
உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா. நாங்க ஏதோ எங்க பொழப்பப் பாத்துக்கிட்டு எங்க வழியில போயிக்கிட்டிருக்கோம். ராவும் பகலுமா சந்தையில கெடந்து சீரழியிற பொழப்பாக் கெடக்குது எங்க பொழப்பு. இதுல நாங்க என்னமோ ராஜவாழ்க்கை வாழறோம்னு நெனைச்சுக்கிட்டு எங்களோட போட்டி போட வெளிநாட்டுலேந்தெல்லாம் போட்டிக்கு வற்றானுங்க.
எவன் காதலிச்சா எங்களுக்கு என்னய்யா? நாங்க என்னமோ உங்க பொண்ணுங்களையும் பசங்களையும் காதலிக்கத் தூண்டுனமாதிரி எதுக்கெடுத்தாலும் எங்களையே குறை சொல்லுறீங்க. புள்ளைங்கள ஒழுங்க வளக்க வக்கில்லாத நீங்க எங்கள எதுக்குய்யா குறை சொல்றீங்க. உங்க வீட்டுப் புள்ளைங்க காதலிச்சு ஓடிப்போறதுக்கு நாங்களா பஸ் ஏத்தி டிக்கெட் வாங்கிக் குடுத்தோம்? மனசாட்சியே இல்லாம ஏன்யா...