சமீபத்தில் குமுதம் நாளேடு முதலமைச்சரைப் பேட்டி கண்டு வெளியிட்டது. அதிலே முதலமைச்சரிடம் ஒரு கேள்வி.
கேள்வி: அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா?
பதில்: தமிழ்த் தாயின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை!சென்னைத் தமிழர்களின் பேச்சு வழக்கு முதல்வருக்கு விரும்பத் தகாததாக இருக்கலாம். ஆனாலும் அது தமிழ்த் தாயின் (எனக்குத் தமிழ்த் தாய் என்ற கருத்துருவாக்கமே ஏற்புடையதல்ல) முகத்தில் குத்தப்பட்ட கரும்புள்ளி செம்புள்ளி என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. [இதைக் குறித்த எனது கருத்துச் சுருக்கத்தை இறுதிப் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.]
காலம் காலமாக வேறு எந்த வட்டார வழக்கையும் விட அதிகமாகப் பழிக்கப்படுவது சென்னைத் தமிழாகத் தான் இருந்துவருகிறது. கொங்கு வட்டாரத் தமிழோ அல்லது திருநெல்வேலி, மதுரை, தஞ்சை வட்டாரத் தமிழோ இந்த அளவுக்கு விமர்சனத்துக்கு...
Monday, 28 June 2010
Monday, 21 June 2010
வன்புணர்வைத் தடுக்கும் பாதுகாப்பு சாதனம்...
தென்னாப்பிரிக்க மருத்துவ்ர் சோனெட் ஈயர்ஸ் (Sonnet Ehlers) பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார். இது வேண்டாத கர்பத்தையோ எய்ட்சையோ தடுக்கிற பாதுகாப்பு சாதனமல்ல. அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதைக் குறித்து சோனெட் அவர்கள் கூறுகையில்:
”நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வன்புணர்வுக்காளான ஒரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. கண்களில் ஒளியிழந்து சுவாசிக்கும் பிணம் போல் கிடந்தாள். மிகுந்த சிரமத்துடன் பேசினாள்.
”எனக்கு மட்டும் பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால்...”
வெறும் இருபது வயது மருத்துவ ஆராய்சியாளரான என்னால் என்ன செய்துவிட முடியும். உன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உறுதி மட்டும்...
Monday, 14 June 2010
என் உயிரினும் மேலான கத்திரிக்காயே...
உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, கத்திரிக்காயே. கால் நூற்றாண்டுக்கும் மேலாக என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு அற்புதமான தோழரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்தான் கத்திரிக்காய். சரியாகப் படிக்காமல் நான் என் அப்பாவிடம் அடிபட்டதை விட, மகனோ மகளோ காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட பெற்றோரிடம் அதிகம் அடிபட்டவர் என் உடன்பிறப்பு. அவர்தான் கத்திரிக்காய்.
அவரை விரும்பாதவர்களும் கிடையாது, அவரைப் பழிக்காதவர்களும் கிடையாது. இந்த விசித்திரமான நிலை வேறு “யாருடைய” நண்பருக்கும் ஏற்பட்டிருக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும், அங்கங்கே தடித்துப் போகும் என்ற இரு பெரும் குற்றச் சாட்டுகள் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. என் நேரடி அனுபவத்திலிருந்தே இவை இரண்டும் பொய் என்று சொல்ல முடியும்.
நான் சுமாராக ஐந்து வயதிலிருந்து கத்திரிக்காய் சாப்பிட்டு வருகிறேன்....