10,543வது ஆளாக இந்தப் பதிவின் தலைப்பைச் சொல்லிப் புலம்புகிற ஒருவரின் பதிவைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் பதிவு எதையாவது எழுதி வைக்க வேண்டுமே என்ற அரிப்பு நன்றாகத் தெரிகிறது. நல்ல சுவராகப் பார்த்து முதுகைத் தேய்துக் கொண்டால் நல்லது.
எனக்கு அப்பவே இந்தி கத்துக் குடுத்திருந்தா நான் இப்படி வெளி மாநிலத்தில் அல்லல் பட வேண்டியதிருக்காதே என்று புலம்புறதும், எங்கம்மா என்னைப் பெத்தப்பவே ஸ்கேட்டிங் ஷூவோட பெத்திருந்தா இன்னிய தேதிக்கு நான் ஸ்கேட்டிங்ல பெரிய ஆளாகிருப்பேன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை. அவ்வளவு அபத்தமா இருக்கு அந்தப் பதிவு.
இப்படிப் புலம்புகிறவர்கள் இன்னொன்றும் சொல்லுகிறார்கள், “இந்தி தெரிஞ்சிருந்தா தமிழ்நாடு தவிர்த்து எங்கே போனாலும் சமாளிக்கலாம்” என்று. இவுங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை செங்குன்றத்திலிருந்து 40 கி.மி.க்குப் பக்கமாகத்...
Monday, 11 April 2011
என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி...
4/11/2011 10:06:00 am
Unknown
22 comments