இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday 3 December, 2009

கொலை வெறிக் கவிதைகள் 1754 – 5

ஆட்டோகிராஃப்

மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் சுமதி
ஐந்தாம் வகுப்பில் ரோசி
ஆறாம் வகுப்பில் தென்றல்
+1ல் திரிபுரசுந்தரி
கல்லூரியில் மாதங்கி
2003 ஜனவரி முதல் மே வரை வித்யா
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை அனுஷா!

இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!

[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]

குறிப்பு: வேர்ட்பிரஸ்ஸிலிருந்து ப்ளாகருக்கு மாறுவதால் தமிழ்மணம் மற்றும் இதர திரட்டிகளில் இணைப்பதற்காக பழைய தளத்திலிருந்து இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.

1 மறுமொழிகள்:

cheena (சீனா) said...

அன்பின் விஜய்கோபால்சாமி

அதென்ன மகளுக்குப் பேர் வைப்பதற்கு மட்டும் பழைய காதலிகளை ( அல்ல அல்ல தோழிகளை ) நினைவு படுத்தி - அசை போட்டு - மகிழ்ந்து - கடைசிலே பொண்டாட்டி சொல்ற பேர வைச்சீடறீங்க

நல்லாருக்கு கவிதி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan