இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 27 December 2010

இரங்கல்

நண்பர் மதிமாறன் அவர்களுடைய தாயார் காலமான செய்தியை அவருடைய வலைத்தளத்தின் பின்னூட்டம் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைக்குச் செல்லும் போது பெரும்பாலும், மதிமாறன் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் அவருடைய இல்லத்திற்கு இதுவரை சென்றதில்லை. இரங்கல் தெரிவிக்க அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரும் இதையே தெரிவித்தார். அவருடைய தாயார் இருந்த காலத்தில் அவர் வீட்டுக்குச் சென்று வர இயலாமல் போனது குறித்துப் பெரிதும் வருந்துகிறேன். புற்றுநோய் பாதிப்புக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவர் கடந்த திங்களன்று [27/12/2010] வலிகளிலிருந்து விடுபட்டு இயற்கை எய்தினார். ஒருவரின் இருப்பைவிட அவருடைய இழப்பு ஏற்படுத்துகிற வெறுமை தாங்கிக் கொள்ள முடியாதது. ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் சொன்னாலும் எதைக் கொண்டும் இந்த இழப்பை ஈடு செய்து விட முடியாது....

Monday, 29 November 2010

குமுதம் எல்லாம் நம்மள... ஹி ஹி

நெட்டில் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே நிறைய சைட்டுகள் இருக்கிறதாமே? - ராஜிராதா, பெங்களூர்ஒருவர் மீது ஒருவர் அல்ல, ஒருவர் மீது மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிறைய சைட்டுகள் இருக்கின்றன. அவர் தமிழக முதல்வர். சாலையில் நார் மீதாவது காகம் எச்சம் போட்டுவிட்டால் கூட “என்ன ஆட்சி இது. காகம் எச்சம் போடுகிறது” என்று எரிந்து விழுகிறார்கள். [அரசு பதில்கள், குமுதம் 24.11.2010]அடிச்சான் பாருய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! வலையுலகம் குமுதத்தை விமர்சனம் செய்த காலமெல்லாம் போய் குமுதம் வலையுலகைக் கேலி செய்யிற நெலைமை வந்திருச்சு பாருங்க. அதோட சேத்து முதலமைச்சருக்குப் பொன்னாடையும் போத்திருச்சுங்களே, பண்ணாடைங்க. கொஞ்ச நாள் முந்தி குமுதத்துல ஒரு காக்கா தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மேலயே எச்சம் போட்டுக்கிட்டிருந்துச்சு. அந்த எச்ச காக்கா இப்போ கல்கில எழுதுது. இதையெல்லாம் வசதியா மறந்துடுறானுங்க....

Thursday, 25 November 2010

ரெட்டி போய் செட்டி, செட்டி போய் மறுபடியும் ரெட்டி

ஆந்திராவில் ஒரு ச்சீ... த்தூ... ஜாதி பாலிடிக்ஸ் ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஒய்.எஸ்.ஆர். உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஒய். எஸ். ஆர்.  அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதி ரோசையாவுக்கு முதல்வர் பதவியைத் தந்தது காங்கிரஸ் தலைமை. பதவியேற்ற நாள் முதல் இவர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. 2009ம் ஆண்டின் இறுதியில் தெலங்கானா தனி மாநிலம் அமைய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை இவர் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. வெகு சமீபத்தில் இவரது உடல்நிலை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு ஸ்திரமற்ற...

Monday, 22 November 2010

ஏமீ... ஏமேமீ... [ரசித்த ட்விட்டுகள்]

