விஜய்கோபால்சாமி – ஸ்டேட்டஸ்: அவைலபில்; மெசேஜ்: ஒரையாட வாங்க, ஓரியாட வராதீங்க
விஜய்கோபால்சாமி: சார், ஆன்லைன்ல இருக்கீங்களா?
சோர்ஸ்: இருக்கேன் சொல்லுங்க…
விஜய்கோபால்சாமி: நானும் மூணு வருஷமா ப்ளாகு எழுதுறேன். எனக்கு பரபரப்பான செய்திகள் கொஞ்சம் வேணும். உங்களக் கேட்ட வேலை சுலபமா முடியும்னு சொன்னாங்க.
சோர்ஸ்: இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. நான் குடுக்குற அக்கவுண்ட் நம்பர்ல நான் சொல்ற அமௌண்ட்ட போட்டுடுங்க. உங்களுக்கு வேண்டிய நியூச அடுத்த நிமிஷமே ச்சேட்ல சொல்றேன்…
விஜய்கோபால்சாமி: ஓக்கே சார். அக்கவுண்ட் நம்பர், பிராஞ்ச் கோட், பேர், எல்லாம் சொல்லுங்க சார்.
சோர்ஸ்: உன் இன்பாக்ஸ்ல போய் பாரு. நீ கேட்ட டீட்டெய்ல்ஸ் எல்லாம் இருக்கும்.
விஜய்கோபால்சாமி: சரி சார். டிரான்ஸ்பர் பண்ணிட்டு மறுபடியும் வற்றேன்.
சோர்ஸ்: சீக்கிரம் வா...
விஜய்கோபால்சாமி: ஆகட்டும் சார்
[ஒரு...
Saturday, 15 May 2010
Monday, 10 May 2010
தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? என் அனுபவம்(ங்கள்)!!
வினவு தளத்தில் வந்திருந்த இக்கட்டுரையும் அழைப்பும் பெரிதும் ஈர்த்ததால் நானும் அதே தலைப்பில் எழுதுகிறேன். இது தொடர்பிலான செய்திகளை நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து தொடங்குகிறேன். சில பல உள்குத்துகளால் ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் ஃபெயிலாக்கப்பட்டு மனமுடைந்து திரிந்த நேரம் அது. அதே ஒன்பதாம் வகுப்பில் கணக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் அறிவுரையால் ஒரு டுட்டோரியலில் சேர்க்கப்பட்டு ஒரு வழியாக பத்தாம் வகுப்பை முடித்தேன். [மறுபடியும் என் முகத்திலெல்லாம் விழிக்க வேண்டுமா என்ற சலிப்பில் கூட இப்படி ஒரு ஆலோசணையை வழங்கியிருக்கலாம். எவர் கண்டார்?]
ஆண்டு முழுமைக்கும் சேர்த்து பொதுத் தேர்வுகளில் வந்து சேர்ந்தது இம்சை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் காட்டப்படும் சலுகைகளுக்கும், தனித் தேர்வர்களிடம் காட்டப்படும் கெடுபிடிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கும். பள்ளி...