ஜக்கி வாசுதேவ் - கர்னாடக மாநிலத்தில் பிறந்துவளர்ந்த ஜக்கி வாசுதேவ், ஈஷா யோக மையம் என்ற தனது ஆசிரமத்தை நடத்தி வருவது வெள்ளியங்கிரி மலையில். இவரும் நித்தி மாதிரியே கவர்ச்சியான தலைப்புகள்ல கட்டுரைகள் எழுதுனவர். உதாரணம், அத்தனைக்கும் ஆசைப்படு. யோகா கத்துக் குடுக்கறது, பிரசங்கம் நடத்துறது இது மாதிரி வேலைகளோட மானசரோவர் டூர் கூட்டிட்டுப் போற டூரிஸ்ட் கம்பெனி வேலையும் சைட்ல ஓடிக்கிட்டிருக்கு.
இவரது ஆசிரமத்திலும் மிக அதிகமாக சம்பாதிக்கக் கூடிய பலர் முழுநேர சிஷ்யர்களாக இருக்கிறார்கள். சாமியார்களுக்குரிய ஆடைகளை மட்டுமே இவர்கள் அணிய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் அவர்களது வருமானம் பாதிக்கப்படும் என்பதனாலோ என்னவோ அதைக் கட்டாயப் படுத்துவதில்லை. இந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜக்கியும் பல வண்ண உடைகளில் பத்திரிகைகளுக்குப் போஸ் கொடுத்து வருகிறார்.
ஊர் ஊருக்கு கேம்ப் அடிச்சி யோகா க்ளாஸ் நடத்தி நல்லாவே கல்லா கட்டுறாங்க. வாழ்த்துக்கள். இவரது மனைவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரிடமிருந்தும் கேட்டறிய நேர்ந்தது. மேலும், குமுதத்தில் எழுதிய நித்தியா இப்போது கம்பியை எண்ணக் காத்திருக்கிறார். தற்போது ஜக்கி குமுதத்தில் எழுதவில்லை என்றாலும், யாரோ “ப்ரியா கல்யாணராமன்” என்பவர் இவரைப் பற்றி எழுதி வருகிறார். குமுதத்தின் ராசி இவரையும் விட்டுவைக்காமல் அதி விரைவில் அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்ப்போமாக.
அடுத்ததாக வாழும் கலை ரவிஷங்கர். இவர் கொஞ்சம் அல்பத்தனமான விளம்பரப் பிரியரோ என்று நினைக்குமளவுக்கு சமயங்களில் இவரைப் பற்றிய விளம்பரங்கள் அடிக்கடி ஓவர் டோசாகிறது. பெயருக்கு முன்னால் இரண்டு முறை மட்டும் ஸ்ரீ ஸ்ரீ என்று போட்டுக் கொள்வதால் நல்ல வேளை இரண்டோடு விட்டாரெ என்று பலரும் நிம்மதி அடைகின்றனர் (மைல் நீளத்துக்கு இம்போசிஷன் மாதிரு எழுத விட்டா என்ன செய்யுறது). இவரது அமைப்பின் துணை அமைப்பாக ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மையம் செயல்பட்டு வருகிறதாம். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. இவரது மறுபக்கம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
இப்போதைக்கு குமுதத்தில் முகத்தைக் காட்டி வருவதாலும், கவர்ச்சியான தலைப்புகளில் எழுதி வருவதாலும், மனைவியின் கொலை வழக்கு நடந்து வருவதாலும் ஜக்கி முன்னிலையில் இருக்கிறார். என்றாலும் கடைசிக் கட்ட நிலவரங்கள் மாறுதலுக்குட்பட்டவையாக இருப்பதால் வாழும் கலை ரவிஷங்கர் கம்பி எண்ணவும் வாய்ப்புகள் உருவாகலாம். நாம் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக (எழுதிய நான் உள்பட) இவர்கள் இருவரையும் தவிர்த்த வேறொருவர் உள்ளே போனாலும் போகலாம். தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்!
3/11/2010 12:26:00 pm
Unknown