டிபிசிடி: நான் தங்க[பாலு திமுகவின் காங்கிரசுப் பிரிவுத் தலைவர் என்றல்லவா நினைத்திருந்தேன்..மாத்திட்டாங்களா..? ராஜன் ஆல் இன் ஆல்: மனைவியின் தோழிகள் அண்ணா என்றழைக்கையில், உலக வாழ்வின்மீது சலிப்புத் தட்டுவதை தவிர்க்கவே முடியவில்லை! # ஸோ ஸேட்! குசும்பு ஒன்லி: ஓபாமா இந்தியா வந்த விதம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி உங்கள் சன் டீவியில். லதானந்த்: குங்குமத்தில என்னுடைய தொடர் கட்டுரை வந்துகிட்டிருக்குது. படிச்சு அபிப்ராயம் சொன்னா தெக்க தெரியற தென்னந்தோப்பு உங்களுக்கே! சங்’கவி’: உன் வீட்டு ரோஜா மொட்டு மலரவே இல்லையென குழம்பாதே. மலர்தான் உன்னை முத்தமிட எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது! உமா ருத்ரன்: வாட்டர் கேட்? ஆமாம் மழைத்தண்ணீர் வீட்டு கேட் தாண்டி வந்து விட்டது. அதுக்கென்ன இப்ப? கேபிள் சங்கர்: வாழ்க்கைங்கிறது... மெகா சீரியல் போல எதுக்கு டி.ஆர்.பி அதிகமா இருக்கோ அத்தோட ஓடுறதுதான் நல்லது. வால்பையன்:...

Monday, 15 November 2010

மிருக புத்திரன் கவிதைகள் - பகுதி 1 [15/11/210]

________________ (டேஷ்) புத்திரன் அக்னி புத்திரன் பாரதி புத்திரன் காந்தி புத்திரன் தேவி புத்திரன் கேரள புத்திரன் ஆந்திர புத்திரன் கர்நாடக புத்திரன் வேளாள புத்திரன் வன்னிய புத்திரன் முக்குல புத்திரன் வட தமிழக புத்திரன் மதுரை மண்ணின் புத்திரன் கொங்கு மண்டல புத்திரன் இவற்றுள் ஒன்றிர்க்குப் புத்திரனாய் இல்லாவிடில் எழுத்துலகில் பிழைத்தலரிதென்ற காரணம் பற்றி கோபால்சாமி புத்திரன் இன்று முதல் மிருக புத்திரன் ஆகிறேன், சகலரும் அறிக. என் சொல் கேளீர், நீங்களும் கோடிட்ட இடம் நிரப்பிப் பெயருக்கு முன் சேர்ப்பீர்! அண்ணாமலைன்னு எனக்கொரு நண்பேன். அவனுக்கு செல்போன்ல பேசுறதுன்னாலே அலர்ஜி. போன்ல கூப்பிடுற எல்லார் கிட்டயும் “எதா இருந்தாலும் லெட்டர் எழுதுங்க”ன்னு சொல்றதுக்கு மட்டும் ஒரு 1100 வச்சிருக்கான். சமீபத்துல கார் எடுக்கறதுக்கு எடைஞ்சலா இருந்த அண்ணாமலையோட பைக்க நகத்தச் சொல்றதுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்...

Saturday, 13 November 2010

உஷாராணி சாம்பவி இன்னும் சில மர்மங்கள்

ஆந்திர மாநிலத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி குழந்தை சாம்பவியைப் பற்றியதுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். இளம் சாமியாரிணியாக வலம் வந்த சாம்பவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள். குழந்தை சாம்பவியின் காப்பாளராக சொல்லப்பட்டு வந்தவர்தான் உஷாராணி. இவர் பால சந்யாசினி சாம்பவி கலந்து கொள்ளுகிற நிகழ்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் தட்சணையாக வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப் படுகிறது. சாம்பவியின் குழந்தைப் பருவத்தை காப்பாளர் உஷாராணி தனது பணத்தாசைக்காக வீணாக்குகிறார் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் வாதத்தை ஏற்று...

Monday, 8 November 2010

அப்பாடா ஒரு பதிவு தேத்திட்டேன்...

சென்னையில் என்னுடன் பணிபுரிந்து தற்சமயம் ஓஸ்ட்ரேலியாவில் பணிபுரிகிற அண்ணன் ஒருவர் எனது பதிவுகளை மிகவும் ரசித்துப் படிக்கிறவர். குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். கடைசியா எழுதுன ரத்த சரித்திரம் பதிவைப் பாத்துட்டு வயலன்ஸ் கம்மி பண்ண சொல்லி அறிவுரை சொல்லிருந்தார். ஏன் ரொம்ப நாளா எழுதலைன்னும் கேட்டார்? அடுத்த பதிவு இன்னும் அஞ்சு நாளைக்குள்ள வரனும்னு டெட்லைன் வேற குடுத்துட்டார். டெட்லைண் குடுத்தா அப்படியே எழுதிக் கிழிச்சுட்டு தானே நாம வேற வேலை பாப்போம். குடுத்து இன்னையோட பதிமூணு நாளாச்சு. மதிச்சு போனெல்லாம் பண்ணிருக்காரே அதுக்காச்சும் எழுதனுமேன்னு யோசிச்சப்பவே ரொம்ப மலைப்பா இருந்துச்சு. எத...

