இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 29 November 2010

குமுதம் எல்லாம் நம்மள... ஹி ஹி

நெட்டில் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே நிறைய சைட்டுகள் இருக்கிறதாமே? - ராஜிராதா, பெங்களூர்ஒருவர் மீது ஒருவர் அல்ல, ஒருவர் மீது மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிறைய சைட்டுகள் இருக்கின்றன. அவர் தமிழக முதல்வர். சாலையில் நார் மீதாவது காகம் எச்சம் போட்டுவிட்டால் கூட “என்ன ஆட்சி இது. காகம் எச்சம் போடுகிறது” என்று எரிந்து விழுகிறார்கள். [அரசு பதில்கள், குமுதம் 24.11.2010]அடிச்சான் பாருய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! வலையுலகம் குமுதத்தை விமர்சனம் செய்த காலமெல்லாம் போய் குமுதம் வலையுலகைக் கேலி செய்யிற நெலைமை வந்திருச்சு பாருங்க. அதோட சேத்து முதலமைச்சருக்குப் பொன்னாடையும் போத்திருச்சுங்களே, பண்ணாடைங்க. கொஞ்ச நாள் முந்தி குமுதத்துல ஒரு காக்கா தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மேலயே எச்சம் போட்டுக்கிட்டிருந்துச்சு. அந்த எச்ச காக்கா இப்போ கல்கில எழுதுது. இதையெல்லாம் வசதியா மறந்துடுறானுங்க....

Thursday, 25 November 2010

ரெட்டி போய் செட்டி, செட்டி போய் மறுபடியும் ரெட்டி

ஆந்திராவில் ஒரு ச்சீ... த்தூ... ஜாதி பாலிடிக்ஸ் ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஒய்.எஸ்.ஆர். உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஒய். எஸ். ஆர்.  அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதி ரோசையாவுக்கு முதல்வர் பதவியைத் தந்தது காங்கிரஸ் தலைமை. பதவியேற்ற நாள் முதல் இவர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. 2009ம் ஆண்டின் இறுதியில் தெலங்கானா தனி மாநிலம் அமைய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை இவர் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. வெகு சமீபத்தில் இவரது உடல்நிலை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு ஸ்திரமற்ற...

Monday, 22 November 2010

ஏமீ... ஏமேமீ... [ரசித்த ட்விட்டுகள்]

டிபிசிடி: நான் தங்க[பாலு திமுகவின் காங்கிரசுப் பிரிவுத் தலைவர் என்றல்லவா நினைத்திருந்தேன்..மாத்திட்டாங்களா..? ராஜன் ஆல் இன் ஆல்: மனைவியின் தோழிகள் அண்ணா என்றழைக்கையில், உலக வாழ்வின்மீது சலிப்புத் தட்டுவதை தவிர்க்கவே முடியவில்லை! # ஸோ ஸேட்! குசும்பு ஒன்லி: ஓபாமா இந்தியா வந்த விதம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி உங்கள் சன் டீவியில். லதானந்த்: குங்குமத்தில என்னுடைய தொடர் கட்டுரை வந்துகிட்டிருக்குது. படிச்சு அபிப்ராயம் சொன்னா தெக்க தெரியற தென்னந்தோப்பு உங்களுக்கே! சங்’கவி’: உன் வீட்டு ரோஜா மொட்டு மலரவே இல்லையென குழம்பாதே. மலர்தான் உன்னை முத்தமிட எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது! உமா ருத்ரன்: வாட்டர் கேட்? ஆமாம் மழைத்தண்ணீர் வீட்டு கேட் தாண்டி வந்து விட்டது. அதுக்கென்ன இப்ப? கேபிள் சங்கர்: வாழ்க்கைங்கிறது... மெகா சீரியல் போல எதுக்கு டி.ஆர்.பி அதிகமா இருக்கோ அத்தோட ஓடுறதுதான் நல்லது. வால்பையன்:...

Monday, 15 November 2010

மிருக புத்திரன் கவிதைகள் - பகுதி 1 [15/11/210]

________________ (டேஷ்) புத்திரன் அக்னி புத்திரன் பாரதி புத்திரன் காந்தி புத்திரன் தேவி புத்திரன் கேரள புத்திரன் ஆந்திர புத்திரன் கர்நாடக புத்திரன் வேளாள புத்திரன் வன்னிய புத்திரன் முக்குல புத்திரன் வட தமிழக புத்திரன் மதுரை மண்ணின் புத்திரன் கொங்கு மண்டல புத்திரன் இவற்றுள் ஒன்றிர்க்குப் புத்திரனாய் இல்லாவிடில் எழுத்துலகில் பிழைத்தலரிதென்ற காரணம் பற்றி கோபால்சாமி புத்திரன் இன்று முதல் மிருக புத்திரன் ஆகிறேன், சகலரும் அறிக. என் சொல் கேளீர், நீங்களும் கோடிட்ட இடம் நிரப்பிப் பெயருக்கு முன் சேர்ப்பீர்! அண்ணாமலைன்னு எனக்கொரு நண்பேன். அவனுக்கு செல்போன்ல பேசுறதுன்னாலே அலர்ஜி. போன்ல கூப்பிடுற எல்லார் கிட்டயும் “எதா இருந்தாலும் லெட்டர் எழுதுங்க”ன்னு சொல்றதுக்கு மட்டும் ஒரு 1100 வச்சிருக்கான். சமீபத்துல கார் எடுக்கறதுக்கு எடைஞ்சலா இருந்த அண்ணாமலையோட பைக்க நகத்தச் சொல்றதுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்...

Saturday, 13 November 2010

உஷாராணி சாம்பவி இன்னும் சில மர்மங்கள்

ஆந்திர மாநிலத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி குழந்தை சாம்பவியைப் பற்றியதுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். இளம் சாமியாரிணியாக வலம் வந்த சாம்பவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள். குழந்தை சாம்பவியின் காப்பாளராக சொல்லப்பட்டு வந்தவர்தான் உஷாராணி. இவர் பால சந்யாசினி சாம்பவி கலந்து கொள்ளுகிற நிகழ்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் தட்சணையாக வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப் படுகிறது. சாம்பவியின் குழந்தைப் பருவத்தை காப்பாளர் உஷாராணி தனது பணத்தாசைக்காக வீணாக்குகிறார் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் வாதத்தை ஏற்று...

Monday, 8 November 2010

அப்பாடா ஒரு பதிவு தேத்திட்டேன்...

சென்னையில் என்னுடன் பணிபுரிந்து தற்சமயம் ஓஸ்ட்ரேலியாவில் பணிபுரிகிற அண்ணன் ஒருவர் எனது பதிவுகளை மிகவும் ரசித்துப் படிக்கிறவர். குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். கடைசியா எழுதுன ரத்த சரித்திரம் பதிவைப் பாத்துட்டு வயலன்ஸ் கம்மி பண்ண சொல்லி அறிவுரை சொல்லிருந்தார். ஏன் ரொம்ப நாளா எழுதலைன்னும் கேட்டார்? அடுத்த பதிவு இன்னும் அஞ்சு நாளைக்குள்ள வரனும்னு டெட்லைன் வேற குடுத்துட்டார். டெட்லைண் குடுத்தா அப்படியே எழுதிக் கிழிச்சுட்டு தானே நாம வேற வேலை பாப்போம். குடுத்து இன்னையோட பதிமூணு நாளாச்சு. மதிச்சு போனெல்லாம் பண்ணிருக்காரே அதுக்காச்சும் எழுதனுமேன்னு யோசிச்சப்பவே ரொம்ப மலைப்பா இருந்துச்சு. எத...
Page 1 of 1412345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan