நாட்கள் குறைவு, இன்றே டெம்ப்ளேட்டை நிரப்பிடுவீர்...
Monday, 17 January 2011
Thursday, 6 January 2011
தெலங்கானா - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை
1/06/2011 08:27:00 pm
Unknown
7 comments
”உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் உண்மையை ஒருநாள் நேர்கொண்டே ஆக வேண்டும்.” இந்த வாக்கியத்துடன் முடிகிறது ஸ்ரீகிருஷ்னா கமிட்டியின் அறிக்கை. பிப்ரவரி 2010ல் அமைக்கப் பெற்ற இந்த ஐந்து நபர் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா தலைமை வகித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலங்கானா தனி மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது. கடந்த வியாழனன்று உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கை விபரத்தைப் படிப்பதற்காகத் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்ட போது மிக அதிகமானோர் இதே அறிக்கையைத் தரவிறக்கப் போராடிக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறும் 11 எம்பி அளவுள்ள கோப்பை தரவிறக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. என்.டி.டிவி, இந்து போன்ற பெரிய பத்திரிகைகளால் கூட அறிக்கையைத் தரவிறக்க முடியாமல் உடனடியாகச் செய்தியைக்...
Tuesday, 4 January 2011
ரக்த சரித்திரம் - III
1/04/2011 01:08:00 pm
Unknown
2 comments
மணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள்...