Monday, 25 October 2010

ரக்த சரித்ரா - பழி வாங்குதல் பரிசுத்தமான உணர்வு

பரித்தாள ரவி இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் “ரக்த சரித்ரா” திரைப்படத்திற்கு ஆந்திர மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரித்தாள ரவி, ஒபுல் ரெட்டி, மற்றும் சூரி ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை. இவர்களில் பரித்தாள ரவி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த தாதா. பிற்காலத்தில் ஆந்திர அரசியலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஒபுல்ரெட்டி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு தாதா. ஓபுல்ரெட்டியின் தூரத்து உறவினர் மாதல்லசெருவு சூர்யநாராயணா எனப்படும் சூரி. இவர்களில் பரித்தாள ரவியாக இந்தி நடிகர் விவேக் ஓபராயும், சூரியாக நடிகர் சூர்யாவும் நடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரித்தாள ரவி “ப்ரதாப்...

Sunday, 17 October 2010

ஏமண்ட்டிவி ஏமண்ட்டிவி...

...

Wednesday, 15 September 2010

பதிவர்கள் சன் பிக்சர்சிடம் கற்க வேண்டிய பாடங்கள்

பாடம் 1: உங்களிடம் சரக்கு இருக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் பத்து பதிவுகளை எழுதி வலையேற்றக் கூடாது. சன் பிக்சர்ஸ் எப்போதும் ஒரு படம் வெளிவந்து சில நாட்கள் கழித்துத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும். அதே மாடலை நீங்களும் பின்பற்ற வேண்டும். பாடம் 2: நீங்கள் வழக்கமாக வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ பதிவு எழுதுபவர் என்றால் முறை வைத்து நீங்கள் எழுதுகிற நாளில் எழுதிவிடுவது நல்லது. முந்தைய பதிவுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதற்காக அடுத்த பதிவை வெளியிடுவதைத் தாமதப் படுத்தக் கூடாது. சன் பிக்சர்சின் புதிய படம் தயாராகிவிட்டால் முந்தைய படத்தைத் தூக்கிவிட்டுக் கூட புதிய படத்தை வெளியிடுவது இங்கே குறிப்பிடத் தக்கது. பாடம் 3: செலவு பண்ணத் தயங்கக் கூடாது. சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய செலவு பண்ணுகிறார்கள். அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் செலவு...

Saturday, 11 September 2010

தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்

பின் குறிப்பு: இது மட்டும் நடந்துவிட்டால் தமிழக அரசியல் உலகத்துக்கே வழிகாட்டிய பெருமை, தமிழ்ப் பதிவர்களையே சாரும். படத்தின் மீது அழுத்தினால் பெரிதாக்கிப் பார்க்கலா...

Monday, 26 July 2010

குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம்

இது கற்பனை... கற்பனை... கற்பனையைத் தவிர வேறில்லை. எதிர்காலத்தில் இப்படி நடந்தால் அதற்குக் கம்பேனி பொறுப்பாக...

Monday, 19 July 2010

ச்சேட்... [21-07-2010]

