறாவ என்ன பண்ணுவீங்க?
விஷயம் முக்கியமானதா இருந்தா வெக்கம் மானத்தையெல்லாம் விட்டுட்டுக் காலப் புடிக்க வேண்டியதுதான். நான் புறாக் காலைச் சொன்னேன்...

நீங்க பாமரனா இல்ல பண்டிதனா?
பாமரர்க்குப் பண்டிதன், பண்டிதர்க்குப் பாமரன். இதை நீங்க பண்டிதர் கிட்டயே சோதிச்சுக்கலாம்.

1 மறுமொழிகள்:

கொல்லான் said...

கோபால்,
என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

//ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க?//
இதுக்கு உங்க பதில் பரவால்ல. ஆனா, உண்மையான பதில் வேற. அதுதான், மத்த மொழிகளுக்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசம், தமிழின் வளமை.
இது பத்தி தனி இடுகையே போடலாம்.

//உங்க அப்பாவுக்கு நீங்க எத்தினையாவது பையன்?//
தமிழ்ல எவ்வளவு இரத்தின சுருக்கமா இருக்கு? அதே மாதிரி, இங்கிலீசிலேயும் இருக்கு. சரியா கண்டுபிடிக்கரவங்களுக்கு 'ரெட் லேபில்' பரிசு.

கேள்வி பதில் ஆரம்பிச்சு வெச்சீன்கல்ல? அனுபவிங்க. இன்னும் இருக்கு. அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டோம்.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan