என்ன கொடுமை சார் இது? குழந்தை குக்கர் விசிலடிச்சா பயப்படுது... ஆனா வேட்டைக்காரன் பாட்டு டிவில வந்தா உற்சாகமா ஆட்டம் போடுது... இளங்கண்ணு பயமறியாதுங்கறது உண்மையா இருக்குமோ...
Tuesday, 19 January 2010
Sunday, 17 January 2010
அன்பு நண்பர் ஜெய் அவர்களுக்கு...
என் பதிவைத் தேடி வந்து படிக்கிற முக்கியமான வாசகர் நீங்கள். உங்களைப் பொறுமை இழக்கச் செய்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன். சூரியன் படத்தில் வருகிற கவுண்டமணி நகைச்சுவைக் காட்சிகளின் படம் தற்சமயம் கையிலில்லை. யூ-ட்யூப் வீடியோக்கள் அவ்வளவு தரமானதாக இல்லை. சென்னையில் என்னோடு தங்கியிருந்த நண்பன் இரண்டு நாளில் சூரியன் படத்தின் டிவிடியை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னதை நம்பி பதிவில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். வேறு மாற்று வழிகளைக் கண்டறிந்து விரைவில் பதிவுகளை எழுதிவிடுகிறேன். மன்னிக்கவும்.
டிஸ்கி: இதை ஒரு பின்னூட்டத்திலேயே சொல்லி இருக்கலாம். இதை ஏன் பதிவாகப் போட்டேன்னு நீங்க கேக்க நினைக்கிறது புரியுது. ரொம்ப நாளா நான் பதிவே போடலைன்னு நண்பர் ஜெய்சங்கர் ரொம்ப வருத்தப்பட்டார். என்னோட வாசகர் ஒருவர் இந்த அளவுக்கு என் கிட்ட எதிர்பாக்குறாருன்னு நெனைக்கும்போது எனக்கே ரொம்ப பெருமையா இருக்கு. அவரைக்...