ஜி-டாக் லாகின் செய்த உடன் ghostblogger என்ற ஐடியிலிருந்து ச்சேட்டில் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு நட்புக் கோரிக்கை. இணைத்தேன். ஓரிரு நிமிடங்களில்  கோஸ்ட் ப்ளாகர் என்ற பெயருடன் ஒரு விண்டோ திறந்தது. எனக்கும் அந்த கோஸ்ட் ப்ளாகருக்கும் நிகழ்ந்த உரையாடல் கீழே. கோஸ்ட் பிளாகர்: இணைத்தமைக்கு நன்றி வி.கோ: நன்றி. உங்க ப்ளாக் லிங்க் குடுங்களேன். படிச்சிப் பாத்துட்டு கமெண்ட் போடுறேன். கோஸ்ட்: எனக்குன்னு சொந்தமா ப்ளாக் எல்லாம் கிடையாதுங்க. வி.கோ: அப்புறம் ஏங்க கோஸ்ட் ப்ளாகர்னு பேர் வச்சிருக்கீங்க? கோஸ்ட்: சார், கோஸ்ட் ரைட்டர் கேள்விப்பட்டதில்லையா!!! வி.கோ: ம்ம்ம், மத்தவங்களுக்காக இவுங்க கதை, கட்டுரையெல்லாம் எழுதிக் குடுப்பாங்க கோஸ்ட்: அதேதான். நானும் மத்தவங்களுக்காக ப்ளாக் போஸ்ட் எழுதிக் குடுப்பேன். அத அவுங்க ப்ளாகுல அவுங்களே எழுதுனதா போட்டுக்குவாங்க. வி.கோ: நல்லா இருக்குதே இந்த அப்ரோச் கோஸ்ட்:...

Saturday, 17 July 2010

தெலங்கானா - மாவட்ட வாரியான வரைபடக் கோப்புகள்

பெரிது மற்றும் சிறிது படுத்தக் கூடிய கோடுகளால் ஆன (வெக்டர்) தெலங்கானா வரைபடங்களைத் தயாரித்துள்ளேன். தெலங்கானா ஆர்வலர்கள், பதிவர்கள், பதிப்பாளர்கள், மாணவர்கள், சிறுபத்திரிகை நடத்துவோர் மற்றும் அச்சகத்தினர் ஆகியோரின் பயன்பாட்டுக்காக இவ்வரைபடங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். படங்களைப் பயன்படுத்த மேற்கூறியவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. படங்களைப் பயன்படுத்திக் கொள்வோர் என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. எங்களுடைய இன்ன படைப்பில் உங்கள் படங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தகவல் தெரிவித்தால் அதனைத் வாங்கிப் படிக்க, சேகரித்து வைக்க ஏதுவாகும். வணிக ரீதியில் வெளிவரும் நாளேடுகள்,...

Saturday, 10 July 2010

பால் இங்க்கா மணி - கெலுபு எவரிகி

வழக்கமாக இரவு உணவின் போது துணைக்கு எவராவது இருந்தால் தொலைக்காட்சியைக் கவனிக்க மாட்டேன். இன்று தனியாக உணவு உண்ண வேண்டிய நிலையிலிருந்ததால் தொலைக்காட்சியைக் கவனித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். தெலுங்கு செய்தி அலைவரிசை ஒன்றில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் பற்றிய ஆரூடங்கள் குறித்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த பால் என்கிற கடல்வாழ் உயிரியையும், சிங்கப்பூரைச் சேர்ந்த மணி என்கிற ஜோதிடக் கிளியைக் குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஜெர்மனியில் உள்ள கடல் உயிர் அருங்காட்சியகம் ஒன்றின் பராமரிப்பில் இருக்கிறது பால் என்கிற ஆக்டோபஸ். இதுவரை ஆறு அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகளையும் துல்லியமாகக் கூறியுள்ளது. கடைசியாக ஜெர்மனி தோற்றுப் போகும் என்பதைக் கணித்துச் சொன்ன பிறகு பாலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தீவிர ஜெர்மனி கால்பந்தாட்ட ரசிகர்கள் “பாலை வறுத்து சாப்பிட...

Monday, 5 July 2010

”குடி” மரியாதை

வார இறுதி நாட்களில் சரக்கடிப்பதும், சரக்கடித்த பிறகு பொழுது போகாமல் இணையத்தில் உலாவுவதும் சகஜம் தான் என்றாலும், அவ்வாறான நேரத்தில் செய்யக் கூடாத பத்து விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. சுயநினைவில் இல்லாத போது செய்தவை சுயநினைவுக்கு வந்த பிறகு உங்களைத் துன்புறுத்தக் கூடாதல்லவா? 1. நீங்கள் சரக்கடித்த பிறகு கட்டுப்பாட்டுடன் இருப்பதில் வீராதி வீரராக அல்லது சூராதி சூரராக இருந்தாலும் பணியிடத்திற்குத் தொடர்புடைய மின்னஞ்சல்களையோ இணைய உரையாடல்களையோ தவிர்ப்பது நல்லது. 2. வார இறுதிப் போதை வேளையில் இணைய தொடர்பிலிருக்கக் கூடிய நண்பர்களிடம் உரையாடாமல் இருப்பதும் நலம். அப்படியே உரையாட நேர்ந்தாலும் எந்த விதமான வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் உங்களைச் சந்திக்கிறேன் என்று நீங்கள் உறுதியளித்தது உங்களுக்கே நினைவிலில்லாமல் போகலாம். 3. சரக்கு போதையில் இருக்கும் போது உங்கள் மின்னஞ்சல்...

