இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Sunday, 25 April 2010

கேள்வியுடன் கொல்லான்...

நண்பர் கொல்லான் அவர்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் கொடுத்துள்ளேன். மூண்றாவது கேள்வியப் பாத்த பிறகு இவரு கொல்லானா கொலைவெறியானான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு. நண்பர் கொல்லான் தனது வலைப்பூவில் புதிதாகக் கேள்வி பதில் தொடங்கியிருக்கிறார். அதுக்கு நான் தான் ஊக்கின்னு வேற சொல்லிருக்கறாரு. எத்தனை பாவத்துக்கு நான் ஆளாகறது சொல்லுங்க? அது பற்றி அறிவிப்புப் பதிவும் போட்டிருக்கிறார். இனி வருவது அவர் அனுப்பிய கேள்விகளும் என் பதில்களும். ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க? இதுவும் “காக்கா காக்கான்னு கத்துறதால அதக் காக்கான்னு கூப்பிடுறாங்களா, இல்லை அதக் காக்கான்னு கூப்பிடுறதால அது காக்கான்னு கத்துதா”ங்கற மாதிரிதான். இருந்தாலும் உங்க கேள்விக்கு கொஞ்சம் சரியா பதில் சொல்ல முயற்சி பண்றேன். தற்கொலை பண்ணிக்கப் போறவன் கடைக்காரன்கிட்ட விஷம் கேக்கும்போது “நல்ல விஷமா குடுப்பா, குடிச்சோன்ன உயிர் போகற மாதிரி”...

Monday, 19 April 2010

கேள்வியுடன் லதானந்த்...

1. அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா? கிடைக்காமல் திண்டாடியதை விட கிடைத்துத் திண்டாடிய அனுபவம் சுவையானது. கதவு மேல எழுதிருக்கறதையாச்சும் படிச்சுட்டுப் போயிருக்கனும். இல்லையா எழுத்துக்கு மேல இருந்த படத்தையாவது பாத்துட்டுப் போயிருக்கனும். ரெண்டையுமே பண்ணாததால கடைசியா ப்ளம்பர்னு சொல்லித் தப்பிச்சேன். 2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்? வெறுத்து ஒதுக்கியவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஓரளவு முன்னேறியிருக்கிறேன் என்றால் அது சில நண்பர்கள் மீதான பொறாமையினால்தான். நட்பும் தொடர வேண்டும் என்ற காரணத்தால் பதிலை இந்த அளவில் நிறைவு செய்கிறேன். 3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது? எதிர்பார்த்தே எந்த அனுபவமும் கிடைக்கலை... எதிர்பாக்கலைன்னா மட்டும் கெடைச்சுடுமாக்கும்... :( 4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?அந்த அனுபவத்தைத்தான்...

Tuesday, 6 April 2010

ச்சேட்...

விஜய்கோபால்சாமி: மச்சி எப்டிடா கீறே.... அப்பாவி ஆனந்து: சோக்கா கீறேண்டா மச்சி... நாம பேசியே ரொம்ப நாளாயிட்ச்சுரா... விஜய்கோபால்சாமி: ஐபிஎம் பொண்ணக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணதுலேந்து நீ என்ன மதிக்கிறதே இல்லைடா... அப்பாவி ஆனந்து: அப்டியெல்லாம் சொல்லாத மச்சி... மனசுக்கு சங்கடமா கீது... விஜய்கோபால்சாமி: வேற எப்படி சொல்றதாம்... அப்பாவி ஆனந்து: அத்த வுடு மச்சி, சானியாவுக்குக் கல்யாணமாமே... நீ ஐட்ராபட்ல இருந்துமா இப்படியெல்லாம் நடக்குது... விஜய்கோபால்சாமி: என்ன என்னடா பண்ணச் சொல்றே? அப்பாவி ஆனந்து: மொதோ எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனதே உன்னாலதான்னு நான் ரொம்ப பெருசா கற்பனையெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்? அப்போ நீயும் டம்மி பீசுதானா? விஜய்கோபால்சாமி: அய்யோ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்திடுறானுங்களே... அப்பாவி ஆனந்து: மச்சான்......

Monday, 5 April 2010

விஜய்கோபால்சாமி பதில்கள் - 1

[சில பேர் கேள்வி பதில் எழுதுறதப் பாத்து, எனக்கும் பதிவர்களின் கேள்விக்குப் பதில் எழுதனும்னு கொலை வெறியாகிப் போச்சு. அதன் விளைவுதான் நீங்க படிக்கிற இந்தப் பதிவு. முதல் முறை என்பதால் விஜய்கோபால்சாமி என்ற ஒரே ஒரு பதிவரின் கேள்விக்கு மட்டும் இங்கே பதில் எதுகிறேன். இதையே அழைப்பா எடுத்துக்கிட்டு நீங்களும் கேள்விகள அனுப்புங்க. குறைந்தது அஞ்சு கேள்வி சேந்தாலும் பதிவு போட்டு பதில் சொல்லிடுவேன்.] தில்லானா மோகனாம்பாள் படத்த இப்போ ரீமேக் பண்ணா, யார் யார் நடிச்சா பொருத்தமா இருக்கும்? ஏம்ப்பா, நீ இருபத்தஞ்சு வருஷமா கோமால இருந்தியா? ஏற்கெனவே கங்கைஅமரனும் சுரேஷ்கிருஷ்னாவும் ரீமேக் பண்ணிட்டாங்கப்பா. முடிஞ்சா தி.மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமம் மூணு படத்தையும் அடுத்தடுத்து டிவிடி ப்ளேயர்ல ஓடவிட்டுப் பாரு. சானியா ரெண்டாந்தாரமா வாக்கப்படப் போறாங்களாமே? என்ன கொடுமை இது? கல்யாணம் பண்ற வகையில சானியா மாலிக்குக்கு...
Page 1 of 1412345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan