
பெரிது மற்றும் சிறிது படுத்தக் கூடிய கோடுகளால் ஆன (வெக்டர்) தெலங்கானா வரைபடங்களைத் தயாரித்துள்ளேன். தெலங்கானா ஆர்வலர்கள், பதிவர்கள், பதிப்பாளர்கள், மாணவர்கள், சிறுபத்திரிகை நடத்துவோர் மற்றும் அச்சகத்தினர் ஆகியோரின் பயன்பாட்டுக்காக இவ்வரைபடங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். படங்களைப் பயன்படுத்த மேற்கூறியவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. படங்களைப் பயன்படுத்திக் கொள்வோர் என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. எங்களுடைய இன்ன படைப்பில் உங்கள் படங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தகவல் தெரிவித்தால் அதனைத் வாங்கிப் படிக்க, சேகரித்து வைக்க ஏதுவாகும். வணிக ரீதியில் வெளிவரும் நாளேடுகள்,...