Thursday, 1 July 2010

ஒரு வேண்டுகோள்

டியர் ”பீ”ரு, உங்கள் “வாரெ வா” போஸ்ட்டைப் படித்தேன். அதில் ரஞ்சிதாவுக்கு நீங்கள் சொல்லியிருந்த தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனெனில் நானும் நித்தியால் ஏமாந்தவன். என்ன செலவானாலும் பரவாயில்லை, இதை செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தேங்க்ஸ் “பீ”ரு. யூ ஆர் த அல்மைட்டி ஆஃப் மை யூனிவர்ஸ். எச்சகலை, எடின்பர்க் எடின்பர்க் எச்சக்கலை, பொதுவில் இந்த மாதிரி கடிதங்களை நான் எனது மின்னஞ்சல் பெட்டியிலிருந்து அழித்துவிடுவேன். ஆறு நாளாக எதுவும் எழுதாததாலும், இன்றைக்கும் எழுத எந்த விஷயமும் கிடைக்காததாலும் உங்கள் கடிதத்தைப் பிரசூரிக்க வேண்டியதாகிவிட்டது. தமிழ்ச் சூழலில் இருக்கக் கூடிய ஆகப் பெரிய அவலமாக உங்கள் கடிதத்தைத் தான் சொல்ல...

Monday, 28 June 2010

சென்னைத் தமிழ் - சில சிந்தனைகள்

சமீபத்தில் குமுதம் நாளேடு முதலமைச்சரைப் பேட்டி கண்டு வெளியிட்டது. அதிலே முதலமைச்சரிடம் ஒரு கேள்வி. கேள்வி: அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா? பதில்: தமிழ்த் தாயின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை!சென்னைத் தமிழர்களின் பேச்சு வழக்கு முதல்வருக்கு விரும்பத் தகாததாக இருக்கலாம். ஆனாலும் அது தமிழ்த் தாயின் (எனக்குத் தமிழ்த் தாய் என்ற கருத்துருவாக்கமே ஏற்புடையதல்ல) முகத்தில் குத்தப்பட்ட கரும்புள்ளி செம்புள்ளி என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. [இதைக் குறித்த எனது கருத்துச் சுருக்கத்தை இறுதிப் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.] காலம் காலமாக வேறு எந்த வட்டார வழக்கையும் விட அதிகமாகப் பழிக்கப்படுவது சென்னைத் தமிழாகத் தான் இருந்துவருகிறது. கொங்கு வட்டாரத் தமிழோ அல்லது திருநெல்வேலி, மதுரை, தஞ்சை வட்டாரத் தமிழோ இந்த அளவுக்கு விமர்சனத்துக்கு...

Monday, 21 June 2010

வன்புணர்வைத் தடுக்கும் பாதுகாப்பு சாதனம்...

தென்னாப்பிரிக்க மருத்துவ்ர் சோனெட் ஈயர்ஸ் (Sonnet Ehlers) பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார். இது வேண்டாத கர்பத்தையோ எய்ட்சையோ தடுக்கிற பாதுகாப்பு சாதனமல்ல. அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதைக் குறித்து சோனெட் அவர்கள் கூறுகையில்: ”நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வன்புணர்வுக்காளான ஒரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. கண்களில் ஒளியிழந்து சுவாசிக்கும் பிணம் போல் கிடந்தாள். மிகுந்த சிரமத்துடன் பேசினாள். ”எனக்கு மட்டும் பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால்...” வெறும் இருபது வயது மருத்துவ ஆராய்சியாளரான என்னால் என்ன செய்துவிட முடியும். உன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உறுதி மட்டும்...

