தில்லானா மோகனாம்பாள் படத்த இப்போ ரீமேக் பண்ணா, யார் யார் நடிச்சா பொருத்தமா இருக்கும்?
ஏம்ப்பா, நீ இருபத்தஞ்சு வருஷமா கோமால இருந்தியா? ஏற்கெனவே கங்கைஅமரனும் சுரேஷ்கிருஷ்னாவும் ரீமேக் பண்ணிட்டாங்கப்பா. முடிஞ்சா தி.மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமம் மூணு படத்தையும் அடுத்தடுத்து டிவிடி ப்ளேயர்ல ஓடவிட்டுப் பாரு.
சானியா ரெண்டாந்தாரமா வாக்கப்படப் போறாங்களாமே? என்ன கொடுமை இது?
கல்யாணம் பண்ற வகையில சானியா மாலிக்குக்கு ரெண்டாவது. நிச்சயம் பண்ணுன வகையில மாலிக் சானியாவுக்கு ரெண்டாவது. ரெண்டுக்கு ரெண்டு சரியாப் போச்சு... விடுங்கப்பா இதையெல்லாம் போய் நோண்டிக்கிட்டு.
ஐடி கம்பெனி டிரைனேஜ்ல கிலோ கிலோவா காண்டம் கிடைச்ச செய்தியெல்லாம் சமீபமா பேப்பர்கள்ள வற்றதில்லையே?
எந்தக் காலத்துலய்யா இருக்கே? அது மாதிரி விஷயங்கள் எல்லாம் இப்போ சிடில தான் வருது. இனிமே உனக்கு சிடி வாங்குற செலவும் இருக்காது. எதாவது ஒரு நியூஸ் சேனலப் போட்டுப் பாத்தாலே போதும்.
மனோகரா படத்தை யாராச்சும் ரீமிக்ஸ் பண்ண மாட்டாங்களா?
வேணாம்டா, அப்புறம் அதுக்கொரு பாராட்டு விழா நடக்கும்.
நடிகை புவனேஸ்வரி இப்போ எங்கே இருக்காங்க?
எங்க இருந்தா உனக்கென்ன? மூடிக்கிட்டு சும்மா இரு.
பிரகாஷ்ராஜ் அடுத்து ஏதாவது புத்தகம் எழுதுகிறாரா?
எழுதுன ஒன்னே போதும்டா சாமி. காதெல்லாம் ரத்தம்...
ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வருமா?
ஆண்ட்ரியாவா ரீமாவா யாரு ரொம்ப அழகுன்னு முடிவு பண்றதுக்குள்ள படமே முடிஞ்சு போச்சு. அதனால இன்னொரு பார்ட் வந்தாலும் தப்பில்லை. மறக்காம பார்த்திபன வெட்டி விட்டுருங்கடா டேய்...
[அடுத்த பகுதி உங்கள் ஆதரவைப் பொறுத்து. கேள்வி வரலேன்னா கேள்வி பதில் பகுதி போடாம இருந்துடுவேன்னு தப்புக் கணக்குப் போட்டுட வேண்டாம். யாருமே கேக்கலேன்னா நானே கேள்வி-நானே பதில்தான். மருவாதியா ஆளுக்கு கொஞ்சம் கேள்வியக் கேட்டுடுங்க.]
4/05/2010 08:57:00 pm
Unknown