Monday, 14 June 2010

என் உயிரினும் மேலான கத்திரிக்காயே...

உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, கத்திரிக்காயே. கால் நூற்றாண்டுக்கும் மேலாக என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு அற்புதமான தோழரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்தான் கத்திரிக்காய். சரியாகப் படிக்காமல் நான் என் அப்பாவிடம் அடிபட்டதை விட, மகனோ மகளோ காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட பெற்றோரிடம் அதிகம் அடிபட்டவர் என் உடன்பிறப்பு. அவர்தான் கத்திரிக்காய். அவரை விரும்பாதவர்களும் கிடையாது, அவரைப் பழிக்காதவர்களும் கிடையாது. இந்த விசித்திரமான நிலை வேறு “யாருடைய” நண்பருக்கும் ஏற்பட்டிருக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும், அங்கங்கே தடித்துப் போகும்  என்ற இரு பெரும் குற்றச் சாட்டுகள் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. என் நேரடி அனுபவத்திலிருந்தே இவை இரண்டும் பொய் என்று சொல்ல முடியும். நான் சுமாராக ஐந்து வயதிலிருந்து கத்திரிக்காய் சாப்பிட்டு வருகிறேன்....

Saturday, 15 May 2010

ச்சேட்... [12/05/2010]

விஜய்கோபால்சாமி – ஸ்டேட்டஸ்: அவைலபில்; மெசேஜ்: ஒரையாட வாங்க, ஓரியாட வராதீங்க  விஜய்கோபால்சாமி: சார், ஆன்லைன்ல இருக்கீங்களா?  சோர்ஸ்: இருக்கேன் சொல்லுங்க…  விஜய்கோபால்சாமி: நானும் மூணு வருஷமா ப்ளாகு எழுதுறேன். எனக்கு பரபரப்பான செய்திகள் கொஞ்சம் வேணும். உங்களக் கேட்ட வேலை சுலபமா முடியும்னு சொன்னாங்க.  சோர்ஸ்: இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. நான் குடுக்குற அக்கவுண்ட் நம்பர்ல நான் சொல்ற அமௌண்ட்ட போட்டுடுங்க. உங்களுக்கு வேண்டிய நியூச அடுத்த நிமிஷமே ச்சேட்ல சொல்றேன்… விஜய்கோபால்சாமி: ஓக்கே சார். அக்கவுண்ட் நம்பர், பிராஞ்ச் கோட், பேர், எல்லாம் சொல்லுங்க சார்.  சோர்ஸ்: உன் இன்பாக்ஸ்ல போய் பாரு. நீ கேட்ட டீட்டெய்ல்ஸ் எல்லாம் இருக்கும். விஜய்கோபால்சாமி: சரி சார். டிரான்ஸ்பர் பண்ணிட்டு மறுபடியும் வற்றேன்.  சோர்ஸ்: சீக்கிரம் வா... விஜய்கோபால்சாமி: ஆகட்டும் சார்  [ஒரு...

Monday, 10 May 2010

தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? என் அனுபவம்(ங்கள்)!!

வினவு தளத்தில் வந்திருந்த இக்கட்டுரையும் அழைப்பும் பெரிதும் ஈர்த்ததால் நானும் அதே தலைப்பில் எழுதுகிறேன். இது தொடர்பிலான செய்திகளை நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து தொடங்குகிறேன். சில பல உள்குத்துகளால் ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் ஃபெயிலாக்கப்பட்டு மனமுடைந்து திரிந்த நேரம் அது. அதே ஒன்பதாம் வகுப்பில் கணக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் அறிவுரையால் ஒரு டுட்டோரியலில் சேர்க்கப்பட்டு ஒரு வழியாக பத்தாம் வகுப்பை முடித்தேன். [மறுபடியும் என் முகத்திலெல்லாம் விழிக்க வேண்டுமா என்ற சலிப்பில் கூட இப்படி ஒரு ஆலோசணையை வழங்கியிருக்கலாம். எவர் கண்டார்?] ஆண்டு முழுமைக்கும் சேர்த்து பொதுத் தேர்வுகளில் வந்து சேர்ந்தது இம்சை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் காட்டப்படும் சலுகைகளுக்கும், தனித் தேர்வர்களிடம் காட்டப்படும் கெடுபிடிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கும். பள்ளி...

Sunday, 25 April 2010

கேள்வியுடன் கொல்லான்...

நண்பர் கொல்லான் அவர்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் கொடுத்துள்ளேன். மூண்றாவது கேள்வியப் பாத்த பிறகு இவரு கொல்லானா கொலைவெறியானான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு. நண்பர் கொல்லான் தனது வலைப்பூவில் புதிதாகக் கேள்வி பதில் தொடங்கியிருக்கிறார். அதுக்கு நான் தான் ஊக்கின்னு வேற சொல்லிருக்கறாரு. எத்தனை பாவத்துக்கு நான் ஆளாகறது சொல்லுங்க? அது பற்றி அறிவிப்புப் பதிவும் போட்டிருக்கிறார். இனி வருவது அவர் அனுப்பிய கேள்விகளும் என் பதில்களும். ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க? இதுவும் “காக்கா காக்கான்னு கத்துறதால அதக் காக்கான்னு கூப்பிடுறாங்களா, இல்லை அதக் காக்கான்னு கூப்பிடுறதால அது காக்கான்னு கத்துதா”ங்கற மாதிரிதான். இருந்தாலும் உங்க கேள்விக்கு கொஞ்சம் சரியா பதில் சொல்ல முயற்சி பண்றேன். தற்கொலை பண்ணிக்கப் போறவன் கடைக்காரன்கிட்ட விஷம் கேக்கும்போது “நல்ல விஷமா குடுப்பா, குடிச்சோன்ன உயிர் போகற மாதிரி”...

Monday, 19 April 2010

கேள்வியுடன் லதானந்த்...

1. அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா? கிடைக்காமல் திண்டாடியதை விட கிடைத்துத் திண்டாடிய அனுபவம் சுவையானது. கதவு மேல எழுதிருக்கறதையாச்சும் படிச்சுட்டுப் போயிருக்கனும். இல்லையா எழுத்துக்கு மேல இருந்த படத்தையாவது பாத்துட்டுப் போயிருக்கனும். ரெண்டையுமே பண்ணாததால கடைசியா ப்ளம்பர்னு சொல்லித் தப்பிச்சேன். 2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்? வெறுத்து ஒதுக்கியவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஓரளவு முன்னேறியிருக்கிறேன் என்றால் அது சில நண்பர்கள் மீதான பொறாமையினால்தான். நட்பும் தொடர வேண்டும் என்ற காரணத்தால் பதிலை இந்த அளவில் நிறைவு செய்கிறேன். 3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது? எதிர்பார்த்தே எந்த அனுபவமும் கிடைக்கலை... எதிர்பாக்கலைன்னா மட்டும் கெடைச்சுடுமாக்கும்... :( 4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?அந்த அனுபவத்தைத்தான்...

Tuesday, 6 April 2010

ச்சேட்...

விஜய்கோபால்சாமி: மச்சி எப்டிடா கீறே.... அப்பாவி ஆனந்து: சோக்கா கீறேண்டா மச்சி... நாம பேசியே ரொம்ப நாளாயிட்ச்சுரா... விஜய்கோபால்சாமி: ஐபிஎம் பொண்ணக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணதுலேந்து நீ என்ன மதிக்கிறதே இல்லைடா... அப்பாவி ஆனந்து: அப்டியெல்லாம் சொல்லாத மச்சி... மனசுக்கு சங்கடமா கீது... விஜய்கோபால்சாமி: வேற எப்படி சொல்றதாம்... அப்பாவி ஆனந்து: அத்த வுடு மச்சி, சானியாவுக்குக் கல்யாணமாமே... நீ ஐட்ராபட்ல இருந்துமா இப்படியெல்லாம் நடக்குது... விஜய்கோபால்சாமி: என்ன என்னடா பண்ணச் சொல்றே? அப்பாவி ஆனந்து: மொதோ எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனதே உன்னாலதான்னு நான் ரொம்ப பெருசா கற்பனையெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்? அப்போ நீயும் டம்மி பீசுதானா? விஜய்கோபால்சாமி: அய்யோ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்திடுறானுங்களே... அப்பாவி ஆனந்து: மச்சான்......
Page 1 of 1412